(Reading time: 10 - 20 minutes)

கமல் மாயாவுடனான தொடர்பும் மாயாவின் வீட்டில் நடக்கிற பிரச்சனைகள் எல்லாமே என் மூலமாத்தான் நிரஞ்சனாவிற்குத் தெரிய ஆரம்பித்தது. இப்போவும் என்னை கூப்பிட்டு மிரட்டுனாங்க ஸார் யாருக்குக்காக நான் இந்த வேலையை செய்தேனே அவங்களே இறந்த பிறகு எனக்கு இந்த வேலையைத் தொடர மனமில்லை அதனால தான் நிரஞ்சனா பற்றிய உண்மைகளை உங்களுக்கு சொல்லிட்டேன் இதற்கு மேல் நீங்க என்னை சந்தேகப்பட்டாலும், அரஸ்ட் பண்ணினாலும் சரி ஒரு நல்ல உள்ளத்திற்கு தீங்கு நினைச்சதற்காக இந்த தண்டணையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

வீரா சற்றே யோசனையோடு, வினிதா உங்களை நான் நம்பறேன். ஆனா இனிமே நடக்கப்போற விசாரணைக்கு நீங்க உறுதுணையா இருந்தா உங்களுக்கு இந்த கேஸில் எந்த தண்டணையும் கிடைக்காது. இப்போ நான் நிரஞ்சனாவை விசாரிக்கப்போகிறேன். இரண்டு பேருக்கும் அப்படியென்ன பகை ?

தொழில் ரீதியான போட்டிதான் ஸார். எனக்கு முதலில் வேலை கிடைத்தது நிரஞ்சனாவிடம்தான் மாயா மேடம் பீல்டில் கொஞ்சம் கால் பதித்த நேரம் நிறைய வாய்ப்புகள் அவங்களுக்கு குவிய ஆரம்பித்தது, மாயாவோட நடவடிக்கைகளை கண்காணிக்க என்னை மாயா மேடம் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாங்க, அதுக்கு அந்த விடுதி உரிமையாளரும் உடந்தை, நிரஞ்சனா தொடர்பா ஒரு பெரிய தொகை அந்த விடுதிக்கு போச்சு ! நானும் ஒரு உளவாளியாத்தான் உள்ளே வந்தேன் மற்றவைதான் உங்களுக்குத் தெரியுமே ! ஒரு பக்கம் சந்துரு, இன்னொரு பக்கம் நிரஞ்சனா கொலைக்கும் தயங்கா விக்டர் இவங்களுக்கு மத்தியில் இந்த உண்மையை சொன்னா என்னவாகுங்கிற பயம் இருந்தது. எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த தீங்கும் வராம நீங்கதான் ஸார் காப்பாத்தணும்.

வீராவின் முன் கையெடுத்து கும்பிட்டாள் வினிதா.

மாயாவின் கொலையில் நடைபெறும் மாற்றங்களை அறிவிக்க அசோக்கைத் தொடர்பு கொண்டார் இன்ஸ்பெக்டர் அசோக்கின் மொபைல் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்க, அவர்கள் இருவரும் நிரஞ்சானவின் வீட்டுக்கு விரைந்தார்கள். 

த்தனை சீக்கிரம் பண்ணை வீட்டுக்கு வருவோம் என்று சுப்ரியா எதிர்பார்க்கவில்லை, எல்லாமே அவசரகதியில் நடந்து விட்டது. பழைய வாழ்க்கையின் சந்தடியே இல்லாமல், கண்ணுக்கு குளிர்ச்சியாய் எங்கு நோக்கிலும் பசுமை உணர்வோடு, மரங்களுக்கு நடுவிலும், மண் வாசனையை நுகர்ந்தபடியே பூக்களின் அழகை ரசித்தபடியே தோட்டத்தில் நடப்பதையும் இந்த இரண்டு நாட்களில் நன்றாக அனுபவித்தாள் சுப்ரியா. கணவன் குடும்பம் என்று இப்படிப்பட்ட வாழ்க்கைக்குத்தானே அவளும் ஏங்கினாள். ஆனால், ஹாலில் டிபனை கணவனுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள் கல்பனா. எத்தனை அன்பான ஜோடிகள் கடவுள் இவளின் வயிற்றைப் போய் பூட்டி வைத்திருக்க வேண்டாம். குப்பையில் இருந்த எனக்கு கோபுரத்தைக் காட்டியிருக்கிறார்களே, அவர்கள் நீடுழி வாழ வேண்டும். தாய்மை என்னும் புனிதத்தில் இணைத்தமைக்காக அவர்களுக்கு மனதார நன்றியும் உரைத்தாள் சுப்ரியாவின் நெஞ்சம் நிறைந்து வழிந்தது.

கோவிலில் சந்தித்து வந்ததும், ரவியோடு அவள் நேரே சென்றது ஒரு மருத்துவமனைக்குத்தான் !

எதற்கு ரியா இதெல்லாம் ?!

இல்ல ரவி உன்னாலே என்னோட வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைக்குது. நான் கல்பனாவுக்கும் உனக்கும் ஒரு குழந்தைத் தர தயாராயிட்டேன் மனதளவில் ! ஆனா அதற்கு என் எச்சிலனா இந்த உடலும் சம்மதிக்கணுமே அதற்குத்தான் இந்த பரிசோதனை ! முதலில் நாம் ஒரு மருத்துவமனைக்கு போய் என்னை முழுமையா செக் பண்ணிக்கலாம் மேற்கொண்டு...! அவள் பேசிடத் தடுமாறவும் அவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் ரவி, காரினுள் இருவர் மட்டுமே சுப்ரியாவின் இதழ்களை ஒருமுறை ஸ்பரிசித்தவன்,

கல்பனா நமக்கு இந்தத் தனிமையை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறதே ! உன் மனசு எதற்கும் கவலைப்படக் கூடாதுன்னுதான் ! இனி வரும் நாட்கள் என்னால் ஒரு குழந்தையினை நீ சுமக்கப்போகும் அந்த நாட்களுக்காய் நானுமே காத்திருக்கிறேன். அதற்கு பிறகும் உன்னை நிர்கதியா விடமாட்டேன் நான் மட்டும் இல்லை கல்பனாவும்தான் !

அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ரவி ! இந்த குழந்தை என் வயிற்றிலே எப்படி ? அதாவது சயின்ஸ்படியா இல்லை ?

நீ என்ன கேட்க வர்றேன்னு எனக்குப் புரியது. இரண்டு மிஷனுக்கும் இடையில் நடக்கும் உறவு இல்லை நமக்குள் நடப்பது. எனக்கு நீ வேணும். அன்போடு உன்னை நெருங்கி ஆசையோடு என்னுடையவளாக்கிக் கொண்ட பிறகுதான் என் விதை உன்னில் விழும். மனம் சங்கமிக்கும் உறவு வேண்டும் ரியா. என்னைப் பொறுத்தவரையில் உனக்குப்பிறகு நான் கல்பனாவில் உன்னைக் கண்டேன் இப்போது குழந்தைக்காக வேறு யாரையும் அணுக வேண்டும் என்று எனக்குத் தோன்றாத காரணமும் யாரையும் அப்படியென்னால் நினைக்க இயலாது. நான் இப்பவும் உன் காதலுக்கா ஏங்குகிறேன்.

ரவியை மென்மையாய் அணைத்துக்கொண்டாள் சுப்ரியா நடக்கும் இந்த கணங்களுக்காக இறைவனுக்கு நன்றியுரைத்தாள் அன்றைய நாளின் இன்பத்தை அசைபோட்டபடியே, ரவியுடன் தோளாடு தோள் இழைந்து நடந்ததும், எதிர்பாராமல் சிறு சிறு உரசல்கள் செல்ல சீண்டல்கள் எல்லாமே, இது இன்னொருத்தியின் வாழ்வு என்று அவ்வப்போது கல்பனாவின் நினைவு வந்ததும் சற்றே விலகியவளை சமாதானப்படுத்தினான் ரவி,

அப்படி சந்தேகப்படுறவளாய் இருந்தா இன்றைய நாளை அவ தந்திருக்க மாட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.