(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈசி முட்டை பொரியல்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

4 முட்டைகள்

1 ஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய்

உப்பு

1/5 ஸ்பூன் மிளகுத் தூள்

  

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

 

உங்கள் சுவைக்கு ஏற்ப, வேண்டிய அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்க்கவும்.

  

முட்டையை நன்கு அடித்து கலக்கவும்.

  

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

 

ஸ்டவ்வின் தீயை குறைத்து விட்டு, முட்டைக் கலவையை ஊற்றவும்.

  

முட்டை முக்கால் பாகம் வேகும் வரை காத்திருக்கவும். பின் கரண்டியால் கிளறவும். முட்டை சிறு துண்டுகளாக உடைந்து வரும்.

  

மேலும் சிறிது நேரம் கிளறி, முட்டை நன்கு வெந்த உடன் ஸ்டவ்வில் இருந்து எடுத்து விடவும்.

  

முட்டைகளை உடனே சூடாக பரிமாறவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.