(Reading time: 2 - 3 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - உஷ்! இளமையின் ரகசியம்!!! 🙂 - அனுஷா

   

ஒரு குக்கிராமத்தில் இருந்து கணவன், மனைவி மற்றும் மகன் இருக்கும் ஒரு குடும்பம் விடுமுறையில் சிட்டிக்கு போனாங்க. அங்கே ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போனாங்க.

   

அம்மா ஷாப்பிங் செய்து கொண்டிருந்த நேரத்தில் ​​அப்பாவும் மகனும் ஒரு லிஃப்ட் முன் அது என்னன்னு புரியாமல் பிரமிப்புடன் பார்த்துட்டே நின்னுட்டு இருந்தாங்க.

   

அவங்க அப்படி பார்த்துட்டே இருக்கும் போது, ஒரு வயதான பெண்மணி லிஃப்ட் பக்கத்துல போய் எதுவோ ஒரு பட்டனை பிரஸ் செய்தாங்க, உடனே விசித்திரமான வெள்ளி கதவு ஒன்னு திறந்தது. அவங்க அதுக்குள்ளே போய், கதவை மூடிட்டாங்க.

   

அப்பாவும் மகனும் இப்போவும் பார்த்துட்டே நின்னாங்க. அங்கே நம்பர் அதிகமாயிட்டே போச்சு, அப்புறம் திடீர்னு நம்பர் குறைச்சுட்டே வந்தது.

  

ஒன்னும் புரியாம இவங்க நிக்கும் போதே, அதே கதவு திறந்தது. இப்போ அங்கே இருந்து ரொம்பவும் அழகான ஒரு இளம் பெண் வெளியே வந்தாள்.

   

அப்பாக்கு உடனே புரிஞ்சுடுச்சு!

  

மகன் கிட்ட அவசரமா கிசுகிசுத்தார். "டேய், உடனே போய் உன் அம்மாவை அழைச்சுட்டு வா!!!"

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.