நம்பிக்கை - ராஜலக்ஷ்மி
காலை பனியின் அழகை
மலர்களில் ரசித்தேன்
வீசும் காற்றின் விசையை
புல்லாங்குழலில் ரசித்தேன்
கம்பிகளின் கைவண்ணத்தை
வீணையில் ரசித்தேன்
பெண்மையின் வெட்கத்தை
தொட்டாசிணுங்கி இலைகளில் ரசித்தேன்
உண்மை உழைப்பின் ஊதியத்தை
சிவந்த கைகளில் ரசித்தேன்
இளைய தலைமுறையே
உன்னுள்
நம்பிக்கையை ரசித்தேன் ..