(Reading time: 9 - 17 minutes)

நெஞ்சில் ஆணி அடித்து உட்கார்ந்தது அவள் வாழ்க்கை தத்துவம்.உண்மையில் அவள் அப்படி தான் வாழ்கிறாள்.அவள் செய்யும் சிறுசிறு வேலைகளிலும் அவள் பளிச்சிடுவாள்..ஒரு வேளை ஒரு நாள் சோம்பி உட்கார்ந்தது இல்லை.ஒரு அழகான நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறாள்.எத்தனை உள்ளது அவளிடம் கற்க.பலவித நினைவலைகள் சூழ சுடசுட கஃபி கொண்டு கொடுத்தாள்.அவள் கைபற்றி “அம்மா நன்றி”என்றேன்.

சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு போனாள்.இப்படி ஒரு அம்மா வயிற்றில் பிறந்தது எண்ணி பெருமைபட்டுக்கொண்டு என் தினசரி கடமைகள் முடித்துவந்தேன்.சமையல் வாசம் ஆளைத்தூக்கியது.அம்மா சமையல் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.நாக்கில் சுவை அரும்புகள் விழிக்க அனைவரும் ஒன்றாய சேர்ந்து உண்டோம்.அதற்குள் அத்தை சித்தப்பா எல்லாரும் வந்து கூடினர்.இது என்ன இன்று இவ்வளவு கொண்டாட்டம் என்று சற்று ப்ரமித்தேன்.என் அத்தை மகள் அம்மாவின் கைகுலுக்கி கன்னத்தில் முத்தமிட்டு மீனாம்மா ஹாப்பி பர்த்த்டே என்றாள்.என்னுள் ஒரு மின்னல்.அட ஆமாம் இன்று அம்மா பிறந்தநாள்.ஐம்பது வயது முடிந்திருந்தது அம்மாவிற்கு.எப்படி மறந்தேன் தெரியவேயில்லை.

அத்தனை பேர் முன்னிலையில் நான் மறந்ததை காண்பித்துக்கொள்ள வெட்கி அம்மாவிடம் தனியாக பேசி வாழ்த்து கூறி மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.அது அன்று அவ்வளவு சுலபமாய் நடப்பதாய் இல்லை.எப்போதும் அவளை சுற்றி ஒரு கூட்டம்.அவளும் வந்தவர்களை கவனிப்பதில் மும்மறமாய் இருந்தாள்.அண்ணி உங்க பிறந்தநாள் ஸ்பெஷல் லா ஹல்வா செய்து தாங்க…மீனாம்மா உங்க கையால பாயசம்….அண்ணி அந்த ரோஸ்ட் உங்கஸ்பெஷல் ப்ளீஸ்….ஆளுக்கொரு மெனு….பம்பரமாய் சுழன்றாள்.அவர்களும் தங்களால் ஆன உதவிகள் செய்தார்கள என்றாலும் அம்மா பிறந்தநாள் அன்று தான் நிறைய வேலை குவிந்தது அவளுக்கு.அந்த அலுப்பு அவளுக்கு சற்றும் இல்லை.அது எப்படியோ தெரியவில்லை.

அன்றைய பொழுது வெகு உற்சாகமாக இருந்தது.மாலை நேரம் அவரவர் விடை பெற அப்பாடி எப்படியோ அம்மா தனியாவாள்.பேசிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்க.அப்பா எங்கள் அனைவரையும் கோவிலுக கு கிளம்ப சொன்னார்.மகிழ்வுந்தில் அம்மா பக்கத்தில் என் தம்பிஅமர்ந்துவிட பேச முடியாமல் போயிற்று.என் குடும்பம் தான் என்றாலும் என்னை கிண்டலடிப்பார்கள் என்று அவர்கள் முன் கூட அம்மா பிறந்தநாளை நான் மறந்தது காட்டிக்கொள்ளவில்லை.கோவில் முடித்து வீடு திரும்பும் போது இரவு உணவு தயாரிப்பிலிருந்து அவளை விடுவிக்க எணணி..வெளியில் சாப்பிடலாமா என்றேன்.அதற்கு என்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.