(Reading time: 34 - 67 minutes)

‘என்னது எங்க வீ.எஸ் ஒரு வாரம் ப்ரேக்கா. அப்போ பெரிய மேட்டர்தான். சரி நான் இப்போ உனக்கு ஒரு மேட்டர் சொல்றேன்’ என்றவள் ஹரிணி ஒட்டி வந்த விமான கதையை அவனுக்கு சொல்ல

‘கேர்லெஸ்.... கேர்லெஸ் எக்ஸ்ட்ரீம்லி கேர்லெஸ் ...’ படபடத்தான் இவன். ‘யாரு நம்ம ஹரிணிதானா ராதிகா???’

‘ஹரிணி’ அந்த பெயரை கேட்டவுடன் திடுக்கென நிமிர்ந்தார் அங்கே அமர்ந்திருந்த தாமோதரன். ‘என் மகளை பற்றிதான் பேசுகிறார்களா???’

‘நம்ம ஹரிணியேதான். உன் அருமை தோழி..’ சிரித்தாள் ராதிகா.

‘மை காட்..’ என்றான் இவன். ‘நிஜமா பாவம். உடனே கிரௌண்ட் பண்ணிடுவாங்களே. லைசென்ஸ் சஸ்பெண்ட் ஆகிடுமே???”

‘சஸ்பெண்டா??? என்னது சஸ்பெண்ட்??? அவன் பேசியதில் அந்த வார்த்தைதான் தாமோதரனுக்கு சட்டென புரிந்தது. ‘என் மகளை சஸ்பெண்ட் செய்து விட்டார்களா??? ஏனாம்??? எதற்காம்??? படபடத்தது தந்தை மனது.

‘சஸ்பெண்ட் ஆகியாச்சு..’ என்றாள் ராதிகா ‘அடுத்து என்கொயரி ஓடும் ரெண்டு மூணு மாசத்துக்கு. அது சரி. அவளுக்கு உன்னை கண்டாலே ஆகாது. நீ எப்படிப்பா அவளுக்கு போய் பாவம் சொல்றே..’ ஆற்ற மாட்டாமல் கேட்டே விட்டாள் ராதிகா.

அழகாய் சிரித்தான் விவேக் ஸ்ரீனிவாசன். இதற்கு என்ன பதில் சொல்ல!!!

‘பாவம் அவள் என்று தான் நிஜமாகவே தோன்றியது நம் விவேக் ஸ்ரீநிவாசனுக்கு. தனக்கு தீங்கு செய்பவர்கள் கூட அழிந்து போகட்டும் என ஒரு போதும் தோன்றுவதில்லையே அவனுக்கு. அப்படி வளர்த்து தொலைத்துவிட்டாரே நம் ஸ்ரீனிவாசன் என்ன செய்ய!!!

‘இப்போ நியூஸ் சேனல்லே கூட இதுதான் ப்ரேக்கிங் நியூஸ் பாரு..’ சொல்லிவிட்டு சில நிமிடங்கள் ஏதேதோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ராதிகா. அதுவரை முள்ளின் மேல்தான் அமர்ந்திருந்தார் தாமோதரன்.

அவன் பேசி முடித்து அவரருகில் வந்து அமர்ந்ததுதான் தாமதம். சட்டென கேட்டே விட்டார்

‘ஹரிணிக்கு என்னாச்சு???’

ம்???’ சட்டென நிமிர்ந்தவன் இவருக்கு ஹரிணியை எப்படி தெரியும் என்பதைப்போல் பார்த்தான்.

.‘எனக்கென யாருமே இல்லை என பொய் சொல்லிவிட்டேனே!!!  இப்போது என்ன செய்ய??? ஹரிணி என் மகளென எப்படி சொல்ல??? பொய் சொன்னேன் என்று சொன்னால் என்னை பற்றி என்ன நினைப்பான் இவன்???’ யோசித்தபடியே எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டார் தாமோதரன்.

‘இல்ல யாரோ சஸ்பெண்ட் ஆகிட்டங்கன்னு சொன்னியே அதுதான் கேட்டேன் நான்..’

‘அது ஒண்ணுமில்லப்பா. அந்த ஹரிணியும் ஒரு பைலட். சரியா பிளேன் ஒட்டலைன்னு அவளை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க..’ அவருக்கு புரியும் மொழியில் வெகு சாதரணமாக சொல்லிவிட்டு  டி.வியை உயிர்பித்தான் விவேக்..

அந்த விமான நிலையத்தின் ஓடு தளத்தையும், அதனருகே இருந்த சாலையையும் மாற்றி மாற்றி காட்டி விளக்கிக்கொண்டிருந்தனர் அந்த செய்தி தொலைகாட்சியில். இது விமானிகளின் அலட்சிய போக்கு என கொதித்துக்கொண்டிருந்தார்கள், பயணிகளின் உயிருக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்குமா என குதித்துக்கொண்டிருந்தார்கள்

தாமோதரனுக்கு ஆங்கிலம் அந்த அளவுக்கு புரிவதில்லை. டிவியில் என்ன பேசுகிறர்கள் என புரியவில்லை. இருப்பினும் அதில் ஹரிணி என்ற பெயர் சொல்கிறார்களா?? என கூர்ந்து கவனித்தார். எதுவும் சரியாக புரியவில்லை.

விமானம் சரியாக ஒட்டவில்லையா??? முதலில் ஹரிணி என்றானே அது என் மகள்தானா??? வேறே யாருமா??? தலைக்குள் அலையடித்தது அவருக்கு.

‘விவேக்...’ டி.வியில் ஆழ்ந்தவனை கலைத்தார் அவர். மகிழ்ந்து திரும்பினான் அவன். அவர் இவனை பேர் சொல்லி அழைத்தது இதுவே முதல் முறை.

‘சொல்லுங்கப்பா..’ என்றார் பரவசத்துடன்.

‘ஹரிணின்னு பேர் சொன்ன மாதிரி எதுவும் தெரியலையே!!! போட்டோ எதுவுமும் காட்டலை’ அது தன் மகள்தானா என ஊர்ஜித படுத்திக்கொள்ளும் கவலையில் கேட்டார் தாமோதரன்.

‘அதெல்லாம் சொல்ல மாட்டங்கப்பா. சும்மா பைலெட்னு மட்டும்தான் சொல்றாங்க..’ என்றான் இதமான குரலில்.

‘இல்ல அந்த பொண்ணை என்ன பண்ணுவாங்க. போலிஸ்லே எதுவும் பிடிச்சுக்குவாங்களா??? அவர் அப்பாவியாய் கேட்க வியப்புடன் கலந்த புன்னகை ஓடியது விவேக்கின் முகத்தில்.

‘அதெல்லாம் பண்ண மாட்டாங்கபா. ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு இவ்வளவு கவலை படறீங்க???”

‘இல்லை அது அழுதிட்டு இருக்குமோன்னு தோணிச்சு அதான்..’ என்றார் மெல்ல.

‘அப்பா.. அது ரொம்ப தைரியமான பொண்ணுபா. இதுக்கெல்லாம் கலங்காது. நீங்க வாங்க. சாப்பிடலாம் ’ டிவியை அணைத்துவிட்டு அவரை எழுப்பி சாப்பிட அழைத்து சென்றான் விவேக்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.