(Reading time: 14 - 27 minutes)

டல் போன்று விரிந்த வயலையும் தோப்பையும் இதர சொத்துக்களையும் அதன் விவரங்களையும் தாக்ஷியை அறிந்துகொள்ள செய்தாள் தருமனின் தாய் வேதவல்லி. அவளுடைய கனிவான முகமும், பேச்சும் தாக்ஷியின் மனது அந்த வீட்டை விட்டு அகலாது கட்டிப்போட்டது. கல்யாண வரவேற்பு முடிந்து, குழித்து புத்தாடை உடுத்தி பூசை அறைக்குள் நுழைந்த மணமக்களை வாழ்த்திய வேதவல்லி, “தாக்ஷி, உங்க அப்பா படத்திற்கு தீபம் ஏற்று பின் இரண்டு பேரும் விழுந்து கும்பிடுங்க” , என்றாள் மென்மையாக.

வீராதி வீரன் நரசிம்மன் என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த உத்தமரின் படத்திற்கு தீப ஏற்றியவள் ஒரு கணம் அதிர்ந்து போனாள். தருமனை போன்று கரிய கம்பீரமான முகம். ஆக தன் தாய் மாமனை உரித்து வைத்திருக்கிறான் அவள் இதயத்தின் நாயகன் தருமன், இன்னும் அவனிடமிருந்து விலகியிருக்க அவள் ஒன்றும் கூறில்லாதவளில்லையே!

அறைக்குள் சிறிய வெள்ளி விளக்கு தீபமொன்று எரிந்தது. நேர்த்தியான பூ அலங்காரமும் அதன் மனமும் மனதை திண்றது. அறையின் உளளே நுழைந்த தருமன் அவளை எதிர்கொண்டான்.

“தாக்ஷி, உன் மன நிலைமை எனக்கு தெரியும், ஆனால் அம்மாவிற்கு தெரியாது, இதெல்லாம் அவங்க ஏற்பாடு, அவங்க முன்னால் நாம விலகி இருக்கிறதா காட்டிக்க கூடாது, அன்பா நெருக்கமா இருக்கிறது போல் நடிச்சா போதும்” குழந்தையாக முகத்தை வைத்துக் கெஞ்சிய அவனைப்பார்த்து புன்னகைத்தாள் தாக்ஷி.

“எனக்கு நடிக்க தெரியாது, வேனும்னா உங்கக்கிட்ட உண்மையா, அன்பா இருக்கட்டுமா?” இல்லை நீங்க வேண்டாம்னு நினைச்ச....,

இந்த வார்த்தையை அவள் முடிக்கும் முன்  அவன் தன் விரலால் அவள் வாயை மூடிவிட்டான். மெதுவாக அவளை இழுத்து தன் மார்போடு அனைத்துக்கொண்டான். அவள் உடல் நடுங்கியது புதைந்த அவள் முகத்தை நிமிர்த்தி, “தாக்ஷி பயப்படுறீயா..? தாபத்துடன் வந்தன வார்த்தைகள். “தாக்ஷி, என்னிடம் என்ன பயம் உனக்கு, நான் உன்னுடையவனில்லையா?”

இந்த வார்த்தையைக்கேட்டதும் அவளது அச்சங்கள் சிதறியது. வாழ்கையை என்றாவது ஒரு நாள் சந்தித்து தான் ஆக வேண்டும். இனிப்பான உறவுக்குள் அவள் கட்டுண்டு கிடக்கும் தருணம் தருமன் அவளிடம், “தாக்ஷி, என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”

தாக்ஷி தருமனை தன் மார்பில் புதைத்துக்கொண்டாள், தருமனின் அந்தக் கேள்விகளுக்கு, அவன் தர்மபத்தினி தாக்ஷி, வெரும் வார்த்தைகளில் பதில்சொல்லவில்லை....

 

This is entry #88 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.