(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 19 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் குடுமப்தினரோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும்போதே ராமும் வந்துவிட, அவனிடமும் மைதிலி வரவேற்பு ஏற்பாடுகளைப் பற்றிப் பேசி , அதில் மித்ராவின் யோசனைகளையும் கூறினாள்.

அதை ராம் வியந்து பாராட்ட, மித்ராவிற்கு கூச்சமாக இருந்தாலும் சற்று பெருமையாகவும் உணர்ந்தாள். சாதாரணமாக அவளின் செயல்பாடுகள் சற்று மெதுவாகவே இருக்கும். அதனால் அவளுக்கு பாராட்டு என்பது அதிகம் இருக்காது.

மித்ரா வீட்டினரை பொறுத்தவரை அவள் எது செய்தாலும் அவர்களுக்கு பிடித்தமே. அதனால் சிறப்பாக எதுவும் செய்து பாராட்டு வாங்குவது என்பது எல்லாம் கிடையாது.

அவளின் விருப்பங்கள் கேட்கப்படும், அது நிறைவேற்றியும் கொடுக்கப்படும். ஆனால் அது பாராட்டுக்குரிய அளவில் பேசப்படுமா என்றால் இல்லை தான். அதையும் மீறி ஒரு குட் என்ற பேர் வந்தால் அதில் நிச்சயம் ஷ்யாமின் பங்கு இருக்கும்.

அதனால் பொதுவாக வெளி மனிதர்களிடமிருந்து பாராட்டு அவளுக்கு கிடைத்தது இல்லை. ஆனால் இன்றைய அவளது யோசனைகளை பாராட்டிப் பேசும்போது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நேரத்தில் கௌசல்யா ஷ்யாமிடம்

“ஷ்யாம் மித்ராவ கூட்டிட்டு எங்கியாவது வெளிலே போயிட்டு வாயேன்.” என்று கூறினார்.

ஷ்யாம் யோசனையோடு “இன்னிக்கா ? இன்னொரு நாள் போறேனே பாட்டி? என்று பதிலுக்கு கூற, பாட்டியோ

“டேய், சாதரணமா நீயும் உங்கப்பாவும் சீக்கிரம் வரதே பெரிசு. இதில் நீ ரெண்டு மூணு மாசத்துக்கு அசைய முடியாத அளவு வேலை இருக்குன்னு நேத்தே சொல்லிடீங்க. எப்படியும் நடுராத்திரி பேய், பிசாசு மாதிரி தான் வீட்டுக்கு வருவீங்க. கிடைக்கிற நேரத்தில் போயிட்டு வாடா”

“பாட்டி. ஏன் இப்படி டேமேஜ் செய்துட்டு இருக்கீங்க? இப்போ என்ன வெளியில் போகணும் அவ்வளவுதானே? மித்து “ என்றுவிட்டு , தலையில் கை வைத்தபடி தன் தந்தையை பார்த்தான். அவன் எண்ணியபடி ராம் முறைக்கவும், அசடு வழிந்தபடி

“மித்ரா . நீ போய் ரெடி ஆகிட்டு வா. கிளம்பலாம்” என்றான். அவள் செல்லவும்,

கௌசல்யா மீண்டும் “ஷ்யாம். முதல் முதலில் தம்பதிகளா போறீங்க. அதனால் கோவிலுக்கு போயிட்டு வெளியே சென்று வா” என்று கூறினார்.

“பாட்டி” என்று பல்லைக் கடித்தவன் “இது மட்டும்தானா ? இன்னும் வேறே இருக்கா?” என கேட்டான்.

அதற்குள் அவன் தாத்தா ஜெகநாதனோ “டேய்.. உன் பொண்டாட்டிய தானே கூட்டிய சொல்றா உன் பாட்டி. என்னவோ இந்த கிழவிய கூட்டிட்டு போக சொல்ற மாதிரி மூஞ்சிய வச்சுருக்க” என்று கூற,

பாட்டியோ “என்னது நான் கிழவியா?” என்று சண்டைக்கு வந்தார். அவர்களின் விளையாட்டைப் பார்த்த ஷ்யாம், மாடிப்படியில் அரவம் கேட்க, திரும்பி பார்த்தான்.

மித்ரா வெளியே செல்ல தயாராகி வந்து கொண்டு இருந்தாள். அழகான லெமன் எல்லோ கலர் ஷிபான் புடவையில், தலையை நயன்தாரா ஸ்டைலில் மேலே தூக்கி வாரி, பின்னலை முன்னாடி போட்டு இருந்தாள். முகத்தில் அளவான ஒப்பனை, கழுத்தில் மெல்லிய செயின் உடன் மஞ்சள் குறையா தாலி கயிறும்,  கைகளில் பான்சி பாக் என வர, ஷ்யாம் அப்படியே அசந்து நின்றான்.

அவன் மைன்ட் வாய்ஸ்சில் “டேய் ஷ்யாம், எப்படிடா மித்ராவோட அழகு உன் கண்ணுலே இத்தனை நாள் படவே இல்ல. செம அழகா இருக்காளே” என்று எண்ணியபடி அவளையேப் பார்த்து கொண்டு இருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனின் அருகில் வந்த அவனின் தங்கையோ “பே.” என்று கத்த , சுதாரித்துத் திரும்பியவன் “ஏய் வாலு? எதுக்கு இப்போ கத்தின?” என்று வினவினான்.

“இங்கே கொஞ்ச நேரம் முன்னாடி ஜொள்ளு ஆறு ஒன்னு ஒடிச்சு. அது வெள்ளமா மாறிடக் கூடாதேன்னு டேம் கட்டினேன்” என்று கூறினாள் சுமித்ரா.

“சின்ன புள்ள லட்சணமா பேசு சுமி? இல்ல ரூல்ஸ் கிட்டே மாட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோ “

“ஐயே. அந்த பருப்பு எல்லாம் இனிமே எங்கிட்ட வேகாது அண்ணாத்தே. நீ ரூல்ஸ் கிட்டே சொன்னா, நான் பிக் பாஸ் கிட்டேயே மாட்டி விட்ருவேன் பார்த்துக்கோ “

“அது யாருமா ரூல்ஸ் விட பிக் பாஸ் இங்கே ?

“வேறே யாரு ? என் அண்ணி மிது டார்லிங் தான் “ என்று சுமித்ரா கூற, ஷ்யாமிற்கு புரை ஏறியது

“அவ கிட்டே என்னடி சொல்ல போறே?

“அதான் கஸ்டமர் விசிட்ன்னு பொய் சொல்லிட்டு , அப்போ அப்போ பைக் ரேஸ் போயிட்டு இருக்கியே . அத தான் “

“அடிப்பாவி. இந்த ஸ்பை வேலை எப்போ பார்த்த நீ ? உனக்கு யாரு இந்த இன்போர்மேஷன் எல்லாம் கொடுக்கிறா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.