(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 16 - லதா சரவணன்

kadhal ilavarasi

ந்தமான் சிறை சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் அடைத்து வைக்கப்பட்ட இடம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் அந்தமானில் கைதிகளாய் விடப்பட்டனர் பலர் வனவிலங்குகளுக்கு பலியாகியும், பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டும் மீதமிருந்த வீரர்கள் இங்கிலாந்திற்கும் அனுப்பப்பட்டனர். அப்போது இங்கே சிறைச்சாலை கிடையாது ஒருமுறை பிரிட்டிஷ் கவர்னர் ஒருவர் சிறைக்கைதிகளை பார்வையிட தன் மனைவியுடன் வந்தபோது, மிகவும் கோபமடைந்த காசிம் என்ற வீரர் அவர் மீது பாய்ந்து கவர்னர் ஜெனரலை கழுத்தை நெறித்துக் கொன்றாராம் அப்போதுதான் இங்கே சிறைச்சாலை கட்டத் துவங்கியது அந்தமான் சிறையைப்பற்றி விளக்கிக்கொண்டே உத்ராவுடன் நடந்தான் பரத் 

மொடமொடப்பான அந்த காட்டன் சேலை அவனோட உரசியபடியே கதை கேட்டு வந்தது. மியான்மரிலிருந்து வரவழைக்கப்பட்ட செங்கல்களால் இப்போது செங்கல் நிறமாக இருக்கிறது இந்தக் கட்டம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இதன் நடுவில் கைதிகள் தப்பிவிடாமல் இருக்கவும்,அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டது. அதில் அபாய மணியும் உண்டு.

ஏழு பக்கப் பகுதிகள் ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்ட படுக்கைகள் அற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது பார், புள்ளிவிவரமாக சொல்லப்போனால் 4.5மீட்டர் அளவும, 2.7 மீட்டர் நீள அகலமும் கொண்டது உயரம் வெறும் 3மீட்டர்தான் இதற்கு காரணமும் ஒருவரையொரும் சந்திக்க இயலாத வகையில் தொடர்பு கொள்ள முடியாத வகையில் அதனால் தான் இதற்கு செல்லூலார் ஜெயில் என்ற பெயர் வந்தது. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒஹோ.....

அசட்டையாய் வந்த அவளின் பதில் கண்டு என்ன உத்ரா சரித்திர புகழ் வாய்ந்த ஒரு இடத்தைப்பற்றி அக்குவேறாக ஆணிவேறாக சொல்லிக்கொண்டு வருகிறேன் அசட்டையாக உம் என்கிறாயே ? வந்ததில் இருந்தே நீ சரியில்லை என்னாயிற்கு உத்ரா, பத்மினியின் விஷயம் தான் உனக்கு நெருடல் என்றால் நாம் திரும்பியதும் உடனே அவளிடம் மன்னிப்பும் கேட்டு விடலாம் 

எந்த தவறையும் செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா பரத் ?! நம்பிக்கைப் பொய்க்கும் போது அந்த கவர்னரைக் கொன்றவனின் மனநிலை எல்லாருக்கும் வருவது இயல்புதானே ?

கொலை செய்யும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் உன் நம்பிக்கையைப் பெற நான் மீண்டும் மீண்டும் முயற்சித்து தோல்விதான் அடைகிறேன் உத்ரா.

பரத்தின் குரலில் ஒளிந்திருந்தது என்ன உணர்வு என்று இனம் காண முடியவில்லை, என்னவாக இருந்தாலும் பரத்திடம் எல்லாவற்றையும் உடைத்து பேசிடவேண்டும் என்ற முடிவில் நீரஜாவைப் பற்றிய பேச்சைத் துவங்கினாள் உத்ரா.

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இ.க.க கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருடன் பதினைந்து பேர் சேர்ந்து பயணப்பட்ட விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தொழில் நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்க முடியாமல் கடலுக்குள் விழுந்தது. சென்றவாரம் இதே போல் கோளாறோடு மும்பை விமானமும் எந்த வித சேதாரமும் இன்றி தரையிறக்கப்பட்ட நிலையில் விமானத்துறையினரின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்கள் கட்சி பிரமுகருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்டுத் தர உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் இ.க.க கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் அந்த நேரடிக் காட்சிகள் இதோ.....

எங்க தலைவருக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா அவ்வளதோன்....

கிளம்பிற வண்டி நல்லாயிருக்கா இல்லையான்னு கூட செக் பண்ணிப் பார்க்க துப்பில்லாதவங்களா நீங்க மத்தவங்க உயிரு உங்களுக்கு அத்தனை இளப்பமா போச்சு, எதில் தான் அலட்சியமின்று ஒரு விவஸ்தை வேண்டாம்...

ஆளாளுக்கு பேச ஊடகங்களுக்கு மற்றொரு ஹாட் நியூஸ்...... 

இந்த விபத்துக்கு காரணம் என்னவா இருக்குமின்னு நினைக்கிறீங்க எதிர்ப்பட்ட அதிகாரியிடம் எல்லா டிவி சேனல்களும் மைக்கைக் கொண்டு வந்து நீட்டினர்.

விமானம் கிளம்பும் வரையில் நல்ல கண்டிஷன்ல தான் இருந்தது. அட்மினரல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தைப் பற்றிய தகவல்களும் நன்றாகத்தான் வந்திருக்கிறது. வானத்தில் ஏதோ பறவை மோதிய காரணமாத்தான் விமானி தன் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார். கடலில் அடி ஆழத்தில் அதாவது 7000மீட்டர் ஆழத்தில் அந்த விமானம் விழுந்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. 

அப்போ அதில் பயணித்த தலைவரும் மற்றவர்களும்.

இது ஒரு உயர்ரக விமானம் நிறைய பாதுகாப்புகள் இருக்கு கடலில் விழுந்த விமானத்தை தேடி ஸ்பெஷல் டீம் ஒன்றும் போறாங்க. இன்னும் ஒரு மணிநேரத்தில் அவங்க தன்னோட கப்பலோடு கிளம்பத் தயாரா இருக்காங்க நிச்சயம் நல்ல செய்தி வரும் அதுவரையில் எங்கள் கடமையைச் செய்யவிடுங்க பிரண்ட்ஸ் அந்த உயர் அதிகாரி நகர ஒவ்வொரு டிவி தொகுப்பாளர்களும் தங்கள் ஸ்டைலில் மக்களோடு பேசத் தொடங்கினார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.