(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - காலிஃபிளவர் சாதம்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!  

தேவையான பொருட்கள்

1 காலிஃபிளவர்

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 5 பல்

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  

செய்முறை

காலிஃபிளவரின் இலைகளை அகற்றி, 2 அங்குல சிறு துண்டுகளாக நறுக்கவும்.

  

இந்த காளிஃபிளவர் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஃபுட் பிராசசர் அல்லது மிக்ஸியில் போட்டு அரிசி போல சின்னதாக வரும் வரை அடித்துக் கொள்ளவும். மிக்ஸியை அதிக வேகத்தில் பயன்படுத்தாதீர்கள். ஆன் – ஆஃப் – ஆன் என பல்ச முறையில் இயக்குங்கள்.

  

பூண்டு மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும் அல்லது நசுக்கி வைத்துக் கொள்ளவும். 

 

மீடியம் தீயில் கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கவும்.

 

பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

 

இப்போது அரிசியாக அடித்து வைத்திருக்கும் காளிஃபிளவரை சேர்த்து சமைக்கவும். அவ்வப்போது கிளறி காலிஃபிளவர் சிறிது மென்மையாகும் வரை சமையுங்கள் (2-3 நிமிடங்கள்). காளிஃபிளவர் சாதம் தயார்!

 

இதை வெரைட்டி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  

ஒரு பெரிய காளிஃபிளவரில் இருந்து தோராயமாக சுமார் 8 கப் காலிஃபிளவர் அரிசி கிடைக்கும். அதை சமைத்தால் சுமார் 6 கப் காளிஃப்ள்வர் சாதம் கிடைக்கும். எனவே உங்களுக்கு தேவையான அளவு சமைத்துக் கொள்ளுங்கள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.