(Reading time: 19 - 37 minutes)

ம்ம் புரியுது தேவி சரி நீ ரொம்ப போட்டு குழப்பிக்காத நானே கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு வந்து பேசுறேன் சரியா??

நா ஒண்ணு கேக்கவா??

எதுவாயிருந்தாலும் சொல்லு தேவிம்மா..இல்ல நீங்க பட்டணத்துலலா படிச்வுக எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்..வசதிநு பாத்தாலும் உங்ககிட்ட கூட வரமுடியாது..என்னவிட எவ்ளவோ அழகான பொண்ணுங்கலா இந்த ஊருல உங்க வசதிக்கு ஏத்தமாறி இருக்காங்க உங்களுக்கு ஏன் என்ன பிடிச்சுருக்கு??

அட அட பேசமாட்டியாநு கேட்டது ஒரு தப்பா இப்போ இவ்ளோ பேசுறியே என்று சிரிக்க,,அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தவள் உங்க சிரிப்பு நல்லாயிருக்கு என்றாள் ரசித்து..அதற்கும் சிரித்தவன் சட்டென அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கைகளை தன்னோடு இணைத்துகொண்டான்..தேவி எனக்கு என் அப்பா அம்மா தான் எல்லாமே அவங்க போனப்பறம் சொந்தபந்தம் எல்லாமே காசு பணத்துக்கு தான் ஆசப் பட்டாங்களே தவிர என்மேல உண்மையான அன்பு யாருக்கும் இல்ல..அதனாலேயே இங்க வரத நா குறைச்சுகிட்டேன்..ஏதோ ஒரு தனிமை என்னை சூழ்ந்துகிறதா தோணும்..ஆனா உன்ன முதல்ல தோட்டத்துல பாத்தப்போ உன் பார்வை பேச்சு எல்லாமே அப்படி ஒரு வெகுளித்தனம் இருந்தது..உண்மையிருந்தது..அதுதான் என்னை இங்க வரவச்சுது நாகூட எவ்வளவோ யோசிச்சேன்..என் ஆசைய உன்கிட்ட சொல்லி ஒருவேளை உனக்கு என்ன பிடிக்கலனா என்ன பண்றதுநு..ஆனா நீ என்ன பாத்த ஒவ்வொரு முறையும் என்னவள்ங்கிற நினைப்புலயே எதாவாது சீண்ட தோணிச்சு..நாளுக்கு நாள் அது அதிகமாக ஒரு கட்டத்தில் கல்யாணம்நு ஒண்ணு நடந்தா உன்கூடதான்னு முடிவு பண்ணிணேன்..அப்பவும் மனசுல நினைச்சேன் ஒரு வேளை என் காதல நாசொல்லி உனக்கு விருப்பமில்லாம போச்சுன்னா அதுக்கப்பறம் எக்காரணத்தைக் கொண்டும் இந்தஊருக்கு வரக்கூடாதுநு முடிவு பண்ணிதான் என் விருப்பத்தை உன்கிட்ட சொன்னது.. இப்போ சொல்லு வேறன்ன சந்தேகம் இருக்கு??என்று திரும்ப மறுபடியும் கண்களில் நீர்கோர்க்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

இப்போதான அழாதநு சொன்னேன் மறுபடியும் ஏன் அழற தேவி??

இனி அழமாட்டேன் மாமா என கண்களை துடைத்துக் கொண்டாள்..பரவாயில்லையே மாமாநு கூப்பிடுற ம்ம் சரி நேரம் ஆச்சு தேவி நீ கிளம்பு அப்பா தேட போறாரு..நாளைக்கு பாக்கலாம் என்றவாறு அவள் வீட்டிற்கு செல்லும் வரை அவள் பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டு அவனும் வீட்டை அடைந்தான்..மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இருந்தவளுக்கு ஏனோ சிவனை பார்த்து வர தோன்ற மாலைநேரம் கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள்..தன்னவனை மனதில் நினைத்தப்படியே தெருவில் சென்று கொண்டிருந்தவளை அருகில் சைக்கிளில் வந்தவன் இடித்துவிட பாத்துபோக மாடீகளா??அப்படி என்ன அவசரம் என்றவாறே திரும்பி அவன் முகம் பார்த்தவள் சட்டென வாயை மூடிக் கொண்டாள்..அவன் இவளை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க உள்ளுக்குள் பயந்தவள் விறுவிறுவென அருகிலிருந்த வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்..அவன் பெயர் அருணாச்சலம்..சொல்லும்போதே சஹானாவின் முகத்தில் அப்படியாய் ஒரு அருவருப்பு ஆத்திரம்..காயத்ரி அவளை சமாதானப்படுத்த அவள் பேச்சைத் தொடர்ந்தாள்..அவனை கண்டாலே ஊரின் பெண்களெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வர்  இல்லாத கெட்டப்பழக்கங்களே இல்லை எனும் அளவிற்கு நல்லவன்..தூணுக்கு சேலைகட்டிவிட்டால்கூட சும்மாவிடாத அரக்கன் இரண்டு மாதங்களுக்கு முன்தன் ஆசைக்காய் ஒரு பெண்ணின் வாழ்வையே சீரழிக்க அவமானம் தாங்காத அப்பெண்ணோ தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்..ஊர் பஞ்சாயத்தில் ஒன்றுகூடி பேசி அவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க இப்படி அவ்வப்போது ஊருக்குள் வந்து வம்பு செய்வதையே வாடிக்கையாய் கொண்டிருந்தான்

வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு இன்னுமும் மூச்சு வாங்கியது..யாரு தேவிகா வா என்னாச்சு ஏன் இப்படி வேர்த்துருக்கு???-காவேரி

அக்கா ஒண்ணுமில்ல கோவிலுக்கு போலாம்நு வந்தேன் வெளில அந்த அருணாச்சலத்தை பாத்துட்டு பயந்து உள்ளே வந்துட்டேன்க்கா..

அந்த வீணாபோனவனுக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குதே..இவன்லா உயிரோடயிருந்து என்னத்த சாதிக்கப் போறான்..நீ பயப்படாத இந்தா முதல்ல தண்ணிய குடி..

அதை வாங்கிப் பருகியவள் ரொம்ப நன்றிக்கா நா போய்ட்டு வரேன்..

நா வேணா துணைக்கு வரவா தேவிகா தனியா போய்டுவியா??

பரவால்லக்கா நா பாத்து போய்க்கிறேன்..என்றவள் கோவிலுக்குச் செல்லாமல் நேரே வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

முந்தைய நாளின் பயத்திலேயே இரவு தாமதமாய் தூங்கியவள் காலை எழுந்து தயாராவதற்குள் சாமி யாருடனோ வெளியே பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க இவ்வளவு காலைவேளையிலேயே யாராய் இருக்கும் என எட்டிப் பார்த்தவளுக்கு ஒரு நொடி இதயம் நின்றுவிட்டது..கார்த்திகேயன் தான் சாமியோடு பேசிக்கொண்டிருந்தான்..தேவிம்மா யாரு வந்துருக்கா பாரு போ போய் காபி எடுத்துட்டு வா..என்ற சாமியின்குரலில் தான் இந்த உலகிற்கு வந்தவள் வேகவேகமாய் சென்று தன்னவனுக்காய் பார்த்து பார்த்து காபி போட்டு எடுத்து வந்தாள்..அதை வாங்கிக் கொண்டவன் அவளை பார்த்து கண்சிமிட்ட கடகடவென சென்று கதவின்பின் நின்றுகொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.