Chillzee சமையல் குறிப்புகள் - மாம்பழ பருப்பு
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
1 கப் துவரம் பருப்பு
4 கப் தண்ணீர்
சுவைக்கு ஏற்ப உப்பு
½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
½ டீஸ்பூன் சீரகம்
1 வெங்காயம், நறுக்கியது
4 பூண்டு பல், சிறுத் துண்டுகளாக நறுக்கப்ப்பட்டது
1 டேபிள்ஸ்பூன் சிறுத் துண்டுகளாக நறுக்கப்ப்பட்ட இஞ்சி
½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
2 மாம்பழங்கள் – தோல் உரிக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்டது
½ கப் நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை
துவரம் பருப்பை நன்றாக கழுவி, தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து நன்றாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
எண்ணெயில் சீரகம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
மாம்பழம் மற்றும் வதக்கிய கலவையை வேக வைத்த பருப்புடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதை சிம்மில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கிவிடவும்.
மேலே கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.