(Reading time: 9 - 17 minutes)

“ஆனால் இப்பவும் உன்மேல இருக்குற நம்பிக்கையும் காதலும் குறையல புகழ். தன்னுடைய தேவை மட்டும் போதும்னு நினைக்கிற சுயநலவாதி நீயில்லை.. என்னவோ காரணம் இருக்கு..”

“ம்ம் இருக்குத்தான்..ஆனால் அதபத்தி நான் யார்க்கிட்டயும் சொல்ல விரும்பல..இன்னொருத்தவங்களை கைக்காட்டி என்னை நான் சரின்னு சொல்லிக்க மாட்டேன்.. எது எப்படி போனாலும் பரவாயில்லைன்னு நான் போராடியிருக்கனும்.. உங்கள தவிக்க விட்டுருக்க கூடாது!” என்றான்  அவன். பெருமூச்செரிந்தாள் ஆயிஷா. அதைத் தவிர வேறென்ன சொல்வது? முதலில் இவனை முன்பு போல கலகலப்பானவனாக மாற்றிட வேண்டும் என தனக்கே அறிவுருத்திக் கொண்டாள் அவள்.

ன் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் யாழினி. அவளின் மௌன தவத்தை கலைக்காமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் தமிழ். அவன் மருத்துவம் புரியும் சிறுவர்களுக்கும் அவளுக்கும் பெரிதாய் வித்தியாசம் இருப்பதாக அவனுக்கு தோணவில்லை. இதழில் புன்னகை பூத்து அமர்ந்திருந்தவன் பக்கமாக எதிர்ச்சையாக திரும்பினாள் யாழினி.

“எ..என்ன பார்க்குறிங்க?”

“இந்த மாடியில் நான் பார்க்க வேறென்ன இருக்கு, உன்னை தவிர?”

“அச்சோ.. கண்ணு நொல்லை ஆச்சா தமிழ்? மேல மேகம் இருக்கு..அதுக்கும்மேல ஆகாயம் இருக்கு..தூரமாய் சூரியன் இருக்கு” என்று அவள் பட்டியலிட,

“அம்மா தாயே இவ்வளவு நேரம் நீ அதை பார்த்தது  போதாதுன்னு என்னையும் கோர்த்து விடாதே” என்றான் தமிழ்.

“நான் ஒன்னும் சும்மா வானத்தை வெறிக்கல..”

“பின்ன,உனக்கு பிடிச்ச கடவுள் முருகன் மேல இருந்து உம்மா கொடுத்தாராக்கும்? சொல்லி வை..பிச்சுபுடுவேன் பிச்சு..”

“அடப்பாவி..கடவுளுக்கே மிரட்டலா?”

“அவர் கடவுள்.. இந்த உலகத்துக்கே அவர் சொந்தம்.. ஆனா நீ என்  பொண்டாட்டி..எனக்குமட்டும்தான் சொந்தம்..”என்றான் தமிழ்

“ப்பா.. செம்மசெம்ம.. பேருல இருக்கும் தமிழ் பேச்சுலயும் மணக்குது”

“சரி ..என்ன யோசிட்டு இருந்த..அதைபத்தி சொல்லு!”

“அது…நீங்கதானே சொன்னீங்க.. புகழை முழுசா வெறுக்காதே..ஒருவேளை அப்படியும் இருக்குமோன்னு யோசிக்கிறேன்.”

“ம்ம்.. யாழினி..”

“என்னப்பா?”

“இப்பவாச்சும் சொல்லேன்.. அன்னைக்கு என்ன நடந்துச்சு? “

“..”

“இதுவரைக்கும் உன்னை நான் வற்புறுத்தி இதைப்பத்தி பேசினது இல்லை.. ஆனால் எனக்கு கொஞ்சமாச்சும் க்ளு வேணும்..என்ன நடந்துச்சுன்னு கொஞ்சமும் தெரியாமல் நான் எப்படி உண்மைய கண்டுபிடிக்க முடியும்?”

“ஹ்ம்ம்… சொல்லுறேன்.. பட் இதுல உங்களுக்கு ஏதாச்சும் க்ளூ கிடைக்குமா தெரியல..” என்றவள் அன்று நடந்ததை அவனுடன் பகிர்ந்துகொள்ள தொடங்கினாள். (யாழினி தமிழ்கிட்ட பேசிட்டு இருக்குற நேரம், நாம மறுபடியும் ப்ளாஷ்பேக்கை தொடர்வோமா?).

ன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் யாழினி. காரணம் ஒரு வாரத்திற்கு பிறகு புகழை காலேஜில் சந்திக்க போகிறாள் அவள்.

“நாளைக்கு வந்துடுவேன் யாழீ..அதுவும் தனியாக இல்லை..என் ஏஞ்சலோடுதான்.. “என்று அவன் சொல்லவும் அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புகழின் காதல் இணைந்ததில் அத்தனை மகிழ்ச்சி யாழினிக்கு. என்னவோ தமிழ் தன்னை தட்டாமலையாக சுற்றி “ஐ லவ் யூ டீ”என்று சொன்னது போல ஒரு பூரிப்பு!

தமிழை நினைத்ததுமே ஆழ்மனதில் சுள்ளென வலித்தது. அன்று ஃபோனில் பேசிவிட்டு சட்டென அழைப்பை வைத்த யாழினி, அப்போதிலிருந்தே அவனது அழைப்புக்காக காத்திருந்தாள். ஆனால் தமிழோ அவளை தொடர்பு கொள்ளவே இல்லை..

“ வேலையாக இருக்கானா? என்னை மறந்துட்டானா? விட்டது தலைவலின்னு இருக்கானா? பேசினால் காதலுக்கு பதில் சொல்லனுமேனு அவாய்ட் பண்ணுறானா?” இப்படி பலவாறாக சிந்தித்தவள்,

“சின்ன வயசுல அப்பாவை மாமான்னு சொல்லியிருந்தாலும், என்னை தங்கச்சியா நினைச்சிருப்பானோ?” என்று எண்ணி வெகுண்டாள்.

“என்னது.. தங்கச்சியா? நானா தமிழுக்கா?” தமிழ் அவளை “தங்கச்சீ..ஈ..ஈ..”’ என்று அழைப்பது போல ப்ரம்மை தோன்றவும்,

“நோ!!!!!!!!”என்றபடி காதைப் பொத்திக் கொண்டாள் யாழினி.

“சிடுமூஞ்சியெல்லாம் எனக்கு அண்ணனா? வாய்ப்பே இல்லை.. தங்கச்சின்னு சொல்லட்டும், சொன்ன வாய்க்கு என் கையால விஷத்தை வைக்கிறேன்”என்று சூளுரைத்தவள் அவனது எண்ணங்களை அவேசாமாக தள்ளி வைத்துவிட்டு காலேஜிற்கு சென்றாள்.

அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் புகழ் அமர்ந்திருக்க, புகழ் என்று ஓடி வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் யாழினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.