(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 09 - மித்ரா

Iru thuruvangal

டுத்த நாள் லண்டனில்,

அனைவரும் எப்பொழுதும் போல தங்களுக்கான கேப்பில் ஏறி அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்.

ப்ரீத்தி வந்ததிலிருந்து கவனித்துக் கொன்டிருந்தால், இருவரையும் அவர்களின் பார்வை ஒருவரை ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் தொட்டுச் சென்றது. பிறகு இருவரும் ஒருவரை மற்றவர் தவிர்க்க எண்ணினர். அதை இருவருமே கடைபிடித்தனர்.

ஏனெனில், ஹரிஷ் அனந்திதாவுக்கு சிறிது சமயம் கொடுக்க விரும்பினான். தன்னைப் பற்றி யோசிக்க. அவளும் சிறிது நாள் யோசித்தால், அவனை மறந்து விடலாம் என்று தப்பாக யோசித்தாள்.

ஆனால், இதனை பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்திகோ ஒன்றுமே புரியவில்லை. நேற்று நன்கு பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் கூட இன்று அவளிடம் ஆர்வம் காட்டாமல் இருப்பதாலும், தான் நினைப்பதுபோல் நடக்கும் என்று நம்பினாள்.

ஏன்? இருவரும் தவிர்க்கின்றனர் என்று இவள் யோசிக்காமல் விட்டதே அவள் செய்த தவறு.

ஆனால், ஒன்றை மட்டும் நம்பினால் அனந்திதாவை பிரதீப் ஒபராய் உடன் இணைத்து விட்டால், ஹரிஷ் அவனின் உயரம் கருதி அவளிடம் செல்லும் சிறிது பார்வையை கூட விலக்கி விடுவான் என்று எண்ணினாள்.

 அதை செயல்படுத்த வேண்டும் என்று அந்த வேலையை ஆரம்பித்தாள் பிரதீப்பிடம் அன்றே.

அலுவலகம் வந்ததும் அவள் கண்கள் பிரதீப்பை தேடியது. அவன் கிடைக்காததால் வேலையை கவனித்தாள்.

அவளிற்கான சமயமும் கிடைத்தது அன்று மதியமே. உணவு உண்ணும் வேளையில் வந்த பிரதீப், அங்கு அனந்திதா தன்னுடைய குழுவில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனித்த ப்ரீத்தி அவனிடம் வந்து அவளை அறிமுக படுத்திக் கொண்டாள். பின் அவனும் தன்னை பற்றி சொல்லவும் ஒன்று தெரிந்தது. இருவரும் மற்றவரது குடும்பத்தை அறிந்தவர்கள் எனவும் தூரத்து உறவினர்கள் என அறிந்துக் கொண்டனர்.

அதை அறிந்த அவள் முதலில் அவனிடம் நட்பு மட்டும் கொள்ளலாம். பிறகு ஒரு தோழியாக அவனுக்கு அனந்திதாவை பற்றி கூறி அவளுடன் சேர்த்துவிடலாம் என்று சிறிது சுயநலமாக எண்ணினாள்.

அதன் படியே அவள் நினைக்க, அவர்களது ட்ரைனிங்கின் இரண்டு வாரங்களும் சென்றது. பிரதீப் ப்ரீத்தியின் நட்பும் அனந்திதாவின் யோசனையும் ஹரிஷின் ஒரு தலை காதலும் ஒன்றாக சென்றது.

ஹரிஷ் மற்றும் அனந்திதா இருவரும் ஒரே குழுவில் இருப்பதால் அவர்களின் பெரும்பாலான பேச்சுவார்த்தை பணியை பற்றியே இருந்தது.

இருப்பினும் அனந்திதாதான் அவனை மறக்க முடியாமல் இருந்தாள். அவன் தன்னை தொந்தரவு செய்யாமல் இருப்பினும் அவனின் முன்பைய நட்பு ரீதியான பேச்சை அவள் எதிர்பார்த்தாள்.

அவளின் ஏக்கம் அவள் கண்களில் அவன் கண்டுகொண்ட போதிலும் அவளே தன் மீதான காதலை உணர காத்திருந்தான்.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கும் முடிவு வந்தது. அது அந்த அலுவலகத்தில் அவர்களுக்கு இறுதி நாளான அன்று ஒரு சிறிய இரவு விருந்து ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அதில் ஹரிஷின் காதலை அனந்திதா கண்டுக்கொண்டாள்.

பிரதீப் இந்த இருவாரங்களில் அனந்திதா மற்றும் ஹரிஷிடம் நன்கு பேசும் அளவுக்கு வந்திருந்தான். இவர்களும் இந்தியர் என்ற காரணத்தால் மட்டுமே நட்புடன் பழகினர். இந்த அளவுக்கு மட்டுமே ப்ரீத்தி பிரதீப்பை தயார் செய்தாள்.

அவனிடம், “பிரதீப் !! நம்மல மாதிரியே இந்தியால இருந்து வந்திருக்கறவங்களோடு நல்லா பேசு... நாளைக்கு நமக்கு எதாவது ப்ரோப்லம் னா அவங்க உதவி தேவப்படும்.” என்று கூறினாள்.

அவனுக்கும் ஆனந்திதாவிடம் பேச கிடைக்கும் வாய்ப்பு தனக்கு தானே வருவதால் அவனும் எளிதாக ஒத்துக் கொண்டான். ஆனால், இருவரும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை.

ப்ரீத்தி முட்டாள்தனமாக இந்த இரு வாரங்களில் அனந்திதாவை எவ்வாறு பிரதீப்பிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று யோசித்தாலே தவிர.

 இந்த காலத்தில் ஹரிஷிடம் நன்கு பழகி அவனின் குட் புக்ஸ்சில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் ஹரிஷிடம் பழகும் அந்த வாய்ப்பை தவறிவிட்டாள்.

அன்று நடைபெற்ற பார்ட்டியை மதனகோபால் ஹோஸ்ட் செய்துக் கொன்டிருந்தார். அங்கு அனைத்து வகையான உணவுகளும் குளிர்பானங்களும் மது தொடர்பான அனைத்து வெரைட்டிகளும் வைக்கப்பட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்கு தேவையான அனைத்துவிதமான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

மித்திலாவுடன் வந்த அனந்திதாவை வைத்த கண் வாங்காமல் இரு கண்கள் பின் தொடர்ந்ததது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.