(Reading time: 38 - 75 minutes)

த்தை.. உண்மையிலேயே சாரு தான் இதுக்கெல்லாம் காரணமா? இல்லை அவர் தெரியாம சொன்னாரா?”

“இல்லம்மா.. அந்த ஆள் சொன்னது உண்மை தான்.. அவர் சொன்னதுக்குப் பிறகு நாங்க தீவிரமா விசாரிக்கவும் தான் எங்களுக்கு எல்லாம் தெரிய வந்தது..

சாருவோட அப்பா அந்த குடும்பத்துக்கு ஒரு வகையில உறவுக்காரர்.. சாருவோட அம்மா எங்களுக்கு உறவுன்னு தெரிஞ்சிக்கிட்டவங்க.. சாருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்யனும்.. வசதி வாய்ப்புன்னு வாழ பணத்தேவை இதெல்லாம் பார்த்து, அவங்களுக்கு ஆசையை தூண்டி, சாருவை எங்க கம்பெனில வேலைக்கு சேர்ப்பது மட்டும் தான் அவங்க திட்டம்.. அது மூலமா கம்பெனி ரகசியத்தை சாரு அவங்களுக்கு சொல்லனும்,  ஆனா நான் சாருவை மருமகளாகவே ஆக்கிக்க ஆசைப்பட்டதை தெரிஞ்சதும், எங்களை வேரோட சாய்க்க அவங்க திட்டம் போட்ருக்காங்க.. அதுக்கு தான் ராஜாவுக்கு இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்தியது.. இப்போதைக்கு ராஜா தான் எங்க வீட்ல தலையெடுக்க ஆரம்பிச்சிருக்கான்.. செல்வா சின்னப் பையன்.. ஒரு கம்பெனிய எடுத்து நடத்த என்னோட தம்பிக்கு திறமை பத்தாது.. அதனால ராஜாவை தலைத்தூக்க விடாம செஞ்சுட்டா, அப்புறம் எல்லாம் அவங்களுக்கு சாதகமாயிடும்னு நினைச்சாங்க.. அவங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துடுச்சு”

“அத்தை.. எல்லாம் தெரிஞ்சதுக்குப் பிறகும் சாருவை சும்மாவா விட்டீங்க??”

“பின்ன என்னம்மா செய்ய சொல்ற..?? எங்களுக்கு விஷயம் தெரிஞ்சப்போ, சாருவுக்கும், வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் கல்யாணம் முடிஞ்சுப் போச்சு… அவ அம்பு தானே, எய்தவங்களை விட்டு அவளை மட்டும் என்ன பண்ண முடியும்? அப்படி செஞ்சா, என் புள்ளை சரியாயிடுவானா? அதுலயும் அவன் கவலை தான் எங்களுக்கு பெருசா தெரிஞ்சுது.. ஏன்னா முன்ன விட அவனோட நிலைமை ரொம்ப மோசமா இருந்தது..

யார்க்கிட்டேயும் அவன் பேசுவதே கிடையாது.. அவன் எங்களை பார்க்கும் பார்வையில் ஒரு அன்னியத்தன்மை தெரிஞ்சுது.. எங்களையெல்லாம் அவன் யாரோ மாதிரி பார்த்தான்.. அவன் என்ன பண்றான்... என்ன பேசறான்னு அடுத்த நிமிஷம் அவனுக்கே தெரியாது.. கிட்டத்தட்ட சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்தான்..

டாக்டரோ அவனுக்கு நிறைய மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கு, அதான் இப்படி இருக்கான்.. சின்ன வயசுல இருந்தே அவன் எதையும் யார்க்கிட்டேயும் மனசுவிட்டு பேசறதில்ல.. இப்போ நிறைய பிரச்சனைகளை சந்திச்சிருக்கான்..தொடர்ந்து தோல்வி, ஒருப் பெண்ணால ஏமாற்றம், எதிர்காலத்தை நினைச்சு பயம்.. இதெல்லாம் ஒன்னு சேர்ந்து அவனுக்கு நிறைய மனஅழுத்தத்தை உண்டாக்கியிருக்கு, இப்படி மனஅழுத்தத்துல இருக்கவங்க தான் இப்படி போதை பழக்கத்துக்கு சீக்கிரம் அடிமையாயிடுவாங்க.. இவனாப்அதை தேடிப் போகாட்டியும், அவனுக்கா அது கிடைச்சப்போ, அதை சாப்பிடும்போது மனசுல இருக்க பிரச்சனையெல்லாம் மறைஞ்சு எங்கேயோ காத்துல மிதக்கறா மாதிரி அவனக்கு இருக்கும்.. அவனோட பிரச்சனைகளுக்கு அது வடிகாலா இருக்கறதால, அதை பழக்கப்படுத்திவிட்டதும் அதையே கெட்டியா பிடிச்சிக்கிட்டான்..

போதை பழக்கம் என்னவோ கொஞ்ச நாளா தான் அவனுக்கு அறிமுகம் ஆயிருக்கு, அதை மறக்கடிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை.. ஆனா அதுக்கு பேஷண்ட் ஒத்துழைக்கனும், ஆனா ராஜா இருக்கும் நிலைமையில, அவன்கிட்ட இருந்து ஒத்துழைப்பு கிடைப்பது கஷ்டம்.. இதுதான் இப்போ அவனுக்கு மருந்துன்னு நினைக்கிறான்.. அதனால இந்த சூழ்நிலையில் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்காம, வேற ஒரு சூழ்நிலைக்கு அவனை கூட்டிட்டுப் போறது நல்லதுன்னு அவர் சொன்னாரு..

அதனால ராஜாவை குன்னூர் கூட்டிட்டுப் போக முடிவு செய்தோம்.. அவன்கூட யார் போறதுன்னு ஒரு குழப்பம்.. அடுக்கடுக்கா பிரச்சனைகளை சந்திச்சதுல எனக்கு உடல்நிலை மோசமா போச்சு.. என்னை கவனிச்சிக்க விஜி என்கூட இருக்க வேண்டியதா இருந்தது.. செல்வாக்கோ அது காலேஜ் கடைசி வருஷம், ஏற்கனவே நிறைய லீவ் எடுத்துட்டான்.. இனி காலேஜ்க்கு போய்க்கிட்டே ஆஃபீஸையும் கவனிச்சிக்க முடிவு செஞ்சான்.. அதனால என்னோட தம்பியை ராஜா கூட அனுப்ப இருந்தோம்..

இதுல இங்க கோர்ட் பிரச்சனை ஒருப்பக்கம், கம்பெனி பிரச்சனை ஒருப்பக்கம்.. கோர்ட் பிரச்சனையை வக்கீல் பார்த்துப்பாரு, ஆனா கம்பெனி பிரச்சனைக்கு பணம் தேவைப்பட்டது.. என்ன செய்யலாம்னு குழம்பினப்போ தான் ஒரு நல்ல யோசனை வந்தது.. ஊர்ல என் தம்பி பேர்ல இருந்த வீடு, அடமானத்துல இருந்தது.. அதை அடமானம் வச்சவர்கிட்டேயே வித்துட்டு, அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் போக, மீதி நாங்க எதிர்பார்த்த அளவுக்கு கிடைச்சது.. இது என்னோட தம்பி சொத்து தானே, அதனால அதை விக்கவும் எங்களுக்கு பிரச்சனை ஏற்படல..

ஓரளவுக்கு கம்பெனி பிரச்சனையை சமாளிச்சு, செல்வா பொறுப்புல அதை விட்டிட்டு அண்ணாமலை ராஜாவை கூட்டிட்டு குன்னூர் போனான்.. ஒரு மாசத்துல அவன் மட்டும் திரும்பி வந்தான்.. ராஜாவை பத்தி நாங்க கேட்டதுக்கு, அவனை பார்த்துக்க பொறுப்பா ஒரு ஆள் போட்டதாகவும், அதனால ராஜா பத்தி இனி கவலைப்பட தேவையில்லை.. சீக்கிரமே அவனுக்கு குணமாயிடும்னு என் தம்பி சொன்னான்.. அவன் சொன்னது போலவே அடுத்த ஒரு மாசத்துல ராஜா எங்கக்கிட்ட நல்லா பேசினான்..

இங்கிருந்த போன நாலே மாசத்துல அவன் சரியாகி பழைய மாதிரி வந்தான்.. ம்கூம் பழைய மாதிரின்னு சொல்லக் கூடாது.. புதுசா பொறந்து வந்தான்னு சொல்லனும்.. எங்கக்கிட்ட அவன் பழகுற முறையில நல்ல மாற்றம் இருந்தது.. முன்ன எங்களை விட்டு ஒதுங்கியே இருப்பான்.. ஆனா இப்போ எங்க மேல அக்கறையா.. எங்க தேவை என்னன்னு பார்த்து பார்த்து செய்வான்..

குன்னூர்ல இருந்து வந்ததும் முதல் வேலையா கோர்ட் கேஸை தான் கையில் எடுத்தான்.. வக்கீல் கூட இவனும் சேர்ந்து சொத்துப் பத்திரத்தை எல்லாம் ஆராய்ந்து பார்த்தான்.. சீனியர் வக்கீலும் கொஞ்சம் தேறியிருந்தாரு.. வெளிநாட்டுல இருக்க அவரோட கலந்துப் பேசி, இனி அவங்க இதுபோல கேஸ் போட முடியாத படி ஜெயிச்சோம்.. அப்புறம் சில சொத்துக்களை வித்து, கம்பெனில கவனம் செலுத்த ஆரம்பிச்சான்.. இப்போ இந்த ஆறு வருஷத்துல ரெண்டு கம்பெனி மட்டுமே இருந்ததை இப்போ இந்தியா முழுக்க நிறைய கம்பெனிங்க ஆரம்பிச்சு DR க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனின்னு ஒரே புள்ளியில இணைக்க அவன் நிறையவே உழைச்சான்.. செல்வாவும் சும்மா சொல்லக் கூடாது.. படிப்பு முடிஞ்சதும் மேல கூட படிக்காம அண்ணன் கூட இருந்து அவனும் தொழிலை பார்த்துக்கிட்டான்.. என் தம்பியும் அவனால முடிஞ்ச உதவியை செஞ்சான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.