(Reading time: 13 - 25 minutes)

சிறுகதை - உதிர்ந்த சிறகுகள் - பூர்ணிமா செண்பகமூர்த்தி

fallenLeaves

15 ஆகஸ்ட் 2017 (அன்று)

பேருந்தில் ஏறி அமர்ந்தாள் சந்தனமாரி. கல்லூரியில் சேர்ந்த பின்பு முதல் முறையாக ஊருக்கு வருகிறாள். மதுரைக்கு அருகே உள்ள நெடுங்குளம் என்ற சின்ன ஊர் தான் அவளுடைய சொந்த ஊர். ப்ளஸ் டூவிற்குப் பின்னர் தன் விடாமுயற்சியாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தாலும் சென்னையில் அண்ணா பல்கலையில் ஐந்து வருட கணிணியல்முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தாள். குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றதாலும் அரசின் உதவித்தொகை  கிடைப்பதால் அவளால் அங்கே கல்லூரி விடுதியில் தங்கிக் கொள்ள முடிந்தது. கல்லூரியில் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சேர்ந்து தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது தான் அவளின் லட்சியம். மதுரை வரை வைகை எக்ஸ்பிரஸ் மதிய  ரயிலில் கிளம்பி வந்து விட்டாள்.  ரயில் மதுரை சந்திப்புக்கு வந்து சேரத் தாமதம் ஆகி விட்டது.  மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் சென்று பேருந்து ஏறி நெடுங்குளத்துக்குக் கிளம்பி விட்டாள். அந்த பேருந்தில் அவ்வளவு கூட்டமில்லை, பேருந்தின் பின்புறம் காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். எல்லார் கையிலும் செல்போன் இருக்கிறது. நாமும் இன்னும் கொஞ்சம் சேமித்து ஒரு போன் வாங்கிவிட்டால் நினைத்தபோது அம்மா அப்பாவிடம் பேசிக்கொள்ளலாம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். ஏழு மாதம் கழித்து சொந்த ஊருக்கு வருகிறாள். அதுவும் சந்தன மாரியம்மன் கோவில் தேரோட்டத்துக்குத் தான். ஊர் காக்கும் அம்மனின் பேர் தான் அவளுக்கும். வெளியூரில் வேறு கல்லூரிகளில் படிக்கும் தோழிகள் எல்லாரும் ஊருக்கு  வந்திருப்பார்கள். உள்ளூரில் இருக்கும் பள்ளித்தோழிகளையும் சந்திக்கலாம். உற்சாகமான நினைவுகள் மனதில் நிரம்ப மிகவும் ஆவலுடன் வந்து கொண்டு இருந்தாள் சந்தனமாரி. ஊர் நெருங்க இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது. கண்களில் லேசான  தூக்கம் தழுவ, அச்சமயம் பேருந்து திடீர் குலுக்கலுடன் நிற்கவும், அதிர்ந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கையில் தீப்பந்தங்களுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் ஒரு கூட்டம் ஓடி வந்தது. பேருந்தில் முன்புறம் இருந்த எல்லாரும் இறங்கி ஓட ஆரம்பித்து விட்டார்கள்.

சந்தனமாரிக்கு ஒன்றும் புரியவில்லை. பேருந்தில் இருந்தவர்கள் ஓடுவதன் காரணம் என்னவென்று புரியாமல் திடுக்கிட்டு அமர்ந்து இருந்தாள்.

அருகில் ஒரு மெல்லிய பெண் குரல், 

“சீக்கிரமா இறங்கு!சீக்கிரமா இறங்கு!பஸ் மேல தீ வைக்கிறாங்க!” என்றது.

வேகமாக பஸ்சில் இருந்து வெளியில் குதித்தாள் சந்தனமாரி.

என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க?

வேகமாக நட, அமைதியா இரு! அவங்க கண்பார்வையில் இருந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்னு பேசுவோம்! என்றாள் அந்தப் பெண்.

இருவரும் சாலையோர மரம் ஒன்றின் பின்னர் மறைந்து நின்று கொண்டனர்.

அந்தப் பெண் சொல்லத் தொடங்கினாள்.

நாளைக்கு சந்தனமாரியம்மன் கோவில் தேரோட்டம்! யார் முதலில் வடம் பிடிக்கிறதுன்னு இரண்டு சாதிகாரங்களுக்கும் சண்டையாம். சாயங்காலம் ஊர் கூட்டத்தில பேசி முடிக்க எல்லாரும் கூடி,  அதில் வார்த்தை தடித்து, கைகலப்பு ஆகிடுச்சாம். இப்ப,  அடிதடி பிரச்சினையாக்கி பஸ்ஸைக் கொளுத்துறாங்க. நான் வந்த பஸ் இப்போ எரிஞ்சு சாம்பல் ஆகிடுச்சு.

நீ எங்க போகணும்?

நெடுங்குளம்.

உன் பேரு?

சந்தனமாரி

என் பேரு தாரிணி. நான் அச்சங்குளம் தான். உன் ஊர் பக்கம் தான் ரொம்பக் கலவரம்னு பேசிக்கிறாங்க, என்கிட்ட கேட்டா இப்போதைக்கு உன் ஊருக்குப் போகவேண்டாம்னுதான் சொல்லுவேன். நீ என்கூட எங்க வீட்டுக்கு வா சந்தனமாரி,  நாளைக்குக் காலையில உங்க ஊருக்குப் போகலாம். கலவரம் கொஞ்சம் அடங்கிடும்னு நினைக்கிறேன். வா! வா! மெதுவா நடந்து போய்டலாம். என் ஊருக்கு இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். வயல் வரப்பு வழியாவே நடந்து போயிருவோம். ரோட்டுல நடந்து போனா இந்த சாதிவெறி பிடிச்சவங்க சண்டைக்குள்ள தான் போகணும்.

“யார் இந்தப் பொண்ணு என்று தெரியல?, இந்த நேரத்தில் நமக்குத் துணை இவள் மட்டும் தான்!” என்று மனதுக்குள் நினைத்தாள் சந்தனமாரி. திடீர் பதட்டத்தில் அவள் சிந்திக்கும் நிலையில் இல்லை. தாரிணியைப் பின்தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

தாரிணி, என்னை எரியும் பஸ்ஸில் இருந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி. ஆமாம், நீ எங்க இருந்து வர்ற?

நானும் சென்னைல  ஆர்.எம். எஸ். மெடிக்கல் காலேஜ்ல முதலாம் ஆண்டு படிக்கிறேன். அங்கே இருந்து தேரோட்டத்துக்குத் தான் கிளம்பி வந்தேன்.

நீ?

நான் சென்னை அண்ணா பல்கலையில் ஐந்து வருட கணிப்பொறியியல் பட்டப்படிப்பு படிக்கிறேன், அங்கே இருந்து கோவில் தேரோட்டத்துக்குத் தான் நானும் வந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.