உன் நினைவுகள் - ராஜலக்ஷ்மி
தூங்காத என் இரவுகளை
நீங்காத உன் நினைவுகள்
தாலாட்டும்....
உன் நினைவுகள் தரும் சுகத்தினில்
என் நிஜங்களின் சுமைகளை
மறக்கிறேன்...
உன்னோடு பழகிய நாட்களை மட்டும்
நாட்காட்டியிலிருந்து கிழிக்க மறுக்கின்றேன்....
உன் உயிர் சுமக்கவே நான் உடல் தாங்கினேன்
உன் உடன் வாழவே நான் உயிர் வாழ்கிறேன்
என்னோடு நான் கொண்டவை அனைத்தும்
உனக்கே சொந்தமாம்...
என்றென்றும் நீ எனக்கு மட்டுமே சொந்தமாய்....