(Reading time: 1 - 2 minutes)

நானும் அவனும் - புவனேஸ்வரி 

couples

வானம் பார்த்து வாடும் நிலம் போல

நிலம் பார்த்து பொழியும் மழை போல

நானும் அவனும்

 

நிலவுக்காக எரியும் சூரியன் போல

சூரியனின் நிழலாய் வாழும் நிலவு போல

நானும் அவனும்

 

இலை மீது உறவாடும் மழைநீர் போல

மழை நீரை சேகரிக்கும் இல்லை போல

நானும் அவனும்

 

மண்ணுக்குள் பரவிடும் வேர் போல

வேருக்கு துணை  நிற்கும் மண் போல

நானும் அவனும்

 

முள்ளோடு நகரும் காலம் போல

காலத்துக்காக சுழலும் முள்  போல

நானும் அவனும்

 

உரையாடலுக்குள் ஒளிந்திருக்கும் மௌனம் போல

மௌனமே மொழியாகும் உரையாடல் போல

நானும் அவனும்

 

இசையோடு சேர்ந்த தமிழ் போல

தமிழோடு சங்கமித்த இசை போல

நானும் அவனும்

 

முடிவை நோக்கி பயணிக்கும் தொடக்கம் போல

தொடக்கத்திற்கு நிறைவு தரும் முடிவு போல

நானும் அவனும்

 

பல்லாயிர மொழிகள் சுமந்த உலகில்

புரியாமல் திரியும் இரு மொழிகள்

நானும் அவனும்

 

எதிராய் எதிர்த்து , புதிராய் புன்னகைக்கும்

நிரந்தர தொல்லைகளாய்

நானும் அவனும் .. !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.