(Reading time: 17 - 33 minutes)

ம்மாவுக்கு உடலநலம் சரியில்லை, அப்பாவுக்கு வேலை நிறைய இருக்கு.. தம்பியை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே தன் மனதிற்குள் அவன் அடிக்கடி சொல்லிக் கொள்வதால், தன்னுடைய விருப்பம், தன்னுடைய வருத்தம், தனக்கு என்ன தேவை இதையெல்லாம் அவன் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான். யாரிடமும் எதையும் பகிர்ந்துக் கொள்ளாமலேயே இருக்க பழகிக் கொண்டான்.

மிகவும் மனம் சோர்வாக இருக்கும் சமயத்தில் அன்னை மடியில் சாய்ந்திட துடிக்கும் மனதை அடக்கிக் கொள்வான்.. பள்ளியில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை தந்தையிடம் பேசிட வேண்டும் என்ற நினைப்பானே தவிர எதையும் பகிர்ந்துக் கொள்ள மாட்டான். ஆரம்பத்தில் அது அவனது இயல்பான குணம் என்று பெரிதாக யாரும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் பெரியவனான பின்பும் அவன் அப்படி இருப்பதை நினைத்து அவன் பெற்றவர்களுக்கு கவலை இருந்தாலும், அவனை சகஜமாக பழக வைக்க அவர்களால் முடியவில்லை. ஆனால் அவன் மனம் பெரியவனான பின்னும் கூட சிறுபிள்ளை போல் சில விஷயங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் உணர்ந்ததில்லை.

எனக்கென சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் வேண்டும், நான் பேசுவதை கேட்க வேண்டும், எனக்காக மட்டுமே சிந்திக்க வேண்டும், என்னுடனே எப்போதும் இருக்க ஒரு உறவு வேண்டும் இப்படியெல்லாம் அவன் எதிர்பார்ப்புகள் இருக்க, தனக்கு மனைவியாக வர இருந்த சாருவை அதனாலேயே அவன் மனம் ஏற்றுக் கொண்டது. அவளின் ஏமாற்றுப் பேச்சுகளெல்லாம், அவன் மீது காட்டும் அக்கறையாக அவனுக்கு தோன்றியதால் தான், சாருவிடம் அவன் சுலபமாக ஏமாந்துப் போனான். தன் தந்தை இறந்ததற்கு பிறகு அனைத்தையும் நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தவன், இப்போது பிரச்சனைகளுக்கெல்லாம் நான் காரணமாகி போனேனே என்றும், அம்மாவையும் தம்பியையும் இப்படி நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டேனே என்ற கவலையும் தான் அவனை இப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளியிருந்தது.

ஆனால் இன்று கங்கா அவனின் மனைவியென்று அறியாத நிலையில் அவன் இருந்தாலும், அவனுடைய எதிர்பார்ப்புகளெல்லாம்  அவள் மூலமாக  பூர்த்தியாகும் போது, அவள் பேச்சை அவன் எப்படி கேட்காமல் போய்வவிடுவான். மருத்துவர் சொன்னதையெல்லாம் கங்கா கவனித்தில் கொண்டு அவனை அதையெல்லாம் செய்ய வைத்தாள்.

காலையிலேயே எழுப்பி அவனை தன்னோடு கூட்டிக் கொண்டு நடைபயிற்சி செய்வாள். எல்லா விஷயங்களை பற்றியும் அவனோடு பேசுவாள். நிறைய புத்தகங்களை வாசித்துக் காட்டுவாள். இப்படியே அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாள். முன்பெல்லாம் துஷ்யந்திற்கு கங்காவின் தேவை வேறுமாதிரியாக இருக்க, இப்போதெல்லாம் அது வேறு மாதிரியாக மாறிப் போனது. இரவில் மட்டுமே அந்த தேவைக்காக அவளை நாடியவன், பகலில் அவள் கைகோர்த்தப்படி நடப்பதும், அவள் மடியில் தலை சாய்த்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதும், அன்னைப் போல அவனுக்கு அவள் சாப்பாடு ஊட்ட, அவளின் அழகு முகத்தை தரிசித்தப்படியே அவன் வாய் திறந்து உணவை வாங்கிக் கொள்வதும், இரவில் அவளுடனான இனிமையான கூடலுக்கு பின் அவளை இறுக்கி அணைத்து உறங்குவதும் என்று இருபத்தி நான்கு மணி நேரமும் கங்கா கங்கா கங்கா தான்,

இப்படி இந்த மூன்று மாதத்தில் மருத்துவரே நினைத்து பார்க்காத அளவிற்கு துஷ்யந்த் முழுமையாக தேறி இருக்க, அத்தனைக்கும் காரணமானவள் கங்கா.. அவள் எனக்கு யார்? என்ற கேள்வி அவன் மனதில் முதன்முதலில் தோன்றிய அந்த நொடி, அவளை பிரிவதற்கான முதல் வித்து அவன் மனதில் தோன்றிய அக்கேள்வி தான் என்பதை உணறாமல் போனது தான் அவன் விதியோ?”

ப்ரண்ட்ஸ் ப்ளாஸ்பேக் ஆரம்பிச்சதுல இருந்து கொஞ்சம் குறைவான பக்கங்களாக கொடுக்கிறேன்னு தெரியுது.. நானும் சீக்கிரன் ப்ளாஷ்பேக் முடிச்சு கிளைமாக்ஸ் போக வேண்டும்னு தான் நினைக்கிறேன்.. ஆனால் அதிகப்படியான வேலைகளில் இவ்வளவு தான் என்னால டைப் செய்ய முடியுது.. அடுத்த அத்தியாயத்தில் இருந்து நிறைய பக்கங்கள் கொடுக்க முயற்சிக்கிறேன்.. படிச்சிட்டு உங்க கருத்துகளை மறக்காம சொல்லுங்க.. நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 35

Episode # 37

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.