(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 33 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் அன்று இரவு தன் அறைக்குள் வரும்போது, மித்ரா அவளின் வின்னியோடு படுத்து இருப்பதைப் பார்த்து

“அடக் கடவுளே.. ஆ ஊ ன்னா .. இப்படி பொம்மையைக் கட்டிக்கிட்டுத் தூங்கறாளே. நான் ஒருத்தன் புருஷன்னு இருக்கறதே இவளுக்கு மறந்து போயிடுது.. டேய் ஷ்யாமா.. இந்த அமுல் பேபிய உன்னைக் கவனிக்க வைக்கறதுக்குள்ளே உனக்கு சஷ்டியப்த பூர்தியே நடக்கும் போலவே. ம்ஹூம். நீ ரூட்ட மாத்து. இனிமேல் அவளை உன்னைத் தவிர வேறே எதையும் நினைக்க முடியாத அளவிற்கு பண்ணு” என்று தனக்குதானே பேசிக் கொண்டபடி அவளிடமிருந்து வின்னியை எடுத்துவிட்டு, நேராகப் படுக்க வைத்து, தானும் அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

மறுநாள் வழக்கமான முறையில் அவர்களின் காலைப் பொழுது தொடங்க, ஷ்யாம் குளிக்கப் போன பின், அவனுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மித்ரா, ஷ்யாமின் வரவைக் கவனிக்கவில்லை.

அவளின் அருகில் வந்தவன், சட்டென்று அவளை அணைக்க, திகைத்து அலறப் போனாள் மித்ரா. அவள் அலறுவதற்குள் அவள் வாயை மூடிய ஷ்யாம்,

“மித்து டார்லிங், நம்ம ரூமுக்குள்ளே என்னைத் தவிர யாரு வருவா? வொய் திஸ் ஜெர்கிங் ?”

“ஊப்ஸ். அதுக்குன்னு இப்படி திடீர்ன்னு பண்ணுவீங்களா ஷ்யாம்?

அவளின் ஷ்யாம் என்ற அழைப்பில் அவனின் கண்கள் பளிச்சிட்டது. ஆனால் மித்ராவே அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பதால் அதைக் கண்டுக் கொள்ளாதது போல் விட்டான்.

“சாரி மித்து” என்றவன் “மித்து, இப்போ நான் உன்னைக் கிஸ் பண்ணப் போறேன்” என,  மித்ரா திடுக்கிட்டு விழித்தாள்.

“என்ன உளர்றீங்க அத்தான்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீதானே கேட்டே திடீர்னு பண்ணுவீங்களான்னு? இப்போ உன்கிட்ட சொல்லிட்டு செய்யறேன். “ என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அதை எதிர்பார்க்காத மித்ரா, அப்படியே ப்ரீஸ் ஆகி நின்றாள். அவளின் நிலையைப் பார்த்த ஷ்யாம், சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் தட்ட, சுதாரித்து ஷ்யாமைப் பார்த்தாள்.

அவனோ கண்ணாடி முன் நின்று இருந்தான். மித்ராவிற்கு ஒரே குழப்பமாகி விட்டது. இப்போ ஷ்யாம் தன்னை முத்தமிட்டானா, இல்லையா என்று.  அவனிடம் கேட்க வாயைத் திறந்தவள், வெட்கத்தில் மூடிக் கொண்டாள்.

இருவரும் கீழே சென்ற போது, சுமித்ரா அவள் அன்னையோடு வம்பிழுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்து இருந்தாள். அவளின் டாக்டர் கோட்டைப் பார்த்ததும் மித்ராவிற்கு முதல் நாள் எடுத்த அந்த ரிப்போர்ட் நினைவு வந்தது.

அதைப் பற்றி யாரிடம் கேட்க, என்னவென்று கேட்க என்று அவளுக்குப் புரியவில்லை.

அது ஒரு சாதாரண ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்தான் என்பதால், இதை எந்த அளவிற்கு சீரியஸ் ஆக எடுக்க என்றும் தெரியவில்லை.

அவள் டாக்டரிடம் செல்லும் போது ஷ்யாம் கேட்டுக் கொண்டு இருந்த கேள்விகள் ஒருபக்கம் சரி என்றாலும், இன்னொரு பக்கம் தவறு போலவும் தோன்றியது.

மித்ராவைப் பொறுத்தவரை படிப்பு முடிந்ததும் திருமணம் என்றதால், அவளுக்கு தன் வாழ்க்கைப் பற்றிய பெரியதான கற்பனைகள் எதுவும் இல்லை. அதிலும் சரவணனோடு திருமணம் நின்று ஷ்யாமை மணந்தது தான் தெரிந்த, பாதுகாப்பான இடத்தில் சேர்ந்து விட்டோம் என்ற எண்ணமே.

உறவு என்பதாலும், ராம் மைதிலியின் குணத்தாலும், அவளுக்கு அவர்களை எப்போதுமே பிடிக்கும். அதனால் அவளுக்கு அது தன் வீட்டைப் போல் தான் தோன்றியது. சுமியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சைந்தவியும், சுமியும் ஆருயிர்த் தோழிகள். எனவே தயக்கம் இருந்தாலும் பயம் என்ற ஒன்று இல்லாமல் தான் தன் புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்.

ஷ்யாமின் புரிதலான தன்மையில் அந்த வீட்டின் பழக்கங்களோடு ஒன்றியும் விட்டாள். ஷ்யாம் ரேஸ்சில் கலந்து கொண்டு அடிபடவும் மித்ரா தவித்து விட்டாள். அப்போதுதான் ஷ்யாம் மீது தனக்குள்ள அன்பு, பாசம் இவை எல்லாம் புரிந்து கொண்டாள்.

அப்போது ஷ்யாமிற்கு உதவியாக இருந்ததில் தன் உரிமை பற்றியும் உணர்ந்தாள். அதற்குப் பின் ஷ்யாமை அவ்வப்போது ரசிப்பாள். அது அவளே அறியாமல் செய்வது.

சரவணன் வந்து அவளை ஏதோ ஏதோ சொல்லி பிரைன் வாஷ் செய்த போதும் அவனைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தன் அத்தான் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அதை விட அதிகமாக காதல் இருந்தது.

ஆனால் ஷ்யாமே டாக்டரிடம் கேட்கவும், அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒருவேளை டாக்டர் என் பிள்ளைகளுக்கும் என்னைப் போன்ற டிசெபிளிடி இருக்கும் என்றால், அத்தான் என்னை விட்டு விடுவாரா? என்ற எண்ணமே பயத்தைக் கொடுத்தது.

அப்படி இல்லை என்றாலும், ஷ்யாமிற்குத் தன் மேல் உள்ள அன்பு குறைந்து விடுமோ என்று நினைவு வேதனையைக் கொடுத்தது.

மித்ரா ஒன்றை உணர மறந்தாள். இதுநாள் வரை தன் கல்யாண வாழ்வின் அடுத்தக் கட்டமான தாம்பத்தியத்தைப் பற்றியோ, பிள்ளைப் பேறுப் பற்றியோ எந்த எண்ணமும் கொள்ளதவாளுக்கு, இப்போது ஏன் இந்த சந்தேகம் தோன்றியது என்பதுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.