(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - பாம்பே உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

கறிவேப்பிலை

1 வெங்காயம் (சிறியதாக வெட்டப்பட்டது)

2 பச்சை மிளகாய் (நறுக்கியது)

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் தனியா

½ டீஸ்பூன் மிளகாய் தூள் (விரும்பினால்)

½ டீஸ்பூன் மஞ்சள்

1 டீஸ்பூன் உப்பு

2 உருளைக்கிழங்கு (சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

1 டீஸ்பூன் கரம் மசாலா

கைப்பிடி புதிய கொத்தமல்லி (சிறிதாக நறுக்கியது)

 

செய்முறை

ரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தை கிளறி, அது நிறம் மாறும் வரை வதக்கவும்.

தனியா மற்றும் சீரகத்தை மிக்ஸியில் கரகரவென தண்ணி சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், மிளகாய் தூள் அனைத்தையும் வெங்காயத்துடன் சேர்க்கவும்.

ஒரு நிமிடத்தில் மசாலா நன்கு மணம் வீசும். அப்போது உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

அடுப்பின் வெப்பத்தை குறைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும். வாணலியை மூடி, உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை (சுமார் 15-20 நிமிடங்கள்) வேக விடவும்.

ஸ்டவ்வில் இருந்து நீக்கி ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இழைகள் தூவி அலங்கரிக்கவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.