(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் தன் அறைக்குச் சென்ற போது மித்ரா உறங்கி இருக்க, அவளையே யோசனையோடு பார்த்தான் ஷ்யாம். சரவணன் அவளைப் பார்த்ததை ஏன் மித்ரா சொல்லவில்லை என்று யோசிக்க, அதைக் கையாண்ட விதம் அவளின் தெளிவைக் கூறியது.

ஆனால் அவன் யோசிக்க மறந்தது யாரோ ஒரு சரவணனுக்காக அவள் எந்த விதத்திலும் பாதிக்கப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் மித்ராவிற்கு நெருங்கியவர்களால் பிரச்சினை அல்லது மனகசப்பு ஏற்பட்டால் அப்போதும் அவளிடம் இந்த திடம், தைரியம் எல்லாம் இருக்குமா என்பதே.

ஷ்யாமின் சிந்தனை அந்தப் பக்கம் செல்லாததால், உறங்கும் மித்ராவின் அருகில் வந்தான். ஷ்யாம் இல்லை என்ற தைரியத்தில் அவள் வின்னியைத் தங்கள் அறைக்குள் கொண்டு வந்து இருக்க, சிரித்துக் கொண்டே அதை அதனிடத்தில் வைத்து விட்டு வந்து படுத்தான்.

மறுநாள் காலையில் மித்ரா எழும்போது , அவள் தலை ஷ்யாமின் தோள்களில் இருக்க, ஷ்யாம் நல்ல தூக்கத்தில் இருந்தான்.

என்னடா இது ? சூரியனுக்கு அலாரம் வச்சி எழுப்பி விடற ஆத்மாக்கள் எல்லாம் தூங்கிட்டு இருக்க, சந்திரனோடு பார்ட்னர்ஷிப் போட்ட நாம இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டோம். இது உண்மையா? என்று மணியைப் பார்க்க அது வழக்கமாக மித்ரா எழும் நேரத்தை தான் காட்டியது.

அதானே பார்த்தேன். நாமளாவது சீக்கிரம் முழிச்சிகிரதவாது. உலகம் அப்படியே மாற்றி சுற்ற ஆரம்பிச்சிடாது?

சரி. இன்னைக்கு என்ன நம்ம கடமை கண்ணாயிரம் இன்னும் தூங்கறாரு? என்று நினைத்தாள்.

எத்தனை நேரம் கழித்துப் படுத்தாலும் காலையில் அப்பாவும், பிள்ளையும் ஜாகிங் கிளம்பி விடுவார்கள். அவர்கள் செல்வதோடு இல்லாமல், மற்றவர்களுக்கு அட்வைஸ் வேறு செய்வார்கள்.

இதைக் கேட்டு அலுத்துப் போய் தான் சுமியும், மித்ராவும் சேர்ந்து இருவருக்கும் வச்ச பேர் தான் கடமை கண்ணாயிரம்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஷ்யாமை டிஸ்டர்ப் செய்யாமல் எழுந்து அவள் காலை வேலைகளை முடித்து வரும்போது, ஷ்யாம் எழுந்து கீழே சென்று இருந்தான்.

மித்ராவும் கீழே இறங்கி வர, ஷ்யாம் மித்ராவிடம்

“குட் மார்னிங் டியர்” என,

“குட் மார்னிங் அத்தான்” என்று பதில் சொன்னாள்.

அன்றைய காலைப் பொழுது எப்போதும் போல் கலகலப்பாகச் செல்ல, எல்லோரும் அவரவர் வேலைகள் பார்க்க கிளம்பினர்.

ஷ்யாம் வந்து

“மித்ரா, நீ இன்னிக்கு டிரைவரோடு போ. அம்மாவோட லாக்கர் வரை போக வேண்டி இருக்கு. நான் அம்மாவை ஆபீசெலே ட்ரோப் பண்றேன். ஒகே வாமா?

என்று கேட்க, மித்ரா, மைதிலி இருவரும் சம்மதித்தனர்.

மித்ரா சென்றவுடன்

“ஏன் ஷ்யாம், லாக்கர் போகணும்னு சொன்ன?

“இல்லைமா நீங்க சொன்னது படிப் பார்த்தா, சரவணன் நீங்க இல்லாதப்போ தான் அவளைப் பார்க்க வரான். சோ உங்களை அல்லது அவளை வாட்ச் பண்ணிட்டு இருக்கான். அது தான் நீங்க இல்லாமல் தனியா போனா அவளைப் பார்க்க வரும்போது, நேற்று மாதிரி நானும் உங்க கூட வரேன். அப்போதான் அவனை நாம கண்காணிக்க ஏற்பாடு செய்ய முடியும்”

“அது சரிப்பா. அவன் இன்னைக்கு உஷார் ஆகி இருக்க மாட்டானா?

“அவன் உஷார் ஆகி இங்கிருந்து கிளம்ப பிளான் செய்து இருப்பான். அதனால் இன்றைக்கு அவளை சந்தித்து விட்டு செல்லக் காத்து இருப்பான். மேலும் நீங்கள் அவனைப் பார்த்து இருக்கிறீர்கள் என்ற போது, மித்ரா வீட்டில் என்ன சொல்லியிருப்பாள் என்று தெரிந்து கொள்ள காத்து இருப்பான். “

“ஹ்ம்ம். நீ சொல்றது சரிதான். நாம எப்போ கிளம்பனும்?

“இப்போவே தான். ஆனால் நாம கம்பனிக்கு நேரடியா போகாமல் கொஞ்சம் தள்ளி நின்னுப் பார்ப்போம். அவனோ , அவன் காரோ நம்ம ஆபீஸ் சென்ற பின், நாம போகலாம்”

“சரிப்பா. வா கிளம்பலாம்”

மித்ரா ஆபீஸ் சென்று சேர்ந்த சில நிமிட இடைவெளியில், ஷ்யாம் அவனின் காரில் ஆபீஸ் விட்டுத் தள்ளி நிறுத்திப் பார்த்து இருந்தான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரக் காத்திருப்பிற்குப் பின் சரவணன் வேறு பக்கத்தில் இருந்து வந்து, வாட்ச் மேனிடம் பேச்சுக் கொடுத்தான். பிறகு உள்ளே சென்றான்.

அங்கே ரிசெப்ஷனிஸ்ட் மித்ராவைச் சந்திக்க வைக்க மறுக்க, அவன் அவளைப் பற்றி ஏதோ சொல்ல வரும்போது, சரியாக ஷ்யாம் உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்த அந்த அலுவலர்கள் அத்தனை பேரும் ஆச்சரியமும், அதே சமயம் அலெர்ட்டும் ஆனார்கள். அந்த அலுவலக நடைமுறைகளில் ராம் தலையீடு இருக்காது. எப்போதாவது மைதிலியை பிக்கப் செய்யவோ, வேறு ஏதாவது அலுவலக வேலையாகவோ வரும்போது உள்ளே வருபவன் கண்கள் எக்ஸ்ரே கண்ணாக அனைத்தையும் நோட்டமிட்டு விடுவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.