(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - தாரிகை - 01 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : கல்கட்டா ரயில் நிலையம்..

முகத்தை துப்பட்டாவால் மறைத்து ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்தவாறு ஹவ்ரா சென்னை மெயிலில் அமர்ந்திருந்திருந்தாள் ஒரு நங்கை..

அவளொரு திருநங்கை..

மதுரை மண்ணில் சமுத்திரனாக பிறந்தவள் அவள்..வீட்டின் ஒரே வாரிசு..முடிசூடா இளவரசன்..

பதினொன்றாம் வகுப்பின் இறுதியில் தன்னுடலில் நிகழும் மாற்றம் உணர்ந்து வீட்டினரிடம் அதனை மறைக்காமல் தைரியமாக தெரிவித்தவ(ன்)ள்..

அதனால் உண்ண தனி தட்டையும் படுக்க வெளித் திண்ணையையும் பரிசாகப் பெற்றவ(ன்)ள்..

பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் அவளை அவனாக மாற்ற முடியுமென்று ஒருவன் சொன்னதை நம்பி தேர்வு முடிந்த அடுத்த தினம் வீட்டை விட்டு சில இலட்சங்களுடன் வெளியேற்றப்பட்டவ(ன்)ள்..

அறுவை சிகிச்சை முடிந்து சமுத்திராவாக மாறிய மயக்க நிலையில் விற்கப்பட்டு நரகத்தில் அடைக்கப்பட்டவள்..

ஆம், நரகமே அது..சோனாகச்சி, இரண்டு ஆண்டுகள் அவள் சிறைபட்டிருந்த நரகம்..

திரும்பிய இடமெல்லாம் பாலியல் தொழிலாளிகளே அங்கு..அது சுமார்  பதினோராயிரம் பாலியல் தொழிலாளிகள் வசித்து வரும் குறுநகரம்..

பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் பெரிய சிவப்பு விளக்கு மாவட்டம்..

ஆசியாவின் மிக பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்ற புகழும் உண்டு சோனாகச்சிக்கு..

அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு குணமாகும் வரை அவ்விடம் இந்திராவிற்கு சொர்க்கமாய் இருந்தது..

அதன் பிறகு அவள் அனுபவித்தது வலி..வலி..வலி மட்டுமே.. 

முழுதாக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது அந்நரகத்திலிருந்து சுதந்திரம் பெற..அவர்கள் அளித்த சுதந்திரம் அல்ல..

அவள் அங்கிருந்து தப்பித்து வந்ததால் கிட்டிய சுதந்திரம்..

கையிலிருந்த காசை வைத்து ரயில் நிலையம் வந்தடைந்தவள் சென்னைக்கொரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தாள் கம்பியில் தலை சாய்த்த வண்ணம் அது ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் என்பதை கவணிக்காமல்..

சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த அந்த இரயில் நிலையம் அவளை ஏனோ ஈர்க்கவில்லை..

கல்கட்டாவின் சுவை மிகுந்த சூடான டீயின் (chai) மனமும் அவளது பசியை தூண்டவில்லை..

கருவளையம் ஏறிய வெறித்த விழிகள் வெளிக்காட்சிகளை உள்வாங்க இயலாமல் மறத்துப்போய் வெறித்துக்கொண்டிருந்தது..

மிழ்நாட்டுக்கு ஒரு ஓ போடு..”,என்று தரண் (எ) தரண்யன் சத்தமாக கத்த அவனை சுற்றியிருந்த கூட்டம்,“ஓ...ஓ...ஓ..”,என்று பின்பாட்டு பாடியது அந்த கல்கட்டா இரயில் நிலையமே அதிரும் வண்ணம்..

“ஆர் எம் ஸ்கூலுக்கு ஒரு ஓ போடு..”

“ஓ...ஓ...ஓ..”

“நல்லா போடு..”

“ஓ...ஓ...ஓ..”,சத்தத்தை சற்று அதிகாமாக்கிய மாணவர்கள் சிறு ஆட்டம் ஒன்று ஆடத் துவங்கினர்..

நடுநாயகமாக இருந்த தரண் முதல் நாள் டி வி’யில் பார்த்தது போல் ஒரு கோக் பாட்டிலை எடுத்து ஒரு குலுக்கு குலுக்கி அதன் மூடியை திறந்தான் உற்சாகமாய்..

நுறையுடன் வெளியே பொங்கி வந்த கோக் தாறு மாறாய் சுற்றி நின்றிருந்த அனைவரின் மேல் தெறித்து அவர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது..

அங்கு மீண்டும் ஓவென்ற சத்தமும் கூச்சலும்..

“தரண்..வெற்றி சார் வரார்டா..வாங்க ட்ரைன் ஏறலாம்..”,என்றான்  கதிர் (எ) செங்ககதிர்வேலன் தரணின் தோளைத் தட்டி..

வெற்றி என்ற பெயர் தரணை அசைத்தது போலும்..

“டேய்..நானும் கதிரும் முதலில் உள்ளே போறோம்..நீங்கெல்லாம் சார் கூட வாங்க..”,என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னவன் தாவி ஏறினான் ரயிலில்..

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்..”

இவ்விரண்டு வரிகளை திரும்பித் திரும்பி பாடிக்கொண்டு ரயிலின் உள்ளே நடந்தவன் தங்களது பெர்த்தில் (seat) ஒரு பெண் அமர்ந்திருப்பது கண்டு கதிரிடம்,“இருபத்தி அஞ்சுல இருந்து முப்பத்திரண்டு வரைக்கும் நம்ம சீட்டுனு தானே வெற்றி சார் சொன்னார்..??”,என்று கேட்டான்..

“ஆமாடா..இந்த போர்ஷன் தான் நம்மளோடது தான்..”,என்றான் கதிர் சமுத்திரா அமர்ந்திருக்கும் சீட்டைக் காட்டி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.