(Reading time: 19 - 38 minutes)

ன் கல்யாணம்... ஜாதி...மதம்....ஸ்டேட்டஸ்...அப்டி இப்டினு எதுவும் கலக்காம அன்பால தொடங்கணும்னுதான் ஆசப்படரேன்.

அப்போ நீ ஏன் பசங்க சம்பளம் வேலை எல்லாம் சொல்றேன்னு கேப்ப ...இங்க அன்ப அடிப்படையா  வெச்சு ஏதும் தொடங்கல ...இது ஒரு கமிட்மென்ட்....அதுல அவங்களுக்கு ஜாதி...மதம்...ஜாதகம் லாம் முக்கியம்னா ....எனக்கு பையனோட தகுதி முக்கியம்...அவ்ளோதான்

இன்னிக்கு பெரும்பாலான இடத்துல கல்யாணம் மிகப்பெரிய வியாபாரம் ஆயிடுச்சு...உங்க பொண்ணு அனுபவத்துக்கு சம்பளம் கம்மியா இருக்குனு நேரா கேட்டவங்களும் இருக்காங்க. பையனுக்கு வீடு வாங்கணும்னு ஆச....அதான் வேலைக்கு போற பொண்ணா பாக்கறோம்னு சொன்னவங்களையும் பாத்துருக்கேன்...

எங்களை விட வசதி ரொம்ப கொறஞ்சவங்க...பணம் இல்லனு நா அவங்கள குறைவா மதிப்பிடல. பொண்ணுக்கு நல்லா சமைக்கத்தெரியனும் ...வேலைக்கு போனும்....நீங்களே கல்யாணம் பண்ணிடுங்க....ஒரு பொண்ணுதான ....நல்லா நகையும் போட்டுடுங்கனு சொன்னவங்களையும் பாத்துருக்கேன்....இல்ல இதையே பணக்காரங்க கேக்கலாம்னு சொல்லல....சமூகத்துல ஒரே தரத்துல இருக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் உதவலனா எப்படி.

மறுபடியும் சொல்றேன்....நாம ஊர்ல இப்போ கல்யாணம் ஒரு பெரிய வியாபாரம் ....இங்க எல்லாருக்கும் தான் நெறைய லாபம் பாக்கணும்னு ஆச.....அதான்...எல்லாரும் தன்னை விட உயரமானத தேடி போறாங்க....

நீ பேசுறத கேட்டா ஏற்பாட்டு திருமணம் பொய்னு சொல்றமாதிரி இருக்கு....

ஒரு கல்யாணத்தோட சக்ஸஸ் அது எப்படி நடந்துச்சுனு இல்ல...அத சம்பந்தப்பட்டவங்க எப்படி எடுத்துட்டு போறாங்கன்னு இருக்கு....

ஆனா இந்த சமூகம் மாறாதே மது....இங்க எல்லாமே இப்படித்தான்....ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்னு நீ படிக்கலயா...

அந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் இப்போ மாற்றம் வந்துருக்கு வாணி.......யார் என்ன சொன்னா என்ன ... நா எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னு... அப்படிங்கிற எண்ணம் இப்போ கொஞ்சம் பரவலா வளர ஆரம்பிச்சிருக்கு

இதுவரைக்கும் நான் சொன்னது எல்லாம் என் கருத்து ...என்னோட நிலைப்பாடு....என்னோட முடிவு....இதுதான் சரினு நா யார்ட்டயும் வாதாடல ....அப்புறம் யாரோ வாழ்றதுக்கு....நா வரையறை சொன்னமாதிரி ஆயிடாதா...

எனக்கு இது சரி....இந்த முறைல நா திருமணம் செஞ்சுக்க விரும்பல....ஆனா மத்தவங்க செஞ்சுக்கறாங்க அவங்களுக்கு எதிர் பார்த்தது அமையுதோ இல்ல....அமைஞ்சத ஏத்துக்கறாங்களோ...எல்லாமே அவங்கவங்க தேர்வுதான்....நாம எடுக்கிற முடிவுக்கு நாம மட்டும்தான் பொறுப்பு...

ஒரு வேளை உங்க அப்பா அம்மா அந்த சத்தியத்தை திருப்பி வாங்குனா ....நீ கல்யாணம் பண்ணிக்குவியா...உனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தர பாத்து....

நாளைக்கு என்ன நடக்கும்னே தெரில.....அதனால ரொம்ப யோசிக்கல எதிர்காலத்தை பத்தி....இப்போதைக்கு என் முடிவு இது...என் வேலைல நா போகஸ் பண்றேன்....அதோட எங்க அப்பா அம்மாக்கு பண்ணி குடுத்த சத்தியத்தை திரும்ப வாங்கணும்னு இதெல்லாம் பண்ணல...

என்ன பத்தி நீ கவலைப்படாத ....நா சந்தோஷமா இருப்பேன்....ஏனா நா என்ன ரொம்ப நம்புறேன் ....நேசிக்கிறேன்....

அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்த வாணிக்கு கண்களில் நீர் துளிர்த்தது....சரி கிளம்புவோமா ...என்றாள்....

வாணியை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு தன் விடுதி நோக்கி பயணமானாள் மது.....விடுதி வாசலில் வண்டியை நிப்பாட்டியவுடன் ....அஜய்யிடம் இருந்து அழைப்பு வந்ததது ....."மது, நம் மேலதிகாரி...பிளான் ல எந்தவித தப்புமில்லனு சொல்லிட்டாரு... அவர்கிட்ட இருந்து மெயில் வரும்... திங்கக்கிழமை ஆபீஸ் போன ஒடனே கிளைண்ட்க்கு அனுப்பிடு "....என்றுரைத்து அழைப்பை த் துண்டித்தார்.

தான் சமர்ப்பித்த திட்டத்தில் குறைவொன்றும் இல்லையென்பதை அறிந்தவள் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே விடுதிக்குள் வேகமாக நுழைந்தாள்.

ன்று நம் நாட்டில் மது போல நிறைய பெண்கள் இருக்கின்றனர்.பெரும்பாலான ஆண்களுக்கும் இது போன்ற போராட்டங்கள் அவர்களின் திருமண வயதில் ஏற்படுகின்றது.

இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சிறு சிறு மகிழ்ச்சிகளுக்காக உயிரையே தருவார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகள் தங்களுக்கென ஒரு பார்வை கொண்டு அந்த வழியில் செல்ல முயன்றால் ஏனோ அதை அவர்கள் தங்களுக்கான தோல்வியாகவே பார்க்கின்றனர். அதே சமயம் அவர்களின் மனம் நோகாமலிருக்க பல பிள்ளைகள் தங்கள் விருப்பங்களையும் எண்ணங்களையும் விட்டுக்கொடுக்கின்றனர். அதே சமயம் சில பிள்ளைகள் தங்கள் மனம் சொல்வதை மட்டும் கேட்கின்றனர். இதில் சரி தவறென்று ஆராய முற்படுமுன் ஒன்று மட்டும் நிதர்சனம். இருவரில் யாரோ ஒருவர் கிடைத்ததை ஏற்கவே வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை மனித இனம் வளர திருமணம் மிகவும் முக்கியமானது.வெளிநாடு போன்று இங்கு கிடையாது. அதனால்தான் இந்தியப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வந்ததை ஏற்றுக்கொள் என்று சொல்கின்றனர். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல் மண வாழ்வு அமையும். சிலருக்கு அது கொஞ்சம் ஏமாற்றதோடு தொடங்கி நன்றாகும் ...அல்லது ஏமாற்றம் கூடவே வரும். ஜாதி, மதம், ஜாதகம் போன்ற சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் இந்த நிலை முற்றிலும் மாறுமா என்று கணிக்கமுடியாது.ஆனால் நிச்சயமாகக்குறையும்.

 

This is entry #64 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - லக்ஷ்மி சங்கர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.