(Reading time: 19 - 37 minutes)

தம்பி என்ன இவ்ளோ தூரம் சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே

இல்லங்க இந்த விஷயத்தைப் பேச நா இங்க வந்தா தான் சரியா இருக்கும் அதான் நானே வந்துட்டேன்..அது வந்து..நா நேரடியா விஷயத்துக்கு வரேன் எனக்கு உங்க பொண்ணு தேவிகாவ ரொம்ப பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்றேன்..அதான் உங்ககிட்ட பொண்ணு கேட்டு வந்துருக்கேன்..

தம்பி!!!!

எனக்கு உங்க மனநிலைமை புரியுது இருந்தாலும்..

தம்பி இதெல்லாம் சரிபட்டு வருமாப்பா இந்த ஊர்ல இருக்குறவங்க என்ன சொல்லுவாங்க??தேவிகாவ யாரும் எதுவும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுப்பா..உங்களுக்குத் தெரியும்நு நினைக்குறேன் தேவிய நா தத்தெடுத்து..

ஐயா எனக்கு எல்லாமே தெரியும் எதுஎப்படி இருந்தாலும் இப்போ தேவிஉங்கபொண்ணு ஒரு அப்பாவா உங்க முடிவ நீங்க சொல்லுங்க..யாரை பத்தியும் நீங்க கவலபட வேண்டாம்..ஊர் பெரியவங்ககிட்ட நா பேசுறேன்..எல்லாருக்கும் ஒத்துகிட்டா இங்கயிருப்போம் இல்லையா படிப்பு இருக்கு எப்படியிருந்தாலும் தேவியை வச்சு காப்பத்துற சக்தி எனக்கு இருக்கு..வீட்டுக்கு பெரியவங்களா நீங்களும் எங்களோட வந்துருங்க எங்கேயாவது போய்டுவோம்..

தம்பி என அவனின் கைப்பற்றியவருக்கு பேச நா எழவில்லை..என் பொண்ணுக்காக இவ்ளோ யோசிக்குற உங்களவிட என் பொண்ண யாரு நல்லா பாத்துரப்போறா எனக்கு பரிபூரண சம்மதம்ப்பாஎன்று முடிக்க தேவி ஓடிவந்து அவர் மேல் சாய்ந்து கொண்டாள்..அனைத்தும் சுபமாய் அமைந்த திருப்தியோடு அவன் கிளம்பி வாசலுக்கு வர கோவில் அர்ச்சகர் வேகமாய் அவனிடம் வந்தார்..

என்ன பூசாரி ஐயா ஒரே பதட்டமா வரீங்க??

அது வந்துய்யா வந்து திருவிழா முடிஞ்சு ஒரு வாரம் பத்து நாள் வர சிவனுக்கும் அம்பாளுக்கும் நகை சாத்துறது வழக்கம் அதேமாதிரி தான் நேத்து அப்பா கோவிலுக்கு குடுத்த நகைகளை சாத்தினேன்..காத்தால போய் பாத்தா நகையை காணும்ங்க..என்ன பண்றதுநு புரியாம தான் ஓடி வரேன்..

என்னதிது நம்ம ஊர்ல இப்படி நடக்க வாய்ப்பேயில்லையே..எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பாங்க..அர்ச்சகரே உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகமிருக்கா???

அப்படி குறிப்பிட்டு யாரும் தெரிலங்க..அந்த பாழாபோன அருணாச்சலம்தான் இந்த வேலையெல்லாம் பண்ணுவான் அவனையும் ஊரைவிட்டு ஒதுக்கி வச்சாச்சு..வேற??

ஐயா நேத்து அந்த அருணாச்சலம் ஊருக்குள்ள வந்தான் நா பாத்தேன்..

என்ன சொல்ற தேவிகா???

ஆமா சாமி நேத்து சாயங்காலம் கோவிலுக்கு போறப்போ என்றவாறு நடந்ததை கூற,அப்போ கண்டிப்பா அந்த கடன்காரனாதான் இருக்கும் சிவ சிவா இப்போ என்ன பண்றது??

கவலபடாதீங்க பூசாரி ஐயா அவனை கண்டுபிடிச்சு நகையை காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு..

நா போய் ஊர் பஞ்சாயத்தை கூட்ட சொல்றேன் என சாமி நகர,இல்ல அதெல்லாம் வேண்டாம் பஞ்சாயைத்துலா சரி படாது நாம அவன போலீஸ்ல பிடிச்சு குடுத்துருவோம் மத்தத அவங்க பாத்துப்பாங்க..

தம்பி போலீஸ்லா எப்படி ஊர் பஞ்சாயத்தை அவமதிச்ச மாதிரி ஆகிடாதா???

அதெல்லாம் நா பேசிக்குறேன்நீங்க ஊர் பெரியவங்கள கூட்டிட்டு என் வீட்டுக்கு போய்டுங்க நா அவன இழுத்துட்டு வரேன்..

கூறியபடியே அடுத்த இரண்டு மணிநேரத்தில் நகையோடு அவனையும் இழுத்துவர பெரியவர்களிடம் பேசி அவனை போலீஸில் ஒப்படைத்தான்..அடிபட்ட மிருகமாய் அவன் உள்ளே செல்கிறான் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை பாவம்..விதியின் விளையாட்டு அது என்றால் அதை மாற்றிடவும் முடியுமோ???

ப்ரெண்ட்ஸ் FB எப்படியிருக்கு..படித்துவிட்டு கருத்துக்களை கண்டிப்பாக பதிவு பண்ணுங்க..

தொடரும்

Ninnai saranadainthen - 14

Ninnai saranadainthen - 16

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.