(Reading time: 13 - 25 minutes)

தவை தாளிட்டுவிட்டு அர்ஜூன் அருகே அமர்ந்தவள் வெகு நேரம் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள், அவனை போதையில் தன்னிடம் அழைத்து வந்ததில் அவளுக்கு எள் அளவும் விருப்பம் இல்லை. ஒரு கெட்டப் பழக்கத்திலிருந்து அவனை மீட்டு மற்றொரு பழக்கத்தில் தள்ளுவதா? சோர்வாக கட்டிலை விட்டு எழப்போனவளின் கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டான் அர்ஜூன். அவன் முகத்தருகே குனிந்து அவனின் முனங்கலைக் கேட்டபோது அவளை இழுத்து அனைத்துக்கொண்டான், காதில் மெதுவாக ,”ரீட்டா ப்ளீஸ் இன்னிக்கு மட்டும், என் கூட  ஹேப்பியா இரு” என்றான். மீனாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, தாலிக் கட்டிக்கொண்டவளை அனைத்துக்கொண்டு எவளோ ஒருத்தியை நினைப்பது மீனாவிற்கு அருவெருப்பாய் இருந்தது.  திமிரி எழ நினைத்தாலும், அவன் பிடியிலிருந்து விலக முடியவில்லை, மீண்டும் விலக முயற்சிக்கும் போது, “ரீட்டா இன்னிக்கு என்னோட பெர்த்டே, இன்னிக்கு கூட உன்னை எனக்கு கொடுக்க மாட்டியா? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?” போதையில் தான் உளறுகிறான், அவனது கெஞ்சல் மொழி, தன் உயிருக்கினையாவனின் பிறந்தநாள் அவன் கேட்கும் போது அவளை விட சிறந்த பரிசாக எதை கொடுக்க முடியும்..ஏதும் பேசாது, அவனோடு கலந்து போனாள்…”

விடிந்து போதை தெளிந்து அருகே மீனாவை பார்த்ததும் அதிர்ந்து போனான் அர்ஜூன். அவர்கள் இருந்த நிலையே முதன் நாள் நடந்தவற்றை எடுத்துரைக்க, அவன் உள்ளம் குற்ற உணர்ச்சியில் வெந்தது. இதுவரை அவளை மிரட்டவும் துரத்தவும் அவனால் முடிந்தது காரணம் அவளை தொடாதவரை அது உடைக்ககூடிய பந்தமாக அவனுக்கு தோன்றியது, இன்று அவள் முழுமையாக அவன் மனைவி ஆகிப்போனாள், தன்னிடமிருந்து இரவு திமிரியவளை அடக்கி ஆட்கொண்டது ஞாபகம் வந்தது, உள்ளம் நொறுங்கிப்போனான். இன்னும் தாலிக்கூட பிரித்துக்கோர்க்கப்படாத நிலையில்.. மென்மையான அவள் முகத்தையும், மஞ்சள் சரடோடு மின்னிய அவள் தெய்வீகமான அழகும் அவனை ஏதோ செய்ய, தன்னை அறியாமலேயே அவளை ஒருமுறை இரசித்தவன், தன் மனம் செல்லும் திசையைக் கண்டு அதிர்ந்து சத்தமிடாது ஆடைகளை அணிந்து வெளியே வந்தவன் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான், அவன் மனம் குழம்பியது, ஒவ்வொருமுறை ரீட்டாவை நெறுங்கும்போதும் அவள் சொத்தை காரணம் காட்டி விலகிவிடுவாள். உண்மையில் ரீட்டாவின் காதலில் சுயநலமிருந்தது,  ஆனால் மீனா? அவளுக்கு அவன் செய்தது பச்சை துரோகம், இந்த நிகழ்வுக்கு பிறகு நிச்சயம் அவர்கள் விலகினாலும் அவள் யாரையும் மறுமணம் செய்யமாட்டாள் என அவனுக்கு தோன்ற, கண்முன் தெரியாமல் காரை ஓட்டி வளைவில் திரும்பும்போது ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளானான்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டான். இதயம் பதற ஓடி வந்தாள் மீனா, சுகுமார் அவளுக்கு துணையாக இருந்தான். கைகால்களில் எழும்பு முறிவு, இடுப்பெழும்பு சேதமென கந்தல் துணியாக வந்தவனை, அறுவை சிகிச்சை செய்து கொண்டுவந்து போட்டனர். கண்ணுக்கு கண்ணாக கவனித்துக்கொண்டாள் அவள். ரீட்டாவுக்கும் தகவல் போனது, பத்து நாள் கழித்து கையில் பூச்செண்டுடன் வந்தாள், சுகுமாரோ, மீனாவோ அவளை தடுக்கவில்லை, பூச்செண்டை  அர்ஜூன் அருகே வைத்தவள் பாதி உடலாய் சுருங்கிக்கிடக்கும் அர்ஜூனை காட்சிபொருளாய் பார்த்துவிட்டு அருகே இருந்த மருத்துவரிடம் அவன் உடல்நலனை விசாரித்தாள், சுகுமார்  கண்களால் ஜாடை செய்ய சுகுமாரின் நெருங்கிய நண்பரான அந்த மருத்துவர், மிஸ்.ரீட்டா இவரோட இடுப்பழும்பு பயங்கர சேதம் அடஞ்சிருக்கு எழுந்து நடக்கவே ஒரு வருடம் மேல் ஆகலாம், மேலும் அவர் இடுப்பெழும்பு நொறுங்கியதால அவருடைய குடும்ப வாழ்கைகூட பாத்திக்கப்படலாம்” என்று கூறி நகர்ந்தார்.

உண்மையென நம்பிய ரீட்டா தன் வாழ்கையை சிக்கலாக்கிக் கொள்ளாது மெதுவாக நழுவினாள். இதை ஒருவாறு உணர்ந்த மீனாவிற்கு மனம் நிம்மதி அடைந்தது. மயக்கத்திலிருந்த அர்ஜூனின் தலையைக்கோதியவாரே அவன் அருகில் உறங்கிப்போனாள். ஆனால் அர்ஜூன் உறங்கவில்லை, அந்த விபத்து அவனது உடலை சிதைத்தது, ஆனால் உள்ளத்தை தூர்வாரி தெளிவு படுத்திவிட்டது…

மாதங்கள் ஓடிப் போனது…மீனாவின் கவனிப்பில் அர்ஜூன் வேகமாக குணமாகினான், அவனது அறிவுரைப்படியும் சுகுமாரின் துணையோடும் அவனது தொழில் சாம்ராஜ்ஜியம் சரியாது கவனித்துக்கொண்டாள் மீனா.

அவன் தும்மலிட்டாலும் இருமினாலும் வீட்டின் எந்த மூலையிலிருந்தும் ஓடி வரும் அவள் அழகை இரசிப்பான், அவளுடன் இணைந்து நடை பழகும் போது அவன் விரல்கள் அவள் இடுப்பை துளாவ அந்த தீண்டலில் சிவந்துவிடும் அவள் முகத்தைப் பார்த்து இரசிப்பான்…அர்ஜூன். ஒரு பௌர்ணமி இரவு, அர்ஜூனின் தங்கை மனுவுக்கு இரட்டைக் குழந்தைப்பிறந்த செய்தி வர, அதை அளவில்லாத மகிழ்சியோடு அர்ஜீனிடம் அவள் கூறியபோது, குறுகுறுவென்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், தன்னோடு அவளை அனைத்துக்கொண்டான், “அத்தான் உடம்பு சரியாகட்டுமே” என்றவளை, தாபத்தோடு அனைத்து அவள் இதழோடு தன் இதழை பொருத்தினான். அவன் வலக்கரம் கட்டிலின் அருகே உள்ள விளக்கை அனைத்துவிட , இருவரின் நிலையைக்கண்ட அந்த பௌர்ணமி நிலவும் வெட்கி மறைந்தது…அர்ஜூனின் மார்பில் தன்னை புதைத்துக்கொண்டாள் மீனா… அவர்களது காதல் வாழ்கை அங்கிருந்து தொடங்கியது.

 

This is entry #104 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – காதலியா மனைவியா?

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.