(Reading time: 27 - 54 minutes)

ரிஷியை முறைத்தவள் மீண்டும் தொடர்ந்தாள். “விக்னேஷ் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க அரும ஃப்ரண்டு பப்புக்கு போயிட்டு வரும்போது ரோட்டுல நின்ன ஒரு பொண்ணுக்கு ஹல்ப் பன்னிருக்காரு, அவள துரத்திட்டு வந்தவங்க டைம் பார்த்து, நேத்திக்கு அட்டாக் பன்னிருக்காங்க!”

செல்வி அதிர்ந்து போனாள், அந்த ஒரு நொடி ரிஷியும் செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “ஐயோ ரிஷி.. !” என ஏதோ சொல்ல வாயெடுத்தவளை சொல்லவிடாது தவிர்த்தான் ரிஷி.

“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, கோபி ஏதோ உளறிவச்சிருக்கான்! டேய் விக்கி நாம அப்புறமா இத டிஸ்கஸ் பன்னலாம், இப்போ நீ காவ்யாவ வீட்டுல ட்ராப் பன்னிடு!”

“இல்ல நான் ட்ரைவ் பன்னிப்பேன்!”

“காவீ, யாரும் தனியா போகவெண்டாம் ப்ளீஸ், அங்கிள் ஊர்ல இருந்து வரும்போது நீ வீட்ல இரு!

“ஐயோ ஆமா, இல்லனா டாடிக்கு பதில் சொல்ல முடியாது!”

“விக்னேஷ் நீ காவ்யாவ வீட்டுல விட்ரு, செல்வி இங்க இருக்கட்டும்!” – ரிஷி

“ம் சரிடா” அவன் கண்கள் வந்து பேசிக்கொள்ளலாம் என்பதுபோல் ரிஷியை பார்க்க, நண்பர்கள் தங்களது மனநிலையை புரிந்துகொண்டதற்கு அர்த்தமாய் சிரிக்க, காவ்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான் விக்னேஷ்.

திடீரென்று ஏற்பட்ட தனிமை மனதை கலைத்து கலவரப்படுத்தியது. அவள் இன்னும் குனிந்து தரையைப் பார்த்திருந்தாள். “செல்வி, வாங்க உட்கார்ந்து பேசலாம்” சொல்லிக்கொண்டடே அருகே இருந்த சோஃபாவில் அமர்ந்துகொண்டு, அவளுக்கும் தன் எதிரே இருந்த இருக்கையை காண்பிக்க, செல்வி ரிஷியைப் பார்த்துக்கொண்டே அமர்ந்தாள்.

“சாரிங்க.. !”

“எதுக்குங்க சாரி?” அவள் மீது கூர்மையாக விழுந்தது அவன் பார்வை.

“இந்தப் பிரச்சனை என்னால தான், அன்னிக்கு இராத்திரி,…” செல்வி சொல்லும்போது

“ஸ்ஸ்ஸ்… “ என்று தன் வாயின் மீது விரலைவைத்து அவளை அமைதிப்படுத்தினான், சுத்தி எந்த வேலையாட்களும் இல்லை என்பதை உருதிப்படுத்திக்கொண்டு இவள் புறம் திரும்ப்பினான்.

“செல்வி, உங்ககிட்ட நான் பேசனும்னு நினைச்சது அதுதான், இங்க நீங்க எப்ப உங்க கண்ணுல என்னோட ட்ரைவர் கோபியப் பார்த்தாலும் அவன தெரிஞ்சமாதிரி காட்டாதீங்க…!”

“உங்களுக்கு அப்போ என்ன ஞாபகம் இருக்கா ரிஷி!”

“அன்னிக்கு கொஞ்சம் மப்புல இருந்ததால இப்படி கேக்குறீங்களா? நடந்த விசயம் நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா உங்கள ஞாபகம் வச்சுக்க நிறைய விசயமிருக்கு!” சிரித்தான்.

“விக்னேஷுக்கு இது தெரியுமா செல்வி?”

“இல்லை” என தலையசைத்தாள். ரிஷியிடமிருந்து பெருமூச்சு, நிம்மதியாக பின்னால் சாய்ந்து கண்கள் மூடினான்.

“இது வினேஷுக்கு ஏன் தெரியக்கூடாது ரிஷி?”

கண்கள் திறந்தவன் முன்னால் நகர்ந்து அவளைப்பார்த்தான், “செல்வி, விக்னேஷ் ரொம்ப பொசசிவ் அதான், அது மட்டுமில்லாம நீங்க இதுல சம்பந்த பட்ருக்கீங்கன்னு தெரிஞ்சா அந்த ஆபத்தான விசயத்த அவன் நோண்டுவான் அதனால விக்னேஷுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உங்க கல்யாணத்திற்கு அப்புறம் இத சொல்லலாம்”

“நீங்க ஆபத்துல மாட்டினா மட்டும் பரவாயில்லையா ரிஷி, அது என்ன கஷ்டப்படுத்தாதுனு நினைக்கீங்களா?”

“தேங்கஸ் செல்வி, ஆனா தயவுசெஞ்சு நீங்க இதுல சம்பந்தப்பட்டமாதிரி காட்டாதீங்க, அவனுங்க குறி நானா இருக்கனுமே தவிர நீங்க இல்ல!”

“ரிஷி! நான் இத நிச்சயமா விக்னேஷிட்ட ஷேர் பன்னனும்”

“அது உங்க இஷ்டம், ஆனா இதனால அவன் எந்த ஆபத்துலேயும் சிக்கக்கூடாது!”

“நேத்து என்ன நடந்துச்சு ரிஷி அவங்க என்ன சொல்லி உங்கள அட்டாக் பன்னினானுங்க?”

“நேரடியா எதுவும் சொல்லல ஆனா மறைமுக தாக்குதல், அதனால தான் விக்னேஷ் இதுல மாட்டக்கூடாதுனு சொல்றேன்! அவன் உங்கள எவ்ளோ லவ் பன்றான் செல்வி, யூ ஆர் லக்கி, சீக்கிரமா உங்க கல்யாணம் நடந்து, நீங்க சேஃபர் சோனுக்கு போயிட்டீங்கன்னா அப்போ இந்தப் பிரச்சனையா தைரியமா ஃபேஸ் பன்னலாம்? என்ன சொல்றீங்க?”

அவள் குனிந்திருந்தாள், கண்களில் கண்ணீர் சுரந்து கன்னத்தை நனைத்தது. ரிஷி செல்வியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் ஒரு நொடி பேச்சிழந்தான், சுதாகரித்துக்கொண்டவன், “என்னாச்சுங்க? ப்ளீஸ் சொல்லுங்க, விக்னேஷுக்கு ஏதாச்சும் ஆயிடும்னு நினைக்கிறீங்களா?”

மென்மையான அவன் வார்த்தைகளுக்கு முகம் பார்த்தவள் கண்கள் சிவந்திருந்தது.

“ரிஷி, நான் விக்னேஷ லவ் பன்னல! எப்படி எப்படியோ இதெல்லாம் நடந்து இப்போ அது நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்துட்டு, ஆனா அது கல்யாணம் வரைக்கும் போகாது”

“ஹான்” அதிர்ச்சியில் ஒன்றும் புரியாது புருவங்கள் நெறிய அவளைப்பார்த்தான்.”உங்க இரண்டு பேருகுள்ள ஏதாச்சும் பிரச்சனையா என்ன? ஏனா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வரைக்கும் காரிடர்ல.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.