(Reading time: 37 - 73 minutes)

வசர அவசரமாக துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான் துஷ்யந்த்… சில நாட்களில் சென்னை செல்ல முடிவெடுத்திருந்தவன், திடிரென இப்போதே சென்னைக்கு செல்ல முடிவெடுத்துவிட்டான்.. சுந்தர் வீட்டிலிருந்து கிளம்பும் போதே அந்த முடிவை எடுத்துவிட்டான்.. உடனே பங்களாவிற்கு வந்தவன் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானங்களின் நேரத்தை அறிந்து, மதியம் செல்லும் விமானத்தில் செல்வதற்கான டிக்கெட்டை புக் செய்தவன், உடனே சுந்தர் மீனா விஷயமாக முரளியை கூப்பிட்டு , தனக்கு தெரிந்த காவல்துறையை சேர்ந்த ஒருவர் மூலமாக அவனை கண்டித்து, இனி சுந்தர், மீனாவிடம் அவன் பிரச்சனை செய்யக் கூடாதென்று எச்சரித்து, அவனை வேலையை விட்டு நீக்குவது குறித்தான விஷயத்தையும் கூறி, அவனின் கெஞ்சல்களை பொருட்படுத்தாதவன், அவனை வேலையை விட்டு அனுப்பினான்.

பின் சுந்தர் மீனா வந்ததும் அவர்களிடம் எஸ்டேட் பொறுப்பை ஒப்படைத்து, தான் முடிக்க நினைத்திருந்த வேலைகளை சுந்தரை கவனித்து கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்னை செல்ல தயாரானான்..

அவனுக்கு கங்காவை எப்போது பார்ப்போம் என்றிருந்தது… இத்தனை நாள் குழப்பத்திற்கு இன்று தான் அவனுக்கு தெளிவு கிடைத்தது.. கங்காவின் கழுத்தில் இருந்த தாலி தான் இதுவரை துஷ்யந்தின் அமைதிக்கு காரணம்… கங்காவின் மேல் இருந்த அளவுக்கடந்த் நேசத்தை கூட அவளிடம் அவன் வெளிப்படுத்தாமல் இருந்தது அதனால் தான்.. ஆனால் இன்று சுந்தர், மீனாட்சியை பார்த்ததும் தான்.. இனி அவனின் அமைதி அவசியமில்லாதது என்று அவன் உணர்ந்தான்.

ஒரு நாடகமாக அரங்கேற்றப்பட்ட திருமணத்திற்கு கங்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..?? காதலென்ற பேரில் ஏமாற்றியவனுக்காக அவள் வாழ்க்கையை ஏன் அவள் அழித்துக் கொள்ள வேண்டும்..?? அவளின் அகம், புறம் இரண்டையும் இவனுக்காக அவள் என்றோ சமர்பித்துவிட்டாள்.. இனி அவள் பழைய வாழ்க்கையே அவளை தேடி வந்தால் கூட அவள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.. பின் இருந்தும் அந்த அர்த்தமில்லாத அந்த தாலிக்கு அவள் ஏன் மரியாதை அளிக்க வேண்டும்.. இதோ சுந்தரும் மீனாவும் இனிமையான இல்லறத்தை அமைத்துக் கொள்ளவில்லையா?? அப்படியிருக்க கங்கா யாருக்காக? எதற்காக யோசிக்க வேண்டும்??

இனியும் இவன் மௌனமாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.. கங்காவிடம் உடனே தன் மனதை தெரிவிக்க வேண்டும்?? தன் காதலை அவளிடம் சொல்ல வேண்டும்?? அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்..?? என்ற முடிவோடு சென்னைக்கு செல்ல தயாரானான்.

ப்ரண்ட்ஸ் இந்த அத்தியாயத்துல கங்கா துஷ்யந்த் ரெண்டுபேருக்குள்ள என்னன்னு ஓரளவுக்கு எல்லாம் தெளிவுப்படுத்துறேன்னு சொல்லிட்டு, தெளிவா குழப்பியிருக்கேன்னு புரியுது..?? இருந்தாலும் குழம்புன குட்டையில தான் மீன் பிடிக்க முடியும்.. அதனால இந்த அத்தியாயத்துல கதைக்கான மெயின் பாயின்டை கண்டு பிடிச்சீங்களான்னு சொல்லுங்க பார்ப்போம்.. உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.. நன்றி. 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.