(Reading time: 25 - 49 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 02 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ண்பர்களே நான் அத்தியாயம்-1இல் குறிப்பிட்டிருந்த ஸ்தோத்திரியம் என்ற தனிமம் பற்றி கூறியிருந்தேன் அப்படி ஒரு தனிமம் இருக்கிறதா என்றாள் அது கேள்விக்குறியே .”தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?” என்ற தலைப்பிலான ஒரு பதிவு வாட்சப்பில் உலா வருகிறது.

அந்தப் பதிவில், பின்வருமாறு சில விவரணைகள் இருந்தன…

சென்னை பனகல் பார்க்கில் முகம் முழுக்க தாடி மண்டிய நிலையில் ஒருவர் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தார். அவரை பலரும் பைத்தியம் என்று கருதினர். ஆனால் அவர் பைத்தியம் இல்லை. இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் முக்கிய பதவியில் இருந்தவர்.

தமிழகத்தில் பூமிக்கடியில் ஸ்தோத்திரியம் என்ற மிக அரிதான, எடைக்குறைவான தனிமம் டன் கணக்கில் புதைந்து கிடக்கிறது.

இந்த ஸ்தோத்திரியத்தில் இருந்துதான் அணு குண்டுகளை மடக்கி, குறி தவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள். இந்த துப்பாக்கிகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள், அரபு நாடுகள் ஆகியவை வைத்திருப்பதாக பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்தோத்திரியத்தை ஆராய்வதற்குதான் இந்தியா செயற்கைக்கோள்களை அதிகளவில் அனுப்பி வருகிறது. அமாவாசை இரவில் பார்த்தால், செயற்கைக்கோள்களில் இருந்து கேமராக்களின் ஃபிளாஷ் வெளிச்சம் தெரியும்.

அந்தப் பதிவு.

முழுக்க முழுக்க தமிழர்களை முட்டாளாக்கும் பதிவு இது. எப்படி எனச் சொல்கிறேன். உண்மையிலேயே ஸ்தோத்திரியம் என்ற தனிமமே உலகில் கிடையாது. உலகில் மிகவும் எடை குறைவான தனிமம் என்றால் அது, டெக்னீஸியம் மட்டும்தான். அதன் அணு எண் 43. முதல்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தனிமமும்கூட.

விஷமிகள் யாரோ திட்டமிட்டு, தமிழர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் நோக்கில், கிறித்தவர்கள் ஏசுவுக்கு நன்றி செலுத்தப் பயன்படுத்தும் ‘ஸ்தோத்திரம்’ என்ற சொல்லை உல்டா செய்து, ஸ்தோத்திரியம் தனிமம் என்று சூட்டியுள்ளனர்.

இதுபற்றி அறிவியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகளிடம் கேட்டால் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதை அறிந்த விஷமிகள், இதுபற்றி தயவு செய்து யாரும் அறிவியல் ஆர்வலர்களிடம் விவாதிக்க வேண்டாம் என்றும் பதிவில் கோரியுள்ளனர்.

என் கற்பனையில் உதித்த இந்த கதைக்கு மேற்கூறிய வாசகத்தில் இருந்த ஸ்தோத்திரியத்தை பயன்படுத்திக்கொண்டேன். கதைக்கு சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காகவே இதுபோன்ற தனிமம் இருப்பதாக கூறியிருக்கிறேன் உண்மையில் அப்படி ஒரு தனிமம் உள்ளதா என்றாள் அது கேள்விக்குறியே?.

யாழிசைக்கு ஒருவயதாக இருக்கும் போதே அவளின் அம்மா தங்கேஸ்வரி விஷக்காய்ச்சலில் இறந்துபோனார் .யாழிசை அப்பா கணேசபிள்ளையின் தந்தை கணக்கராக இருந்த மேட்டுப்பாளைய ஜமீனின் வாரிசான வானவராயனிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வருகிறார்.

ஜமீனின் வாரிசான வானவராயர் சகவயதுடைய தனது கணக்குப்பிள்ளயான கணேசப்பிள்ளையிடம், முதலாளி தொழிலாளி என்ற உறவைத்தாண்டி நட்பாக பழகிவந்தார். கணேசபிள்ளையோ தன்னுடன் பாரபட்ச்சமின்றி பழகும் வானவராயரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வானவராயருக்கு அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் கல்யாணம் ஆகி மூன்று வருடமாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கணேசபிள்ளையின் அம்மா தனது மருமகள் இறந்ததால் பேத்தியாகிய யாழிசையை வைத்துகொண்டு.... தன மருமகள் இறந்த துக்கச்த்தில் இருந்த மகனை கவனிப்பதற்கும், வீட்டையும், குழந்தை யாழிசையையும் பராமரிக்க முடியாமல் திண்டாடுவதை கண்ட வானவராயரின் மனைவி வெள்ளையம்மாள் யாழிசையை பெரும்பாலும் தனது வீட்டிலேயே வைத்து பராமரிக்க ஆரம்பித்தாள்.

யாழிசையின் அழகும் அன்பும் வானவராயரை கவர்ந்ததால் குழந்தையில்லாத அவரும் அவளை அன்புடன் கவனித்துக்கொண்டார்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்ற பழமொழிக்கு ஏற்ப வெள்ளையம்மாள் வானவராயரின் அன்புக்கு யாழிசையும் அடிமையாகிப்போனாள்.

வெள்ளையம்மாளுக்கு யாழிசைக்கு எட்டு வயதாகும் போதுதான் முதல் குழந்தை பிறந்தது. கல்யாணம் ஆகி பத்துவருடம் கழித்து கருவுற்று மிகவும் கஷ்ட்டப்பட்டு தன் குழந்தையை பெற்றெடுத்த வெள்ளையம்மாள் பிரசவத்திற்குப்பின் ஆரோக்ய குறைவின் காரணமாக அல்லல்பட்டபோது மூன்றாம் வகுப்பு பயிலும் யாழிசை தனது அன்பு அய்யா மற்றும் அம்மா வெள்ளையம்மாளின் புதல்வியாகிய பிருந்தாவிற்கு, தோழி அக்கா தாய் ஆகிய அனைத்துமாகிப்போனாள் யாழிசை.

பிருந்தா வளர வளர அவள் யாழிசையின் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.