(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - என் காதலின் காதலி - 10 - ஸ்ரீ

en kadhalin kadhali

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. .. .

 

நிலவை உரசும் மேகம்

அந்த நினைவை நினைத்தே உருகாதா

உயிரை பருகும் காதல்

அது ஒரு நாள் உனையும் பருகாதா

நீ முடிந்த பூவிலொரு இதழாய்

வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்

நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்

சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்

நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்…”

ரண்டு நாட்கள் கடந்திருக்க ஹரிணி அனைவரிடமும் பேசுவதையே குறைத்துவிட்டாள்..ரகுவிடமும் தான்..அவன் கேட்பதற்கு பதில் அவ்வளவுதான்..அவனும் என்னென்னவோ பேசிப் பார்த்தும் பலனில்லாமல் போனது…கிருஷ்ணணும் மகளுடைய மாற்றத்தை உணர்ந்துதான் இருந்தார்..இருந்தும் அவர் பிடிவாதம் அவரை தடுத்தது..

நாட்கள் அதன்போக்கில் நகர ஆரம்பிக்க பெண்மனம் எதார்த்தத்தை ஏற்க தொடங்கியிருந்தது..தந்தை திருமணத்திற்கு சம்மதித்தால் போதும் என்றாகிவிட ரகு என்றாவது ஒரு நாள் மனம் மாறுவான் என்று நம்பினாள்..

இதற்கிடையில் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களின் திருமண வரவேற்பிற்கு அந்த வார இறுதியில் ஈ சிஆரின் ரிசார்ட்க்கு செல்வதாய் முடிவெடுத்தனர்..தானிருந்த மனநிலையில் யார் வருகிறார் எங்கு போகிறோம் என எதையும் கண்டுகொள்ளவில்லை ஹரிணி..ரகுவிடமும் ஒன்றும் பேசவில்லை அதைப் பற்றி..

வெள்ளிகிழமையன்று தன் தோழியிடம் போக வேண்டிய இடம் நேரம் பற்றி தெரிந்து கொண்டவள் மறுநாள் காலையிலேயே தயாராகி வந்தாள்.அவளைப்  பார்த்த மதுரா மென்கைத்தார்..

“என்னம்மா ஏன் அப்படி பாக்குற???”

“இல்ல ஹரிணி ரொம்ப நாளுக்கப்பறம் பழைய ஹரிணியை பாக்குற மாதிரி இருக்கு அதான் பாத்தேன்..”

“ம்ம் ஆபீஸ்ல எல்லாரும் வர்ற பங்ஷன்ம்மா இப்படி போனாதான் நல்லாயிருக்கும்..அதுவும் போக எனக்கே கொஞ்சம் மைண்ட் சேஞ்ச் தேவைப்படுது அதான்..”

“ம்ம் சந்தோஷமா போய்ட்டு வாடா ஹரிணி..ரீச் ஆய்ட்டு எனக்கு கால் பண்ணி சொல்லு..”

சரிம்மா வரேன் என அவள் வாசலுக்கு வரவும் அவள் போன் அடிக்கவும் சரியாய் இருந்தது..அழைப்பது ரகுவென தெரிந்து கதவோரமாய் நின்று மென்குரலில் பேசினாள்..

“சொல்லுங்க நந்தா..”

“இன்னைக்கு அஸ்வின் விஜி கெட் டூ கெதருக்குப் போறியா ஹணி????”

“ம்ம் ஆமா நந்தா உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்..ஆல்மோஸ்ட் கிளம்பிட்டேன் வாசல்ல தான் நின்னு பேசிட்டு இருக்கேன்..”

“வாவ் அப்போ சூப்பர் அப்படியே தெரு முனைக்கு வந்து என் கார்ல ஏறிக்கோ பாக்கலாம்..”

“என்ன நீங்களும் வரீங்களா???”

“யெஸ் டியர் நானும் சொல்ல மறந்துட்டேன்..சரி இந்த வழியாதான போறோம் எதுக்கும் கேட்போமேநு கால் பண்ணேன் ஐ அம் லக்கி டு டே..சீக்கிரம் வா ஹணி எல்லாத்தையும் போன்லயே கேப்பியா..”

சரி சரி வரேன்..என்றவள் தெருமுனை நோக்கி நடக்க சற்று தொலைவில் நின்றிருந்த அவன் காரில் ஏறினாள்…

ஹாய்ப்பா..என்றவள் பேக்கை வைத்து திரும்ப தன்னவனிடமிருந்து விழியகற்ற தோன்றவில்லை..ப்ளு ஜீன்ஸும் வொய்ட் சர்டும் கருப்பு ப்ளேசருமாய் கம்பீரமாய் இருந்தான்…

அவன் பார்வையை தவிர்த்தவள்,நந்தா ட்ரெஸ் ரொம்ப நல்லாயிருக்கு..இது ஆன்ட்டி குடுத்த புடவைதான்..எப்படியிருக்கு??

லைட் ஆரஞ்ச் அண்ட் பீஜ் காம்பினேஷனில் ஹாவ் சாரி டைப்பில் இருந்தது அந்த அழகிய டிசைனர் புடவை..அதற்கேற்றவாறு ஆரஞ்ச் நிற ரோஜாப் பூ கம்மலும்,பீஜ் நிற த்ரெட் நெக்லெஸுமாய் கைகளில் இரண்டும் கலந்த காம்பினேஷனில் வளையலும் என ரதியாய் அமர்ந்திருந்தவள் வாய் திறக்கும் பதுமையாகவே தோன்றினாள் ரகுவிற்கு..நீண்ட நாட்களுக்குப் பின் அவளை அப்படி பார்த்ததில் மொத்தமாய் தடுமாறியிருந்தான்..

தன்னை விழுங்குவதைப் போல் இத்தனை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை ஒன்றும் கூற தோன்றாமல் தலையை வெளியே திருப்பிக் கொண்டாள்..வெளியில் கேட்ட ஷார்ன் ஒலியில் உணர்ச்சிப் பெற்றவன் தலையை சாலையை நோக்கித் திருப்பிக் கொண்டான்..வாய் குவித்து ஆழ் மூச்சுவிடுத்தவன் காரை ஸ்டார்ட் செய்ய ஹரிணிக்கோ உள்ளுக்குள் குளிர் பரவியது..நிலவிய அமைதி இன்னும் கொடுமையாய் தோன்ற அவளே வாய் திறந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.