(Reading time: 14 - 27 minutes)

ண்ணைக்கு நான் வாங்குகிற எல்லா வெற்றிக்கோப்பைகளுக்கும் உரியவர்... தமிழ் ஆசிரியை சரோஜினிதான். அவுங்க ஒரு கூட்டு குடும்பத்துக்கு தலைவியா இருந்த போதும் என்னைப்போல மாணவர்கள் போட்டிகள்ல ஜெயித்து பள்ளிக்கு பேர் எடுத்து தரணும்னு ராத்திரி ரெண்டு மூணு மணிவரை முளிச்சிருந்து பல புத்தகங்கள் படிச்சு எங்களுக்கு குறிபெடுத்து தருவாங்கங்கிற விஷயம் இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?

“எல்லோரையும் கெட்டவார்த்தையால காமடியா திட்டற பிசிக்ஸ் வாத்தியார் கணேசன் சார் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு போன வருஷம் அப்பாவை பறிகொடுத்த ஜமாலையும் கூலித்தொழிலாளி மகன் சிலுவைராஜையும் ..அவங்க படிப்பு உடை புத்தக செலவுகளுக்கு முழுமையா தத்தெடுத்திருக்கறது எனக்கே கூட சமீபத்திலேதான் தெரிஞ்சுது!  தெரியாம எத்தனை செய்திருக்கிறாரோ?

“வகுப்பிலே ஆங்கிலத்திலே பாடம் நடத்தறதில்லேன்னு நான் குற்றம் சாட்டின ஜான் வாத்தியார்தான் லைப்ரரிக்கு நூறு புத்தகங்களுக்கு மேலே வாங்கிதந்தவர். எங்க  ஸ்கூல்ல கம்ப்யூடர் இல்லாத போதும் எங்க எல்லா ஸ்டுடண்ஸுக்கும் போதுமான கம்ப்யூடர் அறிவை வந்த ரெண்டு மாசத்திலேயே உண்டு பண்ணினது  இந்த பத்மாவதி மேடம்தான். எப்படி  தெரியுமா? முறைவச்சு  மாணவர்களை லன்ச் இடைவேளையிலும் ஆசிரியர் வராத வகுப்பு சமயங்களிலும் பக்கத்திலிருக்கிற கம்ப்யூடர் இண்டர்னட் செண்டர்களுக்கு தன் சொந்த செலவில் கூட்டிபோய் சொல்லித் தந்தாங்க.. இப்படி நான் பட்டியல் போட்டு கொண்டே போகலாம்.

 “அப்ப எதுக்கு இந்த வகுப்புன்னு தோணலாம்.  நிறைய ஆசிரியர்களுக்கு தெரியும் நான் சின்ன வயசிலேயே தந்தையை இழந்து அம்மா நிழல்ல மட்டுமே வளர்றவன்னு. எனக்கு எங்கப்பாவை பத்தி அதிகம் அம்மா சொன்னதில்லை. ஆனா இந்த தடவை மாநில அளவிலே பரிசு வாங்கினப்போதான் அம்மா சில விஷயங்களை சொன்னாங்க. எங்கப்பா ரொம்ப ரொம்ப நேர்மையான  ஆசிரியரா இருந்தவராம். ஓரோர் மாணவனையும் தன் பிள்ளைகளாகவே பாவிச்சவராம். கல்விபணியிலே நிறைய திட்டங்கள் எல்லாம் வச்சிருந்தாராம். ஆனா ஒரு பெரிய நோயில் அகால மரணம் அடைஞ்சிட்டார். அவர் கடைசியா எங்கம்மா கிட்ட என்னையும் அந்த அற்புத ஆசிரியபணிக்கு அர்ப்பணிக்க கேட்டிருக்கிறார். ஆனா  நான் படிப்பிலே புலியா  இருந்த காரணத்தினால்  எங்கம்மா  எனக்கு ஆசிரியப் பணியில  நாட்டமில்லாம வேற  கனவுகள்தான் இருக்கும்னு நினைச்சிருந்தாங்களாம்.

“அப்போதான் நான் உங்களை எல்லாம் நினைச்சுப் பார்த்தேன்..  ஒரு  சில பலஹீனங்களாலும் தவறான செய்கைகளாலும் உலகிலேயே மிக மிக புனிதமான இந்த சேவைக்கான சரியான அங்கீகாரம் இந்த நவீன காலத்திலே பதிவு செய்யப்படவில்லையோன்னு! நானும் பெரியவனானப் பிறகு இந்த புனித பணியில் ஈடுபட்டு  அதை மாற்ற ஆசைப்பட்டேன். அதை நம்ம பள்ளியிலிருந்தே துவங்க நினைச்சேன். அதுக்கான சின்ன முயற்சிதான் இந்த வகுப்பு. எனக்கு முன்னோடிகளாக நீங்க மாறுங்க. எனக்குபிறகு  வர தலைமுறைக்கு நான் முன்னேடியா இருப்பேன். வணக்கம் நன்றி “

மொத்த ஆசிரியர்களும் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினார்கள்

This is entry #145 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி நாட்கள்

எழுத்தாளர் - சித்திக்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.