(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - 75 மாடி! 🙂 - அனுஷா

   

கோபால், பிரகாஷ், பிரமோத் மூணுப் பேரும் ஒரு நாள் முழுக்க பயணம் செய்து ரொம்ப டையர்டா இருந்தாங்க.

  

சரி ஒரு நல்ல ஹோட்டல்ல நைட் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த நாள் பயணத்தை தொடரலாம்னு முடிவு செய்தாங்க.

   

அதே மாதிரி ஒரு ஹோட்டல்ல ரூம் வாடகைக்கு எடுத்து சாவியும் வாங்கினாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது, அந்த ஹோட்டல்ல லிப்ட் வேலை செய்யலை. இவங்களுக்கு கிடைச்ச ரூம் 75வது மாடில இருந்துது!

 

வேற வழி இல்லாம மூணு பேரும்  ஒரு ஐடியா போட்டாங்க. படிக்கட்டு ஏறுற சோர்வு தெரியாம இருக்க கோபால் ஜோக்ஸ் சொல்லனும், பிரகாஷ் பாட்டு பாடனும், பிரமோத் சோக கதைங்க சொல்லனும்.

  

அதன் படி முதல் 25 மாடி ஏறுற வரைக்கும் கோபால் ஜோக்ஸ் சொல்லிட்டே வந்தான்.

  

அடுத்த 25 மாடிக்கும் பிரகாஷ் பாட்டு பாடிட்டே வந்தான்.

  

கடைசியா 24 மாடிக்கும் சோக கதையா சொல்லிட்டு வந்த பிரமோத், 75வது மாடியை அடைஞ்சதும் ரொம்ப பெரிய சோக கதையை சொன்னான்!!!

   

சாவியை மறந்து பிரன்ட் டெஸ்க்ல விட்டுட்டேன் ன்னு சொன்னான்!!!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.