(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - பிறந்தநாள் - ரம்யா

ங்கள் வீட்டில் என்றும் இல்லாத பரபரப்பு.காலை நேரம் போர்வை இழுத்துமூடி உறங்கும் என் தமபி கூடசுறுசுறுப்பாய் எழுந்திருந்தான்.அப்பா காலையிலேயே ஸ்கூட்டி எடுத்து காய்கறி வாங்க சென்றுவிட்டார்.அண்ணன் எப்போதும் காலையிலேயே எழுவான் எனறாலும் இன்று ஏனோ அலுவலக வேலை இல்லாமல் தொலைகாட்சியில் மூழ்கி இருந்தான். அம்மா எங்கே.காலை நேரம் அம்மா முகம் பார்த்து அவள் பொன் இதழ் பூக்கும் புன்னகை பார்த்தால் தான் என் நாள் விடியும்.இன்று விடுமுறை என்பதால் சறற்உ தாமதமாக எழுந்தேன்.இன்று என்ன வீட்டில் இத்தனை ஆரவாரம் என்றுஅம்மா தேடி சமையலறை புகுந்தேன்.

அவள் மும்மரமாய் சமைத்துக்கொணட்டிருந்தாள்.அவள் முதுகில் சாய்ந்து அனைத்தபடி காஃபி தரியா மா என்றேன்.அதே மாறாத புன்னகையுடன்…என் கன்னம் வருடி உட்காரு மா தரேன் என்றாள்.சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்ருந்தேன்.புது பருத்தி புடவை, பூ முடித்த கொண்டை, உச்சியில் குங்குமம்,கண்களில் கருணை.ஜனனி ஜனனி என் அடி மனத்தில் பாடல் ஒளித்தது.

அம்மா தான் எத்தனை எளிமை.காஞ்சி பட்டு இருந்தாலும் பருத்தியே அதிகம் விரும்புவாள்.அளவான நகைகள் போட்டிருப்பாள ஆனால் எப்போதும் புன்னகை அணிந்திருபபாள்.மங்களகரமான முகம்.எடுப்பான மூக்கு அதற்கு ஏற்ற மூககுத்தி..காது ஒட்டிய காதுபூ.கைகளில் இரட்டை வளையல்..புடவை கட்டும் நேர்த்தி..உண்மையில் அவளால் தான் புடவைக்கு  அழகு.என் அப்பா பெண் பார்க்க சென்ற அன்று அம்மாவை பார்த்ததும் அத்தனை பேர் மத்தியிலும் சம்மதம் சொன்னாராம்.அதை சொல்லி சொல்லி சிரிப்பாள் அத்தை.அம்மாவை பார்க்கும் போது அது அதிசயமாய் எனக்கு தோன்றவில்லை.வெளி அழகு மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் பேரழகி அம்மா.மூன்று தம்பிகள் ஒரு தங்கை என் அப்பா உடன் பிறந்தவர்கள். இன்று வரை அவர்கள் அண்ணி அண்ணி என்று சுற்றி வருவதும் அவர்கள் பிள்ளைகள் மீனாம்மா மீனாம்மா என்று அன்பு காட்டுவதும் அம்மாவின் குணம் சொல்லும்.

இப்போதெல்லாம் ஏனோ அம்மாவிடம் ஒரு ப்ரத்யேக அன்பு பொங்குகிறது எனக்கு.அவளை பிரிந்து வேறொரு வீடு புகப்போகிறேன் என்பதாலோ என்னவோ.புகுந்தவீட்டில் என் அம்மா போலவே இருக்க வேண்டும் என்று மற்றும் அவ்வப்போது தோன்றும்.எத்தனை விட்டுகொடுத திருக்கிறாள் அம்மா.அவள் படிப்பு பற்றியோ அவள் தோழிகள் பற்றியோ அவள் விருப்புவெறுப்புகள் பற்றியோ அதிகம் சிந்தித்தது இல்லை.இரண்டு நாட்கள் முன்பு தான் அவளிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.அவளின் நகைகளோடு புடவைகளோடும் குணங்களோடு சில நினைவுகளையும் சேர்த்துக்கொண்டேன்.

“அம்மா நீ டீச்சர் டிரெய்னிங் பண்ணீங்க தெரியும்.ஏன் மா வேலைக்கு போகலை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.