(Reading time: 13 - 26 minutes)

இருவரும் சிரித்து கொண்டே எழும்போது message tone ஒலித்தது. எடுத்து பார்த்தேன்." You have new Friend Request" " Ranjith Kumar".

நான்: "யாரு.டி ரஞ்சித் குமார்"

Mobile ஐ வாங்கி பார்த்துவிட்டு.என்னை பார்த்து.....

மோனி: " corporate சித்தர்"

இருவரும் அப்படி ஒரு மவுனம் சுற்றிலும் அப்படி ஒரு அமைதி......

தீடிரென்று இருவரும் வாய் விட்டு சிரிக்க cafeteria வே எங்களை பார்த்தது. ஆனால் என் கண்ணோ அவரை பார்க்க செய்தது.

அதுவரை யாரோ என்றிருந்த நான் , அவர் மீது இருந்த கோபம் இப்போது பயம் கலந்த உணர்வாகியது, காரணம் ஒன்றே ஒன்றுதான் Team Leader ஆக அவர் வரவிருப்பது.

நான்:" சீக்கிரம் ஓடு டி ...... மானம் போகுது...."

மோனி :" நாலு பேருக்கு நம்மள ஞாபகம் இருக்கும் நா எதும் தப்பில்ல".

நான்:" situation Dialogue ஆ வாய மூடிட்டு வாடி ".

இருக்கைக்கு சென்ற பிறகு.

நான்:" மச்சி"

மோனி:" என்ன Darling,what can I do for you?"

நான்:" இது டி....நம்ம Face அவருக்கு Register ஆயிருக்கும் ல".

மோனி:" எவருக்கு....?

நான்:" அதான் சொன்னனே ..Bike இடிச்சது.... Cafeteria...coffee கொட்டுனது....திட்டுனது....அப்பறம் சிரிச்சது...அதனால நம்ம Face நியாபகத்துல இருக்குமோ..?

மோனி:" அது என்ன இருக்குமோ...கண்டிப்பா இருக்கும்..But உன் Face மட்டும் தான்".

நான்": இரண்டு பேரும் தான டி சிரிச்சோம், அது என்ன நான் மட்டும்...?"

மோனி:"செல்லக்குட்டி....சிரிக்கிற அப்போ மட்டும் தான் கூட இருந்தேன்.... இடிக்கர அப்போ ...முறைக்கர அப்போ ....solo performance காமிச்சது நானா நீயா...?."

நான்:" நான் தான்....!!!!!!"

மோனி:' That's All...."

நான்:"என்னடி பயமுறுத்துற ..... Revenge எடுப்பாரோ...?"

மோனி:" சீ...சீ... silly matterக்குலாம் Revenge எடுப்பாங்களா.....எதுக்கும் Sorry சொல்லி வெய் use ஆகும்".

நான்:' நான் எதுக்கு sorry கேக்கனும், it's not my mistake...and I won't".

மோனி:"செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து,வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா......பிரியா..... என்னையும் கொர்த்து விட்டுடாதடி"

என்று நக்கல் ராகம் பாடிக்கொண்டிருந்தாள்.

ஒரு வழியா இந்த நாள் கழிந்தது, வீட்டிற்கு சென்று ஒன்று விடாமல் அம்மாவிடன் ஒப்படைத்த பின்பு தான் மனம் இளகியது.

றுநாள் ஆர்வமாக அலுவலகம் சென்று, விநாயகரை கண் மூடி பிரார்தித்து கண் திறந்த போது, நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சத்தோடு பிரசாதம் எடுத்துங்க பிரியதர்ஷினி என்று சொன்னதும் மனம் அதிர்ந்து குழம்பியது.

நான்:" sir....நீங்க...?"

நேத்து Cafeteriaல செம performanceபோல, By the way I'm Ranjith என்று அவர் சொன்னதும்

நான்:"ஓ..... நீங்க தான் அந்த corporate சித்தர் ஆ...?"

"உங்களுக்கு எப்படி தெரியும் .....?"

C.சி:" உங்களுக்கு எப்படி என்ன பத்தி தெரியும்...?"

நான்:" Friend சொன்னா.."

C.சி:" அதே தான்....Bike accident to Cafeteria performance வரைக்கும் full ஆ சொன்னான் என் Friend."

" And your New Project Probably will kick off by the Friday, All the best. And one more Thing , Click the FB Request accept Button for more info about all in this tower."

என்று கூறி விட்டு கிளம்பினார்.

நான்:" என்ன பத்தி அவரு ஏன் பேசனும் , அந்த விசயத்த எனக்கு ஏன் இவரு volunteer ஆ வந்து சொல்லனும், New Project வேற start ஆக போகுதுனு அதையும் சொல்லிட்டு போராரு , அவரு கோவ காரர்னு வேற சொன்னாங்க"

என்று குழம்பி புலம்பிக்கொண்டு இருக்கைக்கு சென்றேன்.

மோனி:" Good Morning பிரியா Darling":

நான்:"என்ன பத்தி அவரு ஏன் பேசனும், அத இவரு ஏன் என்ட்ட சொல்லனும்".

மோனி:" அது எவரு ...இது எவரு...யார் என்ன சொன்னாங்க"

நான்:" ஒன்னும் இல்ல டி"

மோனி:" போடி லூசு".

வேலையில் மூழ்கி அடி ஆழத்திற்கு சென்று, எல்லாம் மறந்து இருந்தேன்.திடீரென என் Mobile அழைத்தது, யாரென்று பார்த்தால் மோனி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.