(Reading time: 14 - 27 minutes)

வினய் பற்றி விசாரித்த நல்லசிவத்திற்கு, ஏகப்பட்ட அதிர்ச்சி, சொல்லிக்கொள்ளும்படி ஒழுக்கமானவனாக அவன் இல்லை. நிரந்திர உத்யோகமில்லை, வெளிநாடு செல்ல வாங்கிய கடன் வேறு. இதையெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தாக்ஷி கேட்பதாயில்லை, வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டுமென்ற கனவு அவள் கண்களை மறைத்தது. இதைத்தாண்டி, குறிக்கப்பட்ட கல்யாண நாளும் வந்தது.. வினய் குடும்பம் அடக்குமுறையையும் அடாவடித்தனத்தையும் கையாண்டனர், எனினும் பூர்ணாவும் நல்லசிவமும் பொறுமைக்காத்தனர். அந்தக் கல்யாணப்பந்தலில் அமர மாலையும் கழுத்துமாய் தாக்ஷி வந்து நின்றபோது, ஒரே கூச்சல், ஒரு பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு காவலர்களோடு வந்து நின்றாள், அவள் வினையின் மனைவி. அதற்கு சாட்சியாய் அவள் இடுப்பிலிருந்த குழந்தை. தாக்ஷியின் முன் அவர்களது கல்யாண புகைப்படங்ககள் வீடியோ பதிவுகள் அனைத்தும் வீசியெறிந்தாள் அந்தப் பெண். நல்லசிவம் விசாரித்து உண்மையை அறிந்துகொண்டார். காவலர்கள் வினையைக் கைது செய்தனர். வினய் குடும்பம் அரவமில்லாது மண்டபத்தை விட்டு வெளியேறியது. தாக்ஷி சிலைபோல் அங்கேயே நின்றாள். “என்ன நடந்தது இங்கே, ச்சீ.. இவன் இவ்வளவு கேவலமானவனா? என்ற அதிர்ச்சி மேலிட அசைவற்று நின்றாள் அவள்.

தீடிரென்று நெஞ்சைப்பிடித்துக் கொண்டு சரிந்தார் நல்லசிவம். அவரை ஆசுவாசப்படுத்திய அவரது உயிர் நண்பன் முருகனிடம் தாழ்ந்தக் குரலில், “முருகா..கல்யாணம்  நின்னதா அறிவிச்சிடு” என்று சொன்னார்.

முருகன் மென்மையான குரலில் சொன்னார், “அவசர படாதே, சிவம், இன்னும் முகூர்த்ததிற்கு நேரம் இருக்கு, தொழில் மற்றும் தாக்ஷியின் படிப்புன்னு உன் சேமிப்பெல்லாம் கறைஞ்சிடிச்சு, போதாதற்கு வினய் குடும்பம் பண்ணின அலப்பறையில ஏகப்பட்ட கடன் வாங்கி இந்த கல்யாணம் பன்ற, இதை இன்னைக்கு நிறுத்திடரதால தாக்ஷிக்கு நல்லது நடக்காது, இன்னும் அவளோட வாழ்கையில் சிக்கல் அதிகரிக்கும். பொருள் நஷ்டம் போக தாக்ஷி வாழ்கை இன்னும் சிக்கலாயிடாதா?”

“இப்ப என்ன செய்யலாம்?” நடுங்கிய குரலில் கேட்டார் நல்லசிவம்.

கையில் வெண்னெய் வச்சுக்கிட்டு ஏன் நெயிக்கு அலையனும் சொல்லு, உரிமைப்பட்டாவன் “தருமன்” இருக்கான். பூர்ணா ஒரு வார்த்தை சொன்னா நிச்சயம் தட்டமாட்டான், நல்லவன் தாக்ஷியின் குணமறிந்து அவளை ஆளத்தெரிந்தவன். நீ சொன்னா, அவங்கிட்ட நான் பேசுறேன்!”

சிறிது நேரம் மௌனம் காத்த நல்லசிவம், “முருகா, தாக்ஷியோட அபிப்பிராயங்கள் வேற மாதிரி இருக்கு, இந்த பந்தத்தில் அவளை தினிக்க எனக்கு மனமில்லை, அவளோட சம்மதத்தை கேளு” என்றார்.

பூர்ணா கண்ணீருடன், “போதும், அவளோட முடிவுக்கு விட்டதால் தான் இந்த நிலைமை, முருகன் அண்ணன் சொல்வதுதான் சரியான முடிவு” என்று கண்ணீரைத்துடைத்துவிட்டு தருமனை நோக்கி நடந்தாள்.அடுத்த சில நிமிடங்களில் தாக்ஷியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினான் தருமன்.

உறக்கம் பிடிக்காது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்த தாக்ஷியின் கண்கள் அவளை அறியாது தருமனின் மேல் விழுந்து மீண்டது.

“அவளைவிட நல்ல உயரம், களையான முகம், கம்பீரமான தோற்றம். வினய் நல்ல நிறம் ஆனால் கெட்டப் பழக்கங்களால் உடல் கறுத்து ஊதி காணப்பட்டான், அலைபேசியில் தினமும் பேசும்போது தான் ஜிம்முக்கு போய் இளைத்துவிட்டதாக அவன் சொன்ன பொய், வினய் இந்தியா திரும்பியதும் அவனைப் பார்த்து அறிந்துக்கொண்டாள். அவனுடைய குணம் கருதி அவனை விட்டு விலகியே இருந்தாள். இருக்க இடம் கொடுத்தால் அவளை நெருங்க முயலும் அவன் எங்கே? தனக்கே உரிமையான பெண்ணை தீண்டாது அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி நின்ற இவர் எங்கே? அவளது உள்ளம் தான் செய்த தவறை உணர்ந்த்து. “எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காத்தவர் இவர், இவரையா நான் அவமானமாக கருதினேன்?”, அவளது உள்ளம் வெட்க்கியது.

இயல்பிலேயே நல்லக் குணமுடையவள் தாக்ஷி, தனியாக வளர்ந்தக் காரணத்தால் பிடிவாதம் அவளிடம் அதிகமிருந்தது. பூர்ணாவின் கண்டிப்பான குணத்தில் ஒழுக்கமாக வளர்க்கப்பட்டவள். கலங்கிய அவள் உள்ளம் தெளிந்தது.

தன் தாய்த்திரு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரனின் மகள் அவள், அந்த எண்ணம் மேலிட்டதும் அர்த்தமற்ற வெளிநாட்டுக்கனவுகள் அவளுள் கிழிந்துக் கொண்டது. ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் தன்னைக் கண்ணுக்கு கண்ணாக பாதுகாத்த தன் வளர்ப்பு தந்தை நல்லசிவத்தின் நலத்தில் மனம் சென்றது. அவருக்கு தன்னால் என்ன செய்ய இயலும் என்ற எண்ணம் தோன்றியதும், அவளது கண்கள் மீண்டும் தருமனின் மேல் விழுந்தது.

ருமன் தன்னுடைய உயர்ரக காரில் தாக்ஷியை அழைத்துவந்தான். அகண்டு விரிந்து பரந்திருந்த அரண்மனை போன்ற வீட்டை பிரமிப்புடன் கண் இமைக்காது பார்த்தாள் தாக்ஷி. இரண்டொரு நாளில் அவர்களது திருமண வரவேற்பு நடந்தது, நெஞ்சத்தில் வஞ்சமில்லா அந்த ஊர் மக்களையும் அவர்கள் வாய் வார்த்தைகளிலெல்லாம் புகழ்ந்து தள்ளிய “தருமன்” என்ற கரியமேனியன் அவள் உள்ளத்தை தன் உள்ளத்து அழகால் வென்றுவிட்டான். என்றால் அது மிகையாகாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.