(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 04 - தேவி

Kaathalana nesamo

பேர்வெல் டேக்கு புடவை எடுக்க சென்ற நால்வரும் திரும்பி வரும்போது இரவாகி இருந்தது.

இவர்கள் புடவை எடுத்து முடிக்கவே மதியம் ஆகிவிட, ஹோடேலில் சாப்பிட்டு முடித்தார்கள். பின் மீண்டும் பர்சேஸ் போக வேண்டும் என்று கூற,

ஷ்யாம் “அம்மா.. தாய்க் குலங்களே.. என்னை பார்த்தால் உங்களுக்கு பாவமா இல்லையா? அதான் புடவை எடுத்து முடிச்சாச்சே ? இன்னும் வேற என்ன எடுக்கணும்?

அவனின் தங்கை சுமித்ரா “ப்ரோ.. புடவை மட்டும் எடுக்கவா .. ஒரு சண்டே தியாகம் செஞ்சு ஷாப்பிங் வந்தோம்.. அதுவும் உன்னை கூட்டிகிட்டு? புடவை எங்க அப்பா கணக்கில் எடுத்தது.. இப்போ உன் பர்ஸ் காலி பண்ணனும். சோ நாங்க இப்போ அடுத்த ஷோரூம் போறோம்.. நீங்க வாங்க ப்ரோ “ என்றபடி சைந்தவிக்கு  ஹைபை கொடுத்தாள்.

“அடிபாவி வானரங்களா.. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நான் இந்த ஆட்டத்துக்கு வந்துருக்கவே மாட்டேனே.. டேய் ஷ்யாமா.. அநியாயாமா சிக்கிட்டியே.. மித்ரா நீயும் இதுக்கு உடந்தையா?”

“ஹ.. ஹா  ப்ரோ. ஐடியா கொடுத்ததே மித்ராதான்.” என சைந்தவி கூற, மித்ராவை கோபமாக பார்க்க, அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“இந்த பூனையும் மில்க் குடிக்குமான்னு நினைச்சா, நீ மில்ஷேக் குடிக்கிற அளவிற்கு வளந்துட்டியா? ஏன்டி இப்படி மாட்டி விட்ட?”

“அத்தான்.. நான் உங்கள மாட்டில்லாம் விடல.. புடவைக்கு மேட்ச்சா அச்செச்சரீஸ் வாங்கலாம்னு மட்டும் தான் சொன்னேன்.. மத்தது எல்லாம் இவளுங்களே 5 மார்க் கேள்விக்கு பத்து பக்கம் எழுதுற மாதிரி எக்ஸ்ட்ரா பிட்ட போட்டுடாங்க.. “

“ப்ரோ.. அவ பொய் சொல்றா ப்ரோ .. பொய் சொல்றா “ என்று சிவகார்த்திகேயன் குரலில் மிமிக் செய்தாள் சுமித்ரா..

“ஆக மொத்தம் என்னை காலி பண்ணனும்னு முடிவு பண்ணிடீங்க .. நடத்துங்க..” என்றவன் அவர்களை மீண்டும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அழைத்து சென்றான்.

என்னதான் வீட்டில் தேவையான அளவு செலவழிக்க அனுமதித்து இருந்தாலும், ஷ்யாமோடு வந்தால் அவன் அக்கௌன்ட்டிலும் கை வைக்காமல் விடமாட்டார்கள் பெண்கள். அஷ்வின் கூட ஷ்யாமின் பணத்தில் பர்சேஸ் செய்யாமல் விடமாட்டான்.

புடவை எடுத்ததே தேவலை போல் அதற்கு மேட்ச் செட் வாங்க அதை விட நேரமானது.. எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல இரவானது.

இவர்களின் குடும்பங்கள் இவர்களுக்காக காத்து இருக்க, வாங்கியதை காட்டி, எல்லோருக்கும் திருப்தியான பின் அவரவர் வீடு திரும்பினர்.

நாட்கள் நகர, மித்ரா, சைந்தவி இருவருக்கும் பேர்வெல் முடிந்து , எக்ஸாம்மும் ஆரம்பித்து இருந்தது.

பேர்வெல் அன்று எடுத்த போட்டோவை மித்ரா, சைந்தவி வாட்ஸ் அப்பில் போட, அதை பார்த்த உறவினர் எல்லோரும் நன்றாக இருப்பதாக ரிப்ளை செய்து இருந்தனர்.

இவர்கள் எக்ஸாம் நடந்து கொண்டு இருக்கும் போது ஷ்யாம் கம்பெனி விஷயமாக ஜெர்மன் செல்ல வேண்டி வந்தது. ஆட்டோமொபைல்ஸ் இவர்களின் முக்கிய தொழில் என்பதால், இவர்களுக்கு ஜெர்மனில் முக்கிய வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

ஒரு புது முயற்சிக்காகவும், தொழில் ஒப்பந்தம் நீட்டிப்பது தொடர்பாகவும் அங்கே வாடிக்கையாளர்களை சந்திக்க ஷ்யாம் சென்றான்.

மித்ராவிற்கு எக்ஸாம் முடிந்த மறுநாள் வீட்டில் அவளின் தந்தை முரளி அவளிடம் பேச வேண்டும் என கேட்க, அவர் அருகில் அமர்ந்தாள்.

முரளி “சபரி . நீயும் வா “ என்று கூற, அவரும் மித்ராவின் அருகில் உட்கார

“என்னம்மா? ரெண்டு பேரும் சேர்ந்து பேசணும்னு வந்து இருக்கீங்க?” என்று வினவினாள் மித்ரா.

“ஆமாம்டா.. உன் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்தது இல்லியா?”

“எஸ் பா”

“மேலே என்ன பண்ணலாம்னு இருக்கே?”

“ஹ்ம்ம். நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்யறேன் பா “ என்றாள்.

இப்போது சபரி “உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்கிறோம் மா “ என்று கூற, ஏதோ யோசித்தவளாக ஒன்றும் சொல்லவில்லை மித்ரா.

“அம்மா.. இப்போ என்ன அவசரம் ?”

“அவசரம்னு இல்லைடா.. நல்ல இடமா கேட்டு வராங்க.. அதான் உனக்கு பண்ணலாமேன்னு யோசிக்கிறோம்”

“ராம் மாமா என்ன சொன்னங்க?

“மாமாகிட்டேயும் பேசிட்டோம்.. உனக்கு ஓகேன்னா பார்க்க சொன்னாங்க..”

“ஓஹ.. எனக்கு என்ன சொல்ல தெரியலம்மா.? இப்போதான் டிகிரி முடித்து வெளியில் வந்துருக்கேன். அதுக்குள்ள கல்யாணம்ன்னா, ரொம்ப சீக்கிரமோன்னு தோணுது?

“இல்லைடா.. சரியான வயசுதான். அதோட பெண் குழந்தைகளில் நீதான் நம்ம வீட்டில் பெரியவ.. உனக்கு முடிச்சாதான் மத்த பசங்களுக்கு பாக்க முடியும்.”

“அது சரிதான். மேலே படிக்கலாம்ன்னு நினைச்சேனே..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.