(Reading time: 2 - 3 minutes)

உயிர் உள்ளபோதே  உரையாடுங்கள்! - புவனேஸ்வரி 

life

நேரம் ஆகினால் என்ன ?

நெஞ்சினில் இருப்பதை பேசுங்கள் !

 

கடுமையாய் இருந்தால் என்ன ?

கடமையை மறக்காமல் பேசுங்கள் !

 

தூரம் அதிகரித்தால் என்ன ?

தூய்மை மாறாமல் பேசுங்கள் !

 

நெடுந்தூரம் நடந்தால் என்ன ?

நேசமாய் நின்று பேசுங்கள் !

 

சோகம் இருந்தால் என்ன ?

சுமைகளை பகிர்ந்தபடி பேசுங்கள் !

 

ஆத்திரம்  வந்தால் என்ன ?

சாத்திரங்களை பேசுங்கள் !

 

கடமைகள் வந்தால் என்ன ?

கஞ்சத்தனம் இல்லாமல் பேசுங்கள் !

 

காவியம் தோன்றினால் என்ன ?

காதலுடன்  பேசுங்கள் !

 

இடுக்கன் வந்தால் என்ன ?

நேர்மையாய் பேசுங்கள் !

 

தயக்கம் வந்தால் என்ன ?

தைரியமாய் பேசுங்கள் !

 

அஞ்சி நின்றால் என்ன ?

பஞ்சமின்றி பேசுங்கள்

 

செல்போனை போட்டு விட்டு

சுற்றத்தாருடன் பேசுங்கள் !

 

நகலை விட்டுவிட்டு

நலம் விரும்பிகளுடன் பேசுங்கள் !

 

பெருமைகளை ஒதுக்கிவிட்டு

பெற்றோருடன் பேசுங்கள் !

 

வினாடிகளில் ஓய்வு கிடைத்தால் கூட

விருந்தாளிகளுடன் பேசுங்கள் !

 

பண்புகள் கூடிடும்போது

பகைவனுடன் பேசுங்கள் !

 

மனம் திறந்து

மனைவியுடன் பேசுங்கள் !

 

காதலை தேக்கி  வைத்து

கணவனுடன் பேசுங்கள் !

 

குழந்தைத்தனம் மாறாமல்

குழந்தைகளிடம் பேசுங்கள் !

 

மரியாதை குறையாமல்

முதியோருடன் பேசுங்கள் !

 

மொழிகளுக்கு பஞ்சமில்லை

மௌனம் களைந்து பேசுங்கள் !

 

நிரந்திரமில்லா வாழ்வில்

நிதானமாய் பேசுங்கள் !

 

பிணத்துடன் பேசினால் பித்தன் என்பர், எனவே

உயிர் உள்ளபோதே  உரையாடுங்கள் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.