(Reading time: 18 - 35 minutes)

ஷூஷூ பேசாம அமைதியா வா மாமா..என மெதுவாய் அவனை அழைத்துச் செல்ல ஏற்கனவே பொறுமையிழந்திருந்தவன் அவள் கைப்பற்றி முன்னிழுத்து கண்களை திறக்க மொத்த வீடும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜொலிக்க தங்க பதுமையாய் அடர் அரக்கு வண்ண க்ரீப் புடவையில் அவன் பிடியில் தலைகுனிந்திருந்தாள் அவனின் சஹி..

சஹி…

முகத்தில் வியர்வைத் துளிர்த்திருக்க மெதுவாய் அவனை ஏறிட்டாள்..

காலையிலிருந்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் களைத்திருந்தவன் பொறுக்கமாட்டாமல் பெண்ணவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்ள அவளோ இரு விழிகளையும் இறுக மூடிக் கொண்டாள்..மென்மையாய் இமைகளில் இதழ்பதிக்க பட்டாம்பூச்சியாய் இமைதிறந்து அவனை கண்டாள்..சில நொடிகள் அவன் அணைப்பிலேயே கரைய பின் மெதுவாய் விலகியவள்,

வா மாமா சாப்டலாம்..

பசியே இல்ல டீ பொண்டாட்டி.என குழந்தையாய் உருக சஹானாவோ ஒவ்வொரு நொடியும் தன்னிலை மறந்து கொண்டிருந்தாள்..உனக்காக நானே சமைச்சேன் கொஞ்சம் சாப்டு மாமா..என கட்டாயமாய் அவனை உணவு மேஜையில் அமர்த்த அவனோ தன்னவளை இடைப்பிடித்து தூக்கி மேஜை மேல் அமர வைத்தான்..சஹானா தான் செய்த ப்ரைட் ரைஸ் சப்ஜியை பரிமாற அவளுக்கு ஊட்டியவாறே தானும் சாப்பிட்டான்..சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தவன் சஹானா அங்கு இல்லாததை கண்டு தனதறைக்குச் சென்று பார்க்க கட்டிலின் ஓரமாய் அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தாள்..

அவள்நிலை உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அவளருகில்சென்று அமர்ந்து அவள் கழுத்து வளைவில் முகம்பதித்து கையை சுற்றிக் கொள்ள வெட்கம் கலந்த பதட்டம் அவளை இன்னும் இன்னும் அழகாய் காட்டியது..சஹி பேபி..

ம்ம்ம்

என்ன இவ்ளோ சைலண்ட் ஆய்ட்ட என்னாச்சு??

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..

ம்ம் அப்படியா ஆனா உன் முகம் எனக்கு வேற ஏதோ ஒண்ணு சொல்லுதே??

பெண்ணவள் அமைதிகாக்க ஒய் என்னடீ????

அவன்புறம் திரும்பியவள் அவன் கண்களை ஏறிட என்னவென புருவமுயர்த்தி அவன் கேட்க..

இல்ல மாமா இந்த கண்ல நா நிறைய ரியாக்ஷன்ஸ் பாத்துருக்கேன்..கேரிங்,அபெக்ஷன்,லவ் இன்னும் நிறைய ஆனா இன்னைக்கு மார்னிங்ல இருந்து நீ என்ன பாக்குற பார்வை நா இதுவரை பாத்தது இல்ல அதான் ஒருமாறி நெர்வஸா..எக்சைட்டடா சொல்ல தெரில..

அடடா இந்த சின்ன கண்ல இவ்ளோ விஷயமா??

நீ கிண்டல் பண்ணாலும் அதுதான் நிஜம்..

அவளை இன்னுமாய் தன்னோடு நெருக்கி அமர்த்தியவன்..சோ அதுக்காக தான் இந்த ப்ரிப்பரேஷன் எல்லாமா???என அவள் முகத்தை உயர்த்த ஆம் என தலையசைத்தாள்..

இது நம்ம லைப்போட முக்கியமான டெசிஷன் சஹிம்மா இதுக்கு நீ கண்டிப்பா ரெடியாதான் இருக்கியா??

மாமா ஏன் இப்படிலா பேசுற ஏன் நா நீன்னு பிரிச்சு பேசுற??உனக்கு எது இஷ்டமோ அதான் எனக்கும் மத்தபடிலா ஒண்ணுமில்ல மாமா..

நிச்சயமாய் இப்படி ஒரு பதிலை கார்த்திக் அவளிடம் எதிர்பார்க்கவில்லை..வசதியான குடும்பத்தில் செல்லமாய் எந்த பொறுப்பும் இல்லாமல் சந்தோஷமாய் வளர்ந்தவள் இன்று அவன் சந்தோஷம்தான் முக்கியம் என்கிறாள்..

மாமா நீ யோசிக்குறது எனக்கு புரியுது..என்னடா இவ்ளோ மார்டன் ஆன பொண்ணு இந்த விஷயத்தை இவ்ளோ ஈசியா சொல்றாளேநு தான நினைக்குற???நா எல்லா விஷயத்துலயும் மார்டன் தான் மாமா ஆனா உன் விஷயத்துல நா கடைஞ்செடுத்த பட்டிகாடுதான்..உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் உனக்கு பிடிக்கலனா எனக்கும் பிடிக்காது அத தவிர யோசிக்க ஒண்ணுமேயில்ல..என்றவளை கர்வம் கலந்த காதலோடு தன் தோள் சாய்த்துக் கொண்டான்..

சஹி லவ் யூ சோ மச்டா..என்னை இந்தளவு தெரிஞ்சு வச்சுருக்க உன்னால மட்டும்தான் முடியும்..நீ சொன்ன எல்லாமே கரெக்ட்தான் காலைல உன்னை அவ்ளோ பக்கத்துல பாத்தப்போ சத்தியமா நா நானாவே இல்ல..நிச்சயமா முதல்தடவையா உன்னை பார்த்த பார்வைல காதலையும் தாண்டின ஒண்ணு இருந்தது..ஒரு ஹஸ்பெண்டா உன்கிட்ட உரிமையெடுத்துக்கனும்னு நினைச்சேன்..ஆனா இப்போ வீட்டுக்குள்ள நுழைஞ்சு எனக்காக நீ பண்ணிண அரேஞ்ச்மெண்ட்ஸ்லா பாத்த அடுத்த செகண்ட் சத்தியமா அந்த தாட்ல இருந்து நா வெளில வந்துட்டேன்..நா இப்போ அதுக்கு தகுதியானவனானு தெரில சஹிம்மா ஒருமாறி கஷ்டமாயிருக்கு..

என்ன பேசுற மாமா என அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்..ஏன் இப்படிலா சொல்ற மாமா???

இல்ல சஹிம்மா இவ்வளவு சீக்கிரம்  நா உன்னை கல்யாணம் பண்ணிணது நீ எப்பவுமே என் பக்கத்துல என் பார்வைலயே இருக்கனும்ங்கிறதுக்காக தான்..மத்தபடி இந்த பர்ஸ்ட் நைட் பேபி இதெல்லாம்நா யோசிச்சதுகூட இல்ல அப்படியே எதாவது நினைப்பு வந்தாலும் நீ கண்டிப்பா இப்போ இதெல்லாம் வேண்டாம்நு சொல்லுவங்கிற நம்பிக்கைல இருந்தேன்னு வச்சுக்கோயேன்..ஆனா இதெல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு மார்னிங்ல இருந்து நா கன்ட்ரோல் இழந்துட்டேன்..பட்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.