(Reading time: 13 - 26 minutes)

பச்சை விளக்கு எரிந்ததும் வண்டியை எடுக்கலாம் என்றால், என் முன்னாள் ஒருவான் Earphone மாட்டிக்கொண்டு பச்சை விழுந்ததை கூட பார்க்காமலும், நான் Horn அடித்ததும் காதில் விழாமலும் வண்டியை நகர்த்தாமல் சிலையாய் நிற்க, அதற்குள் பின்னால் வந்தவன் என்னை இடிக்க, நானோ முன்னிருந்த அவன் வண்டியை இடித்தேன்,

பயமும் கோபமும் ஒன்று சேர்ந்து என்னை இடித்தவனை பார்த்து" signal ல கூட வேகமாக தான் ஓட்டுவியா....?,"

முன்னிருப்பவனை பார்த்து "Signal ல நின்னுட்டு song கேட்டா மட்டும் போதாது ,signal யும் கவனிக்கனும்" இருவரையும் நன்றாக திட்டி விட்டு நகர்ந்தேன்.

Office வரதுக்குள்ள எவ்ளோ பாடா இருக்கு "என புலம்பிக் கொண்டே வாசலில் இருக்கும் விநாயகனை கண்களை மூடி கொண்டு பிரார்த்தித்து என் இருக்கைகு சென்றேன்.

நான்: "ஹாய் மோனி குட் மார்னிங் "

மோனி: "குட் மார்னிங் பிரியா."

மோனி என் 10வருட நட்பு . என் ரகசிய தோழி அதாவது எங்களுக்குள் ரகசியங்கள் இல்லை. எங்கள் ரகசியம் மற்றவர்களுக்கு ரகசியமாக இருக்கும்.

கண் இமைக்காமல் கணினியில் மூழ்கி ஆழ் நிலையில் அமர்ந்திருக்க. என் தோளில் தட்டி என் உயிர் தோழி,

மோனி: " let's go to cafeteria".

நான்:இரு டீ code type பண்ணி முடிய போது,2 mins டி".

மோனி: TL ஹே டீ குடிக்க போய்ட்டாரு.நீ கத்துகிட்ட.வித்தை லாம் அப்ரம் காட்டலாம் கிளம்பு" என்று என்னை இழுத்து கொண்டு cafeteria சென்றாள்.

அவளை இருக்கையில் அமர.சொல்லி விட்டு நான் counter சென்று வரிசையில் நின்று Filter coffee இரண்டு வாங்கி கொண்டு திரும்பும் போது என் தோளில் யாரோ இடிக்க என் கைகள் ஆடி Filter coffee சில துளிகள் கீழே சிதறியது.

யார் என்று பார்த்த போது காலையில் வண்டியை இடித்த அதே ஆண் மகன் .அது வரை இல்லா கோபம் அவனை பார்த்ததும் ஏனோ வந்தது, முறைத்துக்கொண்டே சென்றேன்.

அவன்: "So sorry ,I didn't see you yaar"

நான்:"No problem"

என் இருக்கையில் அமர்ந்தேன் .

ஆவி பறக்கும் நறுமணம் பொங்கும் Filter coffee, என் நாசியில் நுழைந்து ,என் இதழை cup இன் இதழில் வைத்து பருக,சுவையோ நுனி நா முதல் அடி தொண்டை வரை சென்று கிரங்கடித்தது.

மோனி யோ WhatsApp status களை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள்.

நான்: "எரும coffee குடி டீ ஆரிட போது".

coffee ஐ பருகி கொண்டே.....

மோனி: "என்ன டீ அங்க பிரச்சினை"

காலை முதல் நடந்தவை சொன்னதும்.

மோனி: சிரித்து கொண்டே"யார் டீ எங்க இருக்கான் அவன்,வர சொல்லு ,இந்த cafeteria. அலர்ர போது ,கூப்டு அவன".

நான் : சிரித்து கொண்டே " நமக்கு பின்னாடி 3rd Table Blue shirt,அவன் தான் டீ".

மோனி: "2,3 பேரு இருக்காங்க டீ"

நான்: "அந்த Blue shirt டீ லூசு".

மோனி முக பாவனை மாறியது

மோனி: " அடிப்பாவி அவன் தான் டீ நம்ம senior Associate, அவன் கூட தான் நாம New Project பண்ண போரோம், சரியான கோவகார சிடு மூஞ்சி யாம், Project Manager உம் அவனும் சம close ஆம்,but very talented person ஆம்".

நான்: மிரட்சியுடன்" உனக்கு எப்பிடி டீ இவ்ளோ details தெரியும்"

மோனி: Detail கேட்டவள்டியே Detail சொல்ல வச்சிட்ட,எனக்கு யாரு சொல்லுவா,அந்ந jollura வருண் தான்"

வருண் office சேர்ந்த நாள் முதல் மோனி மீது ஒருதலை காதல், அவள் இருமினாள் இவன் தண்ணீர் குடிப்பான் அந்த அளவிற்கு ஒரு தலை காதல்.

நான:" அவனுக்கு எப்படி தெரியுமா??"

மோனி: "இங்க corporate சித்தர் னு ஒரு associate இருக்காரம் அவரு சொன்னாராம்".

நான் சிரித்து கொண்டே"யார் டி அது ,என்ன பேரு"

மோனி:" அவனின்றி ஒரு அணுவும் அசையாது பழமோழிகு இவன் தான் டி example. 10வருசத்துக்கு முன்னாடி join பன்ன Aunty ல இருந்து 10 நாள் முன்னாடி join பண்ண புது பொண்ணு வரைக்கும் Full data base இருக்கும். அவன் Friend Request கொடுக்காத Facebook Account இல்ல, Hi message அனுப்பாத WhatsApp chat ம் இல்ல.

பகல்ல பத்திமான் ஆ இருப்பான்,பயங்கரமா உபதேசம்லாம் பண்ணுவான், evening 6மணிக்கு மேல பரவசம் ஆயிடுவான் be careful with him".

நான்:" மச்சி உனக்கு எப்பிடி டி எல்லா information தெரியுது".

மோனி: " ஒரு All India Radio என் பின்னாடியே சுத்துதே ,அது வாசிக்கும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.