(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 10 - மித்ரா

Iru thuruvangal

“ நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை

பெண்ணே உன் மேல் பிழை

 

நில்லாமல் வீசிடும் பேரலை

நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை 

பொன்வண்ணம் சூடிய காரிகை

பெண்ணே நீ காஞ்சநை 

 

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி

இனி நீதான் எந்தன் அந்தாதி.... ”

சூர்யா சமிரா ரெட்டியுடன் டூயட் பாடிக் கொண்டிருக்க, அதை அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் தன் நாயகி ஆன அனந்திதாவுடன் கனவில் ஆடிக் கொண்டிருந்தான்.

நேற்று நடைபெற்ற பார்ட்டியின் விளைவால், என்ன செய்தும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளே அவன் கண்முன் தோன்றி அவனை இம்சித்தது. அவன் இரவு முழுவதும் உறங்காமல் கனவில் பயணித்துக் கொண்டிருந்தான்.

காலை வரை அப்படியே இருந்தவனை மதனகோபாலின் தொலைபேசி அழைப்பு கலைத்தது.

“ஹாய் ஹரிஷ்!!... பார்ட்டி ஹாங் ஓவர்(HANG OVER) தெளிஞ்சிடுச்சா... இல்ல அப்படியே இருக்கிங்களா....?” என்றார்.

“அப்படி எதுவும் இல்லை சார்... ஆல் ஒகே... எனி நியூஸ் சார்?” என்றான்.

“யெஸ் ஹரிஷ், இப்போ நாம, நம்ம டீம்மோட நமக்கு அல்லாட் பண்ணி இருக்கிற பிரான்ஞ்சுக்கு போக போறோம்... சோ, கெட் ரெடி நவ்... வி வில் மூவ் ஆன் ஷார்ப் 9’O க்ளாக்....” என்று கூறினார். மேலும், “நான் எல்லாருக்கும் இன்போர்ம் பண்றேன்...” என்று வைத்துவிட்டார்.

அனைவரும் தயாராகி அவர் அவர் வேலை செய்யும் பிரான்ஞ்ச் அருகில் உள்ள தங்கும் இடத்துக்கு பயணமாக காத்திருந்தனர். அப்போதுதான் பிரதீப் வீட்டில் இருந்து வெளியே வந்த ப்ரீத்தி அவர்கள் தயாராக இருப்பதை பார்த்து யோசனையனாள்.

அவள் யோசனையை கலைத்த அவளின் டீம் லீடர் பிரகாஷ், “எங்க போயிருந்த ப்ரீத்தி.. நான் எப்போ இருந்து உன்னை காண்டக்ட் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. போய் பாக் எல்லாம் pack பண்ணி ரெடி ஆயிட்டு வா... இன்னைக்கு நம்ம பிரான்ச்க்கு போகணும்... ஜஸ்ட் 1௦ மினிட்ஸ்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தவள். அங்கு மற்றொரு டீம் தயாராகி புறப்பட இருந்ததை பார்த்தாள். மித்திலா மற்றும் அனந்திதா பிரிய போவதால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். ஹரிஷ் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் மதனகோபால் அவர்கள் டீம் செல்ல பேருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்தியாவில் இருந்து வந்திருந்த அனைவரும் ஒன்றாக இரு வாரங்கள் செலவளித்திருந்ததால் ஒருவருக்கு ஒருவர் பிரியாவிடைக் கொடுத்தனர்.

ப்ரீத்தி அவர்கள் செல்லவும் எதுவும் யோசிக்க முடியாமல் தலை மீது கைவைத்து அமர்ந்தாள். அதைப் பார்த்த மித்திலா நேற்று மது அருந்தியதால் அப்படி இருக்கிறாள் என்பதை அறிந்தவள் போல், அவளே அவளுக்கு உதவினால் பயணம் செய்வதற்கு அவள் பாக்கை pack செய்து தந்தாள். ப்ரீத்தியும், தான் இருக்கும் இந்த நிலையால் அந்த உதவியை ஏற்றுக்கொண்டாள்.

ஆனால், அவள் அனைவரிடமும் தோல்வியுற்ற நிலையில் இருந்தாள். எப்படி? எங்கே? எவ்வாறு இனி? என்று தோன்றியது.

அவள் எதிர்பார்த்த உதவி பிரதீப்பிடம் இருந்து வராததால் அவள் அவன்மேல் வன்மம் வைத்துவிட்டு தகுந்த சமயத்திற்காக காத்திருந்தாள். சரியான சந்தர்ப்பத்தில், பிரதீப் அவளை ஏமாற்றிவிட்டான் என்ற நினைப்பில். அவளுக்கு எதார்த்தமும் அவள் கண் எதிரே இருந்த உண்மையும் மறைந்து விட்டது அவளின் பிடிவாதத்தால்.

ப்ரீத்தி வன்மத்திலும் குழப்பத்திலும் ஆன மனநிலையிலேயே அவளின் டீம் மெம்பர்ஸ் உடன் பயனப்பட்டாள்.

இதற்கு நேர்மாறாக இருந்தது அனந்திதா பயணம் செய்த பேருந்து. ஹரிஷ் மதனகோபாலுடன் உரையாடிக் கொண்டிருக்க, அவர்களின் டீம் முழுவதும் அனந்திதாவிடம் நேற்று அவர்கள் ஆடிய நடனம் நன்றாக இருந்ததாகவும், மேலும் சில ஆர்வ கோளாறுகள் இருவரும் காதலி செய்கிறிற்களா? என்றும் கேட்டு அவள் பிபி யை எகிற வைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இதற்கு காரணமானவனோ கதை அடித்துக் கொண்டிருக்க அவள் கோபம் எல்லையை கடந்தது. இதை எல்லாம் மதனோடு பேசிக்கொண்டிருந்தவன் தன் ஓர விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.