(Reading time: 10 - 20 minutes)

 

தையெல்லாம் ஏற்கனவே அறிந்திருந்த விஜயின் பெற்றோர் அமைதியாக புன்னகைத்தனர்.

உங்களுக்கு என்று எதோ சாரதா கேட்க தொடங்க, கிருஷ்ணனின் அர்த்தமான பார்வையை புரிந்துகொண்ட அவரின் துணைவியார் பொண்ண பாக்கலாமா என்று பேச்சை திசை திருப்பினார்.

சாவித்திரி சுரேஷை பார்க்க ,இதோ கூட்டிட்டு வர சொல்ற மா என்று உள்ளே சென்றான் .

நீல வண்ணத்தில்  சிறு சிறு தங்க நிற பூக்கள் இருந்த சேலையில் , மெல்லிய ஒப்பனையுடன் கடல் அரசியை போல இருந்த சங்கீதாவை பவித்ரா அழைத்து வந்தாள் .

அனைவரையும் பொதுவாக பார்த்த படி கரம் கூப்பி வணக்கம் சொல்ல , இங்க வந்து உக்காருமா என்று பரிவுடன் சொன்னார் நீலவேணி . தானாக சங்கீயின் பார்வை சாவித்ரியின் பக்கம் செல்ல அவர் தலை அசைவில் சம்மதம் சொன்னார் .

மெல்ல சென்று நீலவேணியின் அருகில் அமர்தாள் .ஒரு சில நிமடங்கள் மௌனத்தில் செல்ல, அதை கிழிப்பது போல சாரதாவின் கேள்வி வந்தது .அந்த கேள்வி மௌனத்தை மட்டும் கிழிக்க வில்லை சாவித்ரியின் மனதையும் தான் .

சாவித்ரியின் முகம் அடிபட்ட உணர்வை பிரதிபலிக்க , மூன்று மகன்களின் கண்களிலும் கோபம் தெரித்தது.

சங்கீதாவின் கண்கள் மெல்ல குளமானது .

சாரதா என்ன பேச்சு இதல்லாம் என்று கிருஷ்ணன் அதட்ட , இல்ல அண்ணா நம்ம குடும்பத்துல இருகரவங்களுகெல்லாம் பதில் சொல்லணும்ல அதான் என்று எதோ சொல்ல தொடங்க ,

சட்டென சுதாரித்த சாவித்திரி எப்போதும் போல் மிடுக்குடன், இருக்கட்டும் சார் இதல்லாம் இப்பவே பேசறது நல்லது . உங்களுக்கு என்ன கேக்கணுமோ கேளுங்க.

இல்ல உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு வெளிய எல்லாரும் சொன்னாங்க அதான் , இந்த பசங்க , உங்க குடும்பம் என்று இழுக்க, சுதர்சன் சார் என்று சுரேஷும் ,சாரதா என்று கிருஷ்ணனும் கர்ஜித்தனர் .

சுதர்சன்,நான்  எல்லாத்தையும் பையனோட அப்பா அம்மா கிட்ட தெளிவா சொல்லிட்டேன்  மேடம் .

அதற்குள் கிருஷ்ணன் , எங்களுக்கு எல்லாம் தெரியுங்க நீங்க எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவசரமாக.

கண்களில் வழிந்த நீரை சட்டென்று துடைத்த சங்கீதா  அம்மா இதுக்கு தான் இதலாம் வேணாம்னு நாங்க அப்பவே சொன்னோம் , நாங்க உங்க கூடவே இருந்திடறோம்மா   எங்களுக்கு நீங்க தான்மா முக்கியம் நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம் என்றாள் அழுத்தமான குரலில்  .

ஒரு பெருமூச்சுடன் தன் நாற்காலியில் இருந்து எழுந்தவர் ,வாங்க என் குடும்பத்தை காட்ரேன் என்று இந்த வீட்டின் ஒரு புறமாக இருந்த அந்த சிறிய கேட்டை திறந்து கொண்டு பக்கத்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கே மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தவர்களை காட்டி இதோ "என் குடும்பம் " என்றார் பெருமையுடன் . அதை பார்த்த சாரதா பேச வார்த்தையின்றி திகைத்து நின்றாள்.

அங்கே இருந்த மாற்று திறனாளி குழந்தைகளும் , இறைவனையே பெற்றோராய் கொண்ட பிள்ளைகளும் அம்மா என்று கத்தி கொண்டு ஓடி வந்தார்கள் .

அனைவரிடமும் சிறிது நேரம் செல்லம் கொஞ்சிய சாவித்திரி , செல்லங்களா சில விருந்தாளிங்க வந்திருகாங்க நான் அவங்க கூட பேசிட்டுவரேன் அது வரைக்கும் சமத்தா விளையாடுங்க என்று அவர்களை அனுப்பி விட்டு , அதிர்ச்சியோடு நின்று இருந்த சாராதவை பார்த்து புன்னகைத்தார் .

இப்ப உங்க கேள்விக்கு பதில் கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன் .

ஹ்ம்ம்ம் .. சின்னவயசுல என்ன யாரோ ஒருத்தர் என்ன இந்த இல்லத்துல கொண்டு வந்து சேர்த்தாருனு  பத்மா அம்மா சொல்லுவாங்க  , ஸ்காலர்ஷிப்ல  படிச்சேன். நல்ல வேலை கிடைச்சுது.

 அம்மா போன அப்புறம் அவங்க பொறுப்பை நான் எடுத்துகிட்டேன் .  சில நல்ல உள்ளங்களும் செய்த உதவியில இந்த இல்லத்தை எந்த குறையும் இல்லாம நடத்திட்டு வரேன் .

நீங்க கேடீங்கள கல்யாணம் பண்ணிகலயானு ,எனக்கு தான் ஆண்டவன் வரமா  இவ்ளோ குழந்தைங்கள குடுத்து இருக்கானே அப்புறம் எதுக்குங்க  கல்யாணம்  என்றார் கம்பீரத்துடன் ..

கிருஷ்ணனின் பார்வையின் பொருளை உணர்தவாறு சாரதா இரு கரம் கூப்பி கண்களில் குற்ற உணர்வுடன் சாவித்ரியை பார்க்க,அவரின் தோலை ஆதரவாய் பற்றியபடி தொடர்ந்தார் ..

இந்த சமுதாயம் சாபமா நெனச்சி  தூக்கி போட்ட வரங்கள பாத்துக்கற எங்கள அதே சமுதாயம் வேற மாதிரி பாக்கும் ..ஹ்ம்ம் ஆனா அந்த நிலைமை என் பசங்களுக்கு வர  கூடாது என்று முடித்தார் ஒரு பெருமூச்சுடன்  .

சுரேஷ் ,எங்க அம்மா மட்டும் இல்லேன்னா நாங்க என்னைக்கோ பூமிக்குள்ள போய் இருப்போம்..எங்க எல்லாரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருகாங்க.. இதோ  சுபி அக்கௌன்டன்ட், பவித்ரா ஸ்கூல் டீச்சர் , சங்கீ காலேஜ்ல பேராசிரியர், எங்க கடைக்குட்டி பிரியா பல் மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கறா என்று அனைவரை பற்றியும் கண்களிலும் முகத்திலும் பெருமையுடன் கூறினான்  .

ரத்த சம்பந்த பட்டவங்க எல்லாம் சேர்ந்தது தான் உங்களுக்கு குடும்பமா தோணலாம் ஆனா எங்க எல்லோரோட பாச சங்கிலியால  பிணைக்க பட்டது தான் இந்த  குடும்பம் .இதுதான் 'என் குடும்பம்' என்றாள் சங்கீதா மெல்லிய ஆனால் தெளிவான குரலில்.

துவரை அமைதியாக நின்ற விஜய் ,

அக்கா என்றான்..

சற்றே அதிர்ச்சியோடும் வியப்போடும் சாவித்திரி அவன் பக்கம் திரும்ப ,உங்கள நான் அப்படி கூப்படலாம்ல என்றான் தயக்கமான குரலில் .

சின்ன புன்னகையோடு அவர்  தலை அசைக்க, உங்க குடும்பத்தோட  கௌரவத்துக்கும்,தகுதிக்கும் நான் இத கேக்ககூடாதுதான்  இருந்தாலும் எனக்கு உங்க பொண்ணு சங்கீதாவை கல்யாணம் செஞ்சி தருவீங்களா என்றான் ??

அவன் முகத்தில் தெரிந்த உறுதி அனைவரையும்  மகிழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கே கொண்டு செல்ல , விஜய் தொடர்ந்தான்.

நான் இத கேக்கறது சங்கீதாவா புடிச்சதால மட்டும் இல்ல, ஒரு மாமாவா உங்க பசங்களுக்கு எல்லாம்  எதாவது நல்லது செய்யணும்னு தான் என்றான் .     

This is entry #15 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.