(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 60 - கண்ணாமூச்சி ஏனடா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

வானத்தில் மிதக்கும் மேகங்கள்

தூரத்தில் இருந்து பார்த்திடுகையில்

ஏனோ வானத்தோடு ஒட்டி

உறவாடுவது போல் தோன்றிடும்…

அழகான நீர் நிறைந்த குளத்தினை

வெளியில் இருந்து பார்க்கையில்

அதில் பூத்திருக்கும் தாமரையும், அதன் இலையும்

நீரோடு ஒன்றி இருப்பது போலேயே தோன்றிடும்…

வெளிப்பார்வைக்கு அனைத்துமே இதுபோல தான்…

ஒட்டியிருப்பது போல் மாயத்தோற்றம் உண்டாகும்…

எனினும் அருகில் சென்று பார்த்தால் தான்

அதன் உண்மை நிலைமை விளங்கிடும்… - எனினும்

நான் வானத்தில் மிதக்கும் மேகமும் அல்ல…

தாமரை கொண்ட இலையும் அல்ல…

குருதியும், உணர்வும் கலந்துள்ள சாதாரண பாவை…

என் உணர்வுகள் உனக்கு புரியும் நாளும் அறியேன்…

என் குருதி கசிந்திருகும் அவலமும் நான் உணரேன்…

இதற்கெல்லாம் தீர்வும் காண இயலாது

மேற்கொண்டு ஏதும் செய்யவும் முடியாது

தடுமாற்றத்திற்கும், மனப்போராட்ட்த்திற்கும்

இடையில் சிக்கித்தவிக்கின்றேன் நான்…

என்னை உன்னிடம் வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வாய்த்திடவில்லை…

என் மனமும் அது கொண்ட காதலை வெளிப்படுத்த

வார்த்தையும் கிட்டிடவில்லை இன்றுவரை…

ஹ்ம்ம்… என் செல்லக்கண்ணா…

நீயே சொல்லிடுடா…

இந்த தவிப்பும் என்று தான் தீரும்?...

இந்த காதலும் என்று தான் கைகூடும்?...

மனமோ உன்னைத் தேடிட

நீயோ கைக்கு அகப்படாத நிஜத்தில்…

இந்த விளையாட்டும் என்று தான் தீரும்?...

சொல்….

இந்த கண்ணாமூச்சியும் ஏனடா!!!!.... என்னவனே…

பூ மலரும்

Ilam poovai nenjil 59

Ilam poovai nenjil 61

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.