(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

யாரோ யாரோ நான் யாரோ ?

உன்னை விட்டு நான் வேறோ ?

தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

 

காற்றே காற்றே சொல்வாயோ !

காலம் தாண்டி செல்வாயோ !

கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

 

இது கனவா கனவா ?

இல்லை நெனவா நெனவா ?

இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

 

இது நிழலா நிழலா ?

இல்லை ஒளியா ஒளியா ?

இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

திகாலையிலேயே விழித்தவள் ஒருவித மகிழ்ச்சியோடு ஹாலுக்கும் ரூமிற்குமாய் சுற்றிக் கொண்டிருந்தாள்.

கண்விழித்தவன் தன்முன் சிறுபிள்ளையாய் சுற்றித் திரிபவளை பார்த்து புன்னகைத்தவாறே எழுந்தமர்ந்தான்.

“கண்ணம்மா இங்க வாயேன்.”

அத்தனை நாள் இருந்த கலக்கம்கூட சற்று பின் சென்றதாய் தோன்றியது வெண்பாவிற்கு.

“சொல்லு திவா..ஏன் சீக்கிரமே எழுந்துட்ட?”

அவளின் இந்த ஒருமை அழைப்பே அவளின் மகிழ்ச்சியை அவனுக்கு தெரிவித்தது.மிகுந்த மகிழ்ச்சியிலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டாலோ அன்றி அப்படி அழைக்கமாட்டாள்.

“ரொம்ப அழகா இருக்க டா கண்ணம்மா இன்னைக்கு..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்போ இத்தனை நாள் மோசமா இருந்தேனா..”,வாய் இப்படி கேட்டாலும் விழியும் முகமும் அவனின் அந்த பாராட்டுக்கு சிவந்து குழைந்துதான் போனது.

“இதுக்கான பதில் உனக்கே தெரியும்னு உன் கண்ணே சொல்லுதே கண்ணம்மா..”ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிதானமாய் கூறியவாறே விழியால் பருகிக் கொண்டிருந்தான்.

“திவா..”,என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள ஈர முடிக்கற்றையும் அவளது வாசனையும் இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள தூண்டிவிட அப்படியே தன்னோடு இழுத்து சாய்த்துக் கொண்டான்.

“மிஸ் யூ சோ மச் டா..நமக்கான நேரமே இல்லாத மாதிரி இருக்கு பேசாம காலேஜ்க்கு வரலனு சொல்ல போறேன்.உன்னை இப்போ இப்படி பாக்கும் போதுதான் இத்தனை நாள் நீ நீயா இல்லைங்கிறது ரொம்ப உறுத்துது..சாரிடா கண்ணம்மா..”

“திவா என்ன இது இப்படியெல்லாம் பேசுறீங்க..வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும் அதுக்காகவெல்லாம் பீல் பண்ணலாமா..அதுவும் உங்களோடது சாதாரண வேலைனு சொல்லி விட்ற விஷயமா?கடமையும் பொறுப்பும்..அதனால இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க..”என்றவள் அவன் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொள்ள இறுக அணைத்து விடுவித்தவன் என்ன தோன்றியதோ சட்டென அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.

“என்னாச்சு திவா?எதாவது ப்ராப்ளமா?நீங்க இப்படியெல்லாம் இருந்து நா பார்த்ததேயில்லையே..”

“தெரில கண்ணம்மா..மனசு ஒரு மாதிரி சஞ்சலமாவே இருக்கு..எதோ நீ என்னை விட்டு தூரமா போயிட்ட மாதிரி ஒரு பீல்..”,என இன்னுமாய் அவள் இடுப்பை வளைத்துப் படுத்துக் கொண்டான்.

“என்ன டாக்டரே மாமியார் வர்றதுக்குள்ளயே இப்படி பீல் பண்ணா அவங்க வந்து என்னை சாதாரணமா கொஞ்சினா கூட அவ்வளவுதான் போலேயே!”,என விளையாட்டாய் கூறினாலும் அவன் தலைகோத மறக்கவில்லை.

சில நிமிடங்களில் தானாகவே எழுந்தவன் முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அவளிடம்,”நீ போய் வேலையை பாருடா கண்ணம்மா..நா மாமியார் வர்றதுக்குள்ள ரெடியாய்ட்டு வரேன்.பர்ஸ்ட் இம்ப்ரஷன் ரொம்பவே முக்கியம் இல்லையா..”,கன்னம் கிள்ளி தோள்தட்டி அனுப்பி வைத்தான்.

எட்டரை மணியளவில் திவா காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்ந்திருக்க சிந்தாம்மா கொண்டு வந்து வைத்த உணவை வெண்பா பரிமாறிக் கொண்டிருந்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மூவருமாய் வீட்டிலிருக்க ஏதோ பேசிச் சிரித்தப்படி உணவருந்த ஆரம்பித்திருந்தான் திவ்யாந்த்.சரியாய் அந்த நேரம் அழைப்பு மணி ஒலிக்க மூவருமாய் வாசலைப் பார்த்தனர். ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஆடம்பரத்தோடு ஆணவமாய் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க நின்றிருக்க வெண்பா தான் வாசலை நோக்கி ஓடினாள்.

“ம்மா…”

“ஹாய் வெண்பா டார்லிங்..”,என்றவரின் முகத்தில் ஒப்பனைக்கும் புன்னகை என்ற ஒன்றிருக்கவில்லை.அதுவும் இத்தனை வருடம் கழித்து பார்க்கும் மகளை ஆரத்தழுவி சேர்த்துக் கொள்ளும் எண்ணம் என்ற ஒன்று இல்லவேயில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.