(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 03 - ஸ்ரீ

en kadhalin kadhali

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீய

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் நெஞ்சத்தின் இடம் தொட்டு

விரல் என்னும் கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே வா...

தியம் சீக்கிரமே வீட்டிற்கு வந்த மகனை ஆச்சரியமாய் பார்த்தார் லஷ்மி..எல் ஆர் குரூப் ஆப் கம்பனிஸோட மகாராணி..அவர் கணவன் கண்ணன் மகன் ரகு மீதும் மனைவி மீதும் அளவற்ற பாசம் கொண்டிருந்தார் எனவே அவர்களின் பெயரிலேயே தனது பிஸினஸை நடத்தி வந்தார்..ஆனால் அத்தனை பெரிய சாம்ரஜியத்திற்கான ஆடம்பரமோ அகம்பாவமோ துளியும் இருக்காது அவர் முகத்தில்..மிகவும் நட்பாய் பழகுபவர்..கண்ணனும் உதவி என்று வருபவர்க்கு மறுக்காமல் செய்ய கூடியவர் ஆனால் சிறிது கோபகாரர் அதுவும் கல்யாணம் ஆன சிறிது நாளிலேயே தன் அன்பு மனைவிக்காக அதை குறைத்து விட்டார்..

ரகு..ரகுநந்தன்..ஒரே பையன் என்பதிற்கேற்ற குறும்பும் விளையாட்டுத்தனமும் அதிகம்..ஆனால் அதே நேரம் படிப்பிலும் கெட்டி..அதே நேரம் லஷ்மியின் வளர்ப்பு அவர் போன்றே பணத்திமிர் இல்லாமல் வளரவைத்திருந்தது அவனை..பெற்றவர்கள் இருவருக்குமே தங்கள் மகனின் மேல் எப்போதுமே ஒருவித பெருமையும் கர்வமும் இருக்கும்..

“என்னடா ரகு அதுகுள்ள வந்துட்ட??உடம்பு எதுவும் சரியில்லயா???”

“மாம்..அதெல்லாம் ஒண்ணுமில்ல..சும்மாதான்” என்றவாறு அவரை சோபாவில் அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டான்..

“சாப்டீங்களா மாம்??”

“ம்ம் ஆச்சுடா கண்ணா..நீ சாப்டியா எதுவும் சாப்டுறியா??”

“வேண்டாம்மா சாப்டேன்.”.என மேலும் எதையோ பேசிக் கொண்டிருந்தவன் அவரிடம்,”ஏன்மா நீ காலேஜ் படிக்கும்போது உனக்கு எவ்ளோ ப்ரெண்ட்ஸ்???”

“ஏன்டா திடீர்நு கேக்குற??”

“இல்லசும்மாதான் சொல்லேன்..”

“ம்ம் என்ன ஒரு மூணு பேர் இருப்பாங்க..”

“நீ கோஎட்ல தான படிச்ச பசங்க ப்ரெண்ட்ஸ் கிடையாதா??”

“பசங்களா??நாங்கலா பாத்துக்ககூட மாட்டோம்??”

“ஏன்மா அப்படி???”

ரகு கண்ணா அந்தகாலத்துல பத்தாவது வரை படிக்க வைக்குறதே பெரிய விஷயம் பொண்ணுங்களள..பாட்டி என்ன காலேஜ்லா அனுப்பவே மாட்டேன்னு சொன்னாங்க..நா தாத்தாகிட்ட அழுது புரண்டு உண்ணாவிரதம் இருந்துதான் காலேஜ்க்கே போனேன்..அங்கேயும் காலேஜ்ல உளவு பாக்குறதுக்குனே சில சொந்தகாரங்களே வேலை பாப்பாங்க..அவங்க என்னபத்தி எதாவது வீட்டல தப்பா சொன்னாங்க அடுத்த செகண்ட் படிப்பை நிறுத்தி உக்கார வச்சுருப்பாங்க..

அதனால ரொம்பவே பயத்தோடயும் கவனத்தோடயும் இருப்போம்..பொண்ணுகளுக்குள்ள பேசி சத்தமா சிரிச்சாலே எதோ பாக்ககூடாதத பாத்தமாதிரி நம்மள பாத்து வாய பொளப்பாங்க..இதுல எங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம்?? சொல்லப்போனா என் க்ளாஸ்ல எத்தனை பசங்கனு கூட தெரியாது என சிரித்தவர் போனில் அழைப்பு வர அதை அட்டெண்ட் செய்ய சென்றார்..

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ அம்மா கூறிய இடத்தில் அவளை வைத்து பார்க்க தோன்றியது..அன்று முழுவதுமே மனம் சந்தோஷமாய் இருப்பதாய் தோன்ற அப்படியே பொழுதை கழித்தான்..

றுநாள் வழக்கம்போல் பைக்கை நிறுத்திவிட்டு வர ஹரிணி உள்ளே நுழைந்தாள்..

“ஹாய்” என துள்ளலலாய் அவன் கூற,

சிறு சிரிப்போடு தலையசைத்து அவனோடு நடந்தாள்..

“என்ன மேடம் வாய தொறந்து ஹாய் கூட சொல்ல முடியாம என்ன திங்கிங்…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நந்தா..”என சோர்வாய் அவள்போக்கில் கூற அவனுக்கு அவள் தன்னை அழைத்ததையே மனம் சுற்றி வந்தது..

“இல்ல ஏதோ சரியில்ல என்ன சொல்லு??”

“நேத்து நீங்க சீக்கிரமே கிளம்பிட்டீங்களா??”

“ம்ம் ஆமா ஏன் என்னாச்சு???”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.