(Reading time: 2 - 4 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 48 - வீட்டை சுத்தம் செய்ய சில டிப்ஸ்

ம் வீட்டையும், வீட்டில் இருக்கும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அப்படி சுத்தம் செய்யும் போது நினைவில் சொல்ல வேண்டிய சில டிப்ஸ்:

1.வீட்டை சுத்தம் செய்யும் போது ரப்பர் கிளவ்ஸ் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் அந்த கிளவ்ஸை நன்றாக சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

 

2.நல்ல கிருமிநாசினி ஒன்றை எப்போதும் வீட்டில் கைவசம் வைத்திருங்கள்.

 

3.அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதேப்போல பெட்ஷீட், ஸ்பான்ஜ், துடைப்பம், வேக்கம் கிளீனர் போன்றவற்றையும் சுத்தம் செய்ய தவறாதீர்கள்!

 

4.சமையலறை சின்க், பிரிட்ஜின் கைப்பிடி, கதவுகளின் கைப்பிடிகள், ஸ்விட்ச் & சாக்கெட்டுகள், மைக்ரோவேவ் போன்றவற்றை சுத்தம் செய்ய மறந்துப் போவது இயல்பு. அனால் இது எல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துபவை. எனவே மறக்காமல் சாதனங்களின் உள்ளே மட்டும் அல்லாமல் கைப்பிடிகள், மற்றும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்யுங்கள்.

 

5.கிருமிநாசினிகளைப் பயன்படுத்தும் போது வெளி வரும் ரசாயனங்களை சுவாசிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். முடிந்த அளவு, கிருமிநாசினிகளைப் பயன்படுத்திவிட்டு, தண்ணீரால் துடையுங்கள். அப்படி துடைக்க முடியாது என்றால் (வாஷ் பேசின் போன்ற இடங்கள்) அந்த இடங்கள் நன்றாக காயும் வரை காத்திருந்து விட்டு, பயன்படுத்துங்கள்.

 

6.உயர்தர EPA அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள்.

 

7.சுத்தமான பழைய துணிகளைக் துடைக்க பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் தூக்கி எரிந்து விடுங்கள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.