(Reading time: 27 - 54 minutes)

அவனிடம் இருந்து மிக அழுத்தமாக வந்தது வார்த்தைகள். அவர்கள் இருவரும் இறங்கி, அமைதியாய் சலனமற்று இருந்த வீட்டின் காரிடரில் நடக்க, செல்வியையே தவிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தவன், மீண்டும், “செல்வி” என அழைக்க, அவள் திரும்பி அவனைப்பார்க்கும்போது, மெதுவாய் அவளது வலதுகையைப் பற்றினான், “ஐ லவ் யூ செல்வி” அழுத்தமான வார்த்தைகள் அவனது கண்களின் ஆளுமையில் இருந்தாள் செல்வி, விழிகளை அகற்ற முடியாது, அவன் அவளையே தவிப்பாய் பார்த்திருந்தான். அவள் ஏதோ சொல்ல வாயைத்திறக்க அவனது பிடி இன்னும் இருக்கமாகியது. அவளது வார்த்தைகள் வெளியே வரவிடாது தடுத்து நிறுத்தியது அந்த அழுத்தமான பிடி.

“என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க, உன்னமட்டும் தான் நாள் முழுசா நினைக்க முடியுது, என்னோட வாழ்கை பூராவும் உன்னோட இருக்கனும்னு தோணுது…எவ்ளோ கற்பனையோட நம்ம கல்யாணதுக்கு நான் காத்துட்டு இருக்கேன் தெரியுமா உனக்கு? தயவு செஞ்சு இனிமே நம்பிக்கை இல்லாம பேசாதா, சீக்கிரமா எல்ல பிரச்சனையையும் சால்வ் பன்னிடுவேன், ஐ நீட் யூ செல்வி” அவனது கண்கள் கெஞ்சின, செல்விக்கு உடல் நடுங்கியது,

முதன்முறையாக ஒரு ஆணின் காதல் அவளது செவியில் விழுந்து இதயம் வரை செல்கிறது, உணர்ச்சியற்று அவளது தளிர் விரல்கள் இன்னும் அவனது பிடியில் தான், உடல் நடுங்கி அவனை தான் பார்த்திருந்தாள். “என்ன செய்வது இப்போது?” நடுங்கிக்கொண்டிருந்தவளின் ஸ்பரிசத்தை இவன் இன்னும் இரசித்துக்கொண்டிருந்தான், இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால், அவளது மனதை கவர இன்னும் ஏதாவது செய்திருப்பான்.

“ஹப்பா என்ன ஒரு ரொமென்ஸ்..!” குரல் வந்த திசையில் இருவரும் திரும்ப, பக்கத்தில் இருந்த அறையின் வாயிலில் இருந்து புன்னகை செய்தான் ரிஷி, அவனது அருகே சுவறில் சாய்ந்து நின்றிருந்தாள் காவ்யா. செல்வி கொஞ்சம் அதிர்ந்து கையைப் பின்னுக்கு இழுத்தாலும் இன்னும் விக்னேஷின் அழுத்தமான பிடியில் தான் அவள் கையிருந்தது. “என்னங்க பையன் பாவமில்ல, ஆனாலும் பிஸ்னஸ் பிஸ்ன்சுனு பித்துப்பிடிச்சு அலைஞ்சவனை உங்க பின்னாடி இப்படி கெஞ்ச வச்சுட்டீங்களே! நீ நடத்துடா!” என்று சிரித்தபடி அவன் காவ்யாவைப் பார்க்க,

“உன்னோட ஃப்ரண்டு தானே, உன்ன மாதிரி இல்லாம எப்படி இருப்பார்?” என புருவம் உயர்த்தி அவள் கேட்டதில், அவன் உதட்டைக் கடித்து சிரித்தான், அவனது பார்வையை கண்டிக்கும் விதமாக காவ்யா முறைக்க இருவரும் விக்னேஷைப் பார்த்தனர்.

“டேய் அதெல்லாம் ஒன்னுமில்ல, சும்மா ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க், இப்படிலாம் கெஞ்சாம பின்ன எப்படி சரி கட்றதாம்?”

“மச்சான் நீ செஞ்சது தப்புனே நான் சொல்லலையே…” என்றவாரு அவன் ஒரு காலை நொண்ட அவன் தரையில் ஊன்றாத பாதத்தில் ஒரு மாவுக்கட்டு, ஒரு கையில் வாக்கிங்க் ஸ்டிக், அவன் அருகே ஒரெ எட்டில் முன்னால் வந்த காவ்யா, அவன் இடுப்பை அனைத்து அவன் விழாது நடக்க உதவினாள்.

“ஐயம் ஓகே பேபி..நீ கஷ்டப்படாத, ஐ கேன் வாக் வித் வாக்கிங்க் ஸ்டிக்!”

கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். அவனது வலியை உணர்ந்ததாக அவள் முகம் காட்டியது, ரிஷியின் தோள் உயரம், அழகானப் பெண், தோள்வரை வெட்டிவிடப்பட்ட முடி சிலும்பி நின்றது, இன்னும் கன்னகதுப்புகள் சிவ்வென்று அழகாக, அதன் அழகை இன்னும் கூட்டும் விதமாய் காதோர முடிக்கற்றைகள், அவள் ஆடையிலும், உடலிலும் அவளது செல்வ செழிப்பு மின்ன தான் செய்தது, இத்தனைக்கும் மீறி, அவளை ரிஷி பார்க்கும்போது அவனது பார்வையில் தெரித்த காதல், மொத்தமாக செல்விக்குப் புரிந்தது. செல்வியின் பார்வையில் காவ்யா ரிஷிக்கு மிகப் பொருத்தமானவளாய் தான் இருந்தாள்.

“செல்வி, இவங்க காவ்யா, ரிஷியோட வுட்பி!” விக்னேஷ் மென்மையாய் சொன்னான். “ஹலோ நீங்க ரொம்ப ஸ்லோ என்ன பார்த்தா அவங்களுக்கு புரிஞ்சுருக்காதா என்ன?” இது காவ்யா.

செல்வியைப்பார்த்து நட்பாய் புன்னகைத்தாள்.

“டாக்டர், என்ன சொன்னாங்க?” – செல்வி

“லேசான அடி தான் செல்வி, வலதுகால் பாதத்தில மட்டும் ஹேர்லைன் ஃப்ராக்ச்சர், கொஞ்சம் ரெஸ்ட் கன்டிப்பா எடுக்கனும், மத்தபடி டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லனு சொல்லிட்டாங்க!” – காவ்யா

“எங்க போய் முட்டுனானு கேட்டியாமா? இவனையும் சரி கீர்த்தனாவையும் சரி இனிமே கார எடுக்க வேண்டாம்னு சொல்லனும், இரண்டு பேரும் கன்னாபின்னானு கார் ஓட்டுறாங்க” - விக்னேஷ்

“அத இவகிட்ட சொல்றியாடா நீ, இவ நம்மளேயே தூக்கி சாப்பிட்ருவா, இவ கார் ஓட்டி நீ பார்த்ததில்லையே..!” - ரிஷி

“நீ மழுப்பாத, காவ்யாக்கதைக்கு அப்புறம் வருவோம் நீ நேத்து எங்க போய் முட்டுனனு சொல்லு!”

“விக்னேஷ், ஆக்சிடென்ட் எல்லாம் ஒன்னும் இல்ல!” – காவ்யா

“காவீ…” – ரிஷி

“நீ சும்ம இரு ரிஷி, இத இப்படியே விட முடியாது, விக்னேஷ், நேத்து இரண்டு மூனு பேர் சேர்ந்து அட்டாக் பன்னிருக்காங்க!”

செல்வி, விக்னேஷ் இருவருமே அதிர்ந்தனர். “என்னடா சொல்ற?”

“ஆமாம்” என ரிஷி தலையசைக்க, இருவுரும் காவ்யாவைப்பார்க்க

“பின்ன, இவரு சும்மா இருந்தாதானே, வீண் வம்ப விலைக்கு வாங்கினா இப்படித்தான்!”

“காவ்யா, கொஞ்சம் சும்மா இருக்கிறீயா, அவங்க இரண்டு பேத்தையும் தேவயில்லாம கலவரப்படுத்தாத!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.