(Reading time: 26 - 51 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 16 - தீபாஸ்

oten

தித், கேசவன் என்பவருக்காக ஷாப்பிங் மால் ஒன்றை கட்டிகொண்டிருகிறான். அந்த கேசவன் ஒரு அரைமணி நேரத்திற்குமுன் தனக்கு போன் செய்து முக்கியமான விஷயம் பேசணும் என்று ஒரு பிரபல ஹோட்டலில் அவனை சந்திக்க வருமாறு கூறியிருந்தான்.

யோசனையுடன் தான் ஆதித் கிளம்பி வந்தான். பில்டிங் காண்டிராக்டில் கையெழுத்திட்டு அவர்கள் எதிர்பார்த்த தரத்திற்கு, எதிர்பார்க்காத பிரம்மாண்டத்தில், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த காலத்திற்குள் தான் அவன் கட்டித்தரும் கட்டடங்கள் இருக்கும். காரணம் இவன் கட்டித்தரும் கட்டணங்கள் ஜி.எப்.ஆர்.ஜி பேனல்ஸ் கொண்டு கட்டுவதால் கட்டிட செலவு மிகவும் குறைவு இது உரத்தொழில்சாளைகளில் இருந்து வருடா வருடம் வரும் டன் கணக்கான கழிவுகளின் ஜிப்சம் என்ற உப்பும் கிளான்ஸ் பைபரும் சேர்த்து இந்த ஜி எப் ஆர் ஜி தொழில்நுட்பம் வடிவு பெறுகிறது. இதன் சிறப்பு அம்சம் மிகக்குறைந்த செலவில், குரைந்த காலத்தில் , சிறப்பான பில்டிங் கட்டுவதுதான். இந்த தொழில்நுட்பத்தை பல வெளிநாடுகள் பின்பற்றுகின்றன. இந்த முறையில் கட்டிடம் கட்டுவதால்தான் குறைந்தவிலையில் தரம்மிக்க பிரம்மாண்டமான கட்டிடங்களை அவனால் கட்டி இவ்வளவு சின்ன வயதிலேயே பெரிய இடத்தை அடைய முடிந்தது.

எனவே அவனின் கட்டிட செயல்பாடுகளில் எந்த விதமான குறைகளையும் கேசவனால் சொல்லமுடியாது. அப்படி எதுவும் வேண்டுமென்றே பிரச்சனையை இழுத்தாலும் முதலில் அவர் தனது பி.ஏவையே அணுகவேண்டும். எதுக்கு என்னிடம்தான் பேசணும் என்று இவர் கட்டாயப்படுத்துகிறார் என்று யோசனையுடன் ஹோட்டலுக்குள் நுழைந்தான். ரிசப்சனில் அவர் கூறிய ரூம் நம்பரை கூறி எந்த புளோரில் உள்ளது என்று தெரிந்துகொண்டவன் போய் கதவை தட்டினான். திறந்த கேசவன் வாங்க ஆதித் அரைமணிநேரமா உங்களை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கிறோம், கூப்பிட்டதும் வந்தது சந்தோசம் என்றார்.

காத்துக்கொடிருகிறோம் என்றா சொன்னீங்க மிஸ்டர் கேசவ், உங்க கூட வேற யாரு எனக்காக காத்திருகிறார்கள் என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் ஆதித். அவன் உள்ளே நுழைந்தது ஷோபா டிவி மட்டும் போடப்பட்டு இருந்த வரவேற்புஅறை அதற்கடுத்த அறையை காண்பித்து வாங்க பார்த்தால் நீங்களே அது யார் என்று சொல்லிவிடுவீர்கள் என்றவன் அந்த அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்.

அங்கு மினிஸ்டர் காந்தன் உட்கார்திருந்தார் அவரை பார்த்ததுமே எதற்காக தன்னை இங்கு வரவைத்திருக்கிரார்கள் என்ற விபரம் புரிந்தது ஆதித்துக்கு.

காந்தன் ஆதித்தை பார்த்து வாங்க தம்பி என்றவர், யோவ் கேசவா தம்பிக்கும் கொஞ்சம் அந்த சரக்க ஊத்திக்கொடுய்யா என்றார். அப்பறம் தம்பி உட்காருங்க உங்க பிஸ்னஸ் எப்படி போய்கிட்டு இருக்கு?, பரவாயில்லையே இந்த வயசுலேயே பெருசா வளர்ந்துட்டீங்க, உங்களுக்கு தமிழ்நாட்டில் கவர்மென்ட் வழங்கும சிறந்த தொழிலதிபர் என்ற விருதை இந்தவருஷம் உங்களுக்கு கொடுக்கும்படி செய்திடலாமா? என்று கேட்டார்

என் பிஸ்னஸ் நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு காந்தன்சார். நீங்க ரெகமன்ட் செய்து விருது வாங்கிற நிலைமையில் நான் இல்லை. ஏற்கனவே சிறந்த தொழிலதிபர் விருது என்னை தேடி வந்துருச்சு இப்போ எதுக்கு நீங்க என்னை கூப்பிடீங்கனு சொன்னாப் போதும் என்றான் ஆதித்

உடனே காந்தன் என்னதம்பி பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க, இருக்கட்டும் இப்போ விசயத்துக்கே வர்றேன், பெரியவீட்டு பசங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க, இப்போ என் பையனையே பாருங்க கொஞ்சம் பொண்ணுங்க விசயத்துல அப்படி இப்படித்தான் இருப்பான், ஆனா செய்ற தப்பை ஆதாரம் இல்லாமல் செய்யணும், ஒரு ஆர்வத்தில் அவன் பார்க்கற எல்லாத்தையும செல்போனில் போட்டோ எடுத்து.... அது இப்போ உங்ககிட்ட மாட்டி.... இப்போ என்கிட்டவந்து பிரச்சனையாயிடுச்சு காப்பாத்துங்கன்னு நிக்கிறான். என் பையனாகிட்டானே, விஷயம் வெளியில் பரவுச்சுனா என் அரசியல் வாழ்கைக்கையே முடிந்து விடும். அதனால நீங்க என்ன செய்றீங்க, அவன் போனை என்கிட்டே கொடுத்துடுறீங்க. வேற எதுலயாவது அந்த வீடியோ ரெகார்டை பதிஞ்சு வச்சிருன்தீங்கன்னா அதையும் அழிச்சுடுறீங்க.

நான் சொன்னமாதிரி செஞ்சீங்கன்னா அடுத்த ஒரு இரண்டு வருசம் முழுவதும் கவர்மென்ட் பில்டிங் டெண்டர் எல்லாம் உங்களுக்கே கிடைக்கிற மாதிரி ஏற்பட்டு செஞ்சுடுறேன். மேம்பாலம் கட்டறது இலவச தொகுப்பு வீடு கட்டுறது ரோடு அப்படின்னு ஏகப்பட்டது இருக்கு. கோடிகனக்கா லாபம் பார்க்கலாம் எப்படி செஞ்சுடலாமா தம்பி! எனக் கேட்டார்.

அவர் பேசும்வரை மூச்சை இழுத்துப்பிடித்து அமைதியாக இருந்த ஆதித் அவர் பேசி முடித்த மறுநிமிடம், என்னை என்ன உன்னமாதிரி பணத்த தூக்கிப்போட்டா நாட்டையே அடகுவைக்கத் தயங்காத அரசியல்வாதின்னு நெனச்சயா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.