(Reading time: 8 - 15 minutes)

அவளுக்கு இதுவரை அவர் சொல்லிய அனைத்து விஷயங்களிலும் அவளுக்கு தேவையாக இருந்த ஒரே விஷயம்  அவளது கணவனது பெயர் அஸ்வின் என்பது  தான்..

அவர்கள் அனைவரும் தங்களை மறந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.அவளது கணவனும் தான் அவனது சிரிப்பையே தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு அவனை எதற்கு அப்படி பார்க்கிறோம் என்று தெரியவில்லை.அனைவரும் சிரித்து முடிக்க ஜானகி அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

அனைவரும் சாப்பிட சென்றனர், கவியை தவிர அவள் மட்டும் அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளுக்கு எண்ண செய்வது என்று புரியவில்லை.

அவள் அங்கேயே நிற்பதை பார்த்த அஸ்வின் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்த,அவள் அங்கேயே நிற்பதை பார்த்த ஜனார்த்தனன் நிதில்லாவிற்கு கண் ஜாடை காட்ட நிதில்லா சென்று கவியை அழைத்து வந்து தனது பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள்.

அதைப் பார்த்த அஸ்வின் “நித்தி இப்ப எதுக்கு அவளை இங்க கூப்பிட்டு வந்த மகாராணி அப்பறமா சாப்பிடமாட்டாங்கள...,அம்மாவும் அத்தையும் இன்னும் சாப்பிடாம தான இருக்காங்க..,அவங்க கூட சாப்பிட மாட்டாங்களாமா..”என்று அவன் கூற எழுந்துக் கொள்ள போன கவியை தடுத்தவர்,”டேய் பேரா..,அவ நித்தி மாதிரி சின்ன பொண்ணு தான்டா நித்தி எப்படி இந்த வீட்டுல இருக்காளோ அதே மாதிரி இருக்க இவளுக்கும் எல்லா உரிமையும் இருக்கு புரிதா..,எல்லாரும் கேட்டுக்கோங்க மலர் அந்த  வீட்டு பொண்ணா இருக்கலாம் ஆனா இப்ப அவ நம்ப வீட்டு பொண்ணு அதனால அவளை யாரும் எதுவும் சொல்லக்கூடாது,அவளுக்கு இந்த வீடுதான் இனிமே எல்லாம்..,அவ இனிமே நம்ப வீட்டு பொண்ணு..”என்று கூறிவிட்டு கவிக்கு பரிமாற சொன்னார் ஜனார்த்தனன்.

கவிக்கு அவர் அந்த நொடி இவ்வுலகில் உள்ள அனைவரைவிடவும் அவளுக்கு அவர்தான் உயர்ந்தவராக தெரிந்தார்.ஆனால் அவளுக்கு சில உண்மைகள் தெரியவரும்போது அவள் அவரை பார்த்து எண்ண சொல்வாள் என்று அவளுக்கு அப்பொழுதுத் தெரியவில்லை..

கவிக்கு சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்காமல் தடுமாறி கொண்டிருந்தது.

எப்படியோ அதை சாப்பிட்டு முடித்தாள்.சாப்பிட்டு விட்டு அனைவரும் வீட்டிற்கு முன் இருந்த தோட்டத்தில் அமர்ந்தனர்.

கவியை தனக்கு பக்கத்தில் அமரவைத்துக்கொண்டாள் நித்தி.சுகமான காற்று மேனி தீண்ட தனது கவலையெல்லாம் மறந்தாள் கவி.

அந்த சூழல் அவளது மனதில் அமைதியை விளைவித்தது.அந்த குடும்பத்தில் இருந்த அனைவரும் அமர்ந்து தனது கவலைகளை மறந்து அவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அஸ்வினிடம் எதுவோ பேசிக்கொண்டிருந்தார் ஜனார்த்தனன் தாத்தா.அதையும் கவனித்தால் கவி.ஆனால் எதையும் அவளை யோசிக்க வைக்காமல் அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள் நித்தி.

மணி 9.00யை தொட அவளது அருகில் வந்த ஜானகி,”நித்தி நீ போய் தூங்கு நான் மலருக்கு அவளோட ரூமக் காட்டிறேன்..”என்று கூறி நித்தியை அனுப்பிவிட்டு மலரின் புறம் திரும்பினார்.

“மலர் நடந்தது நடந்து முடிஞ்சிடிச்சு,இனிமே உன்னோட  வாழ்க்கை  இங்கதானு முடிவான பிறகு நீ உன்னோட வாழ்க்கைய ஆரம்பிக்குறதுதான் நல்லது.புரிதா..,அஸ்வின்தான் இனிமே உனக்கு எல்லாம் புரிதா..”என்றுக் கூறியவர். அவளை அழைத்து சென்று அவளிடம் ஒரு  புடவையை  தந்து அதைக் கட்டிக் கொண்டு வர சொன்னவர் அவளுக்கு மிதமாக ஒப்பனை செய்து மாடியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.அவளை உள்ளே போக சொல்லிவிட்டு சென்றுவிட என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள் கவி.

கவியை விட்டு விட்டு வந்த ஜானகி நேராக தனது மாமனாரிடம் சென்றார்.

“மாமா..,பாவம் மாமா அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு அஸ்வின் ரொம்பக் கோப்படுவான்,எதுக்கு மாமா இப்ப அவளை அவன் ரூம்ல தங்க  வைக்க சொன்னீங்க மாமா..”என்று அவர் தனது மனதின் குறையை தனது மாமனாரிடம் கூற,

அவரை பார்த்து சிரித்த ஜனார்த்தனன்..,”அவங்கள பிரிச்சி வச்சா எப்படிமா புரிஞ்சிப்பாங்க.., அதுக்குதான் நான் அப்படி செஞ்சேன் அவனோட தேவைகளை அவளே பாத்துக்கட்டும்...,சரிமா நீ போய் தூங்கு..”என்று கூறிவிட்டு தனது ரூமிற்கு சென்றார்.அங்கு உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்திருந்தவரின் நினைவுகள் எங்கெங்கோ சென்றது.

ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு தூங்க தயாரானார்.

அஸ்வினின் அறைக்கு முன்பு என்ன செய்வது என்று தெரியாமால் நின்றுக் கொண்டிருந்தாள் கவி.

aeom

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.