(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா

enathuyire

கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு நல்ல வீடை வாடகைக்கு பாக்கலாம் என்றும்  சீக்கிரமே அன்பு அங்கேயே ஒரு வேலை தேடவும் இருவரும் முடிவு எடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது தூரம் நடந்த பிறகு, ஒரு வீட்டின் முன் போட பட்டிருந்த 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்ற பலகையை பார்த்தவர்கள் அந்த வீட்டின் முன் நின்று கதவை தட்டினர்.

வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஈஸ்வரி,

"யாரு நீங்க? என்ன வேணும்?, என்றார் கணீர் குரலில்.

"அது... வீடு வாடகைக்கு இருக்குனு போர்டு பாத்தோம், அதான்...", அன்பு.

இருவரையும் ஒரு முறை பார்த்த ஈஸ்வரி, தமிழின் கழுத்தில் இருந்த புது தாலியையும் அழுது வடிந்த முகத்தையும் பார்த்தவர், " வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?", என்றார்.

"ம்...", அன்பு.

'உங்க பேரு?", ஈஸ்வரி.

“என் பேரு அன்பு, இது என் மனைவி தமிழ்.”

"எங்க வேல பாக்குற தம்பி?", ஈஸ்வரி.

"அது வந்து... இது எங்களுக்கு புது இடம், இனிமே தான் வேல தேடணும், இப்போதைக்கு கைல கொஞ்சம் பணம் இருக்கு, அத முன் பணமா வச்சிக்கிட்டு வீடு குடுத்தீங்கனா, சீக்கிரமே நா ஒரு நல்ல வேலைல கண்டிப்பா சேந்துடுவேன்", அன்பு.

இதோ பாரு அன்பு, எனக்கு மனசுல ஒன்னு வச்சிட்டு வெளிய ஒன்னு பேச தெரியாது. நீங்க வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க இதனால வேற எதாவது பிரச்சன வருமா னு கவல படர  ஆள் நா இல்ல.ஆனா, எனக்கு மாச மாசம் வாடகை கரெக்ட்ட வந்துடனும். நீ இனிமே தான் வேல தேடணும்னு சொல்ற, இங்க இருக்கவனுக்கே வேல கிடைக்க கஷ்டமா இருக்கு இதுல நீ இனிமே தான் வேல தேடணும்னு சொல்ற. இன்னைக்கு பாவம்னு வீடு குடுத்துவேன், அப்பறம் அடுத்த மாசம் வந்து கஷ்டமா இருக்கு அடுத்த மாசம் வாடகையை சேத்து குடுத்துட்றேன்னு சொல்லுவ இதுல சரியா வராது பா...", என்றார்.

" ஈஸ்..." என்று உள்ளே இருந்து குரல் வரவும்

"தோ வந்துட்டேன்யா..." என்று கடுகடுத்து கொண்டே உள்ளே சென்றார் ஈஸ்வரி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்ன செய்வதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அங்கு இருந்து நகர்ந்தனர் இருவரும்.

திடிரென்று, "அன்பு" என்ற குரலில் நின்ற இருவரும் குரல் வரும் திசையை நோக்கி பார்த்தனர், ஈஸ்வரியின் பக்கத்து வீட்டு தின்னையில் ஒரு வயதானவர் கையில் செய்தி தாளுடன் அமர்ந்து இருந்தார். அவர்களை பார்த்து புன்னகைத்துக்கொண்டே,

"இங்க வாங்க..." என்றார்.

இருவரும் அவரிடம் சென்றனர்.

"என் பேரு குருமூர்த்தி, இங்க அரசு பள்ளில தமிழ் ஆசிரியரா இருந்து retired ஆகிட்டேன்.  இது என் மனைவி கஸ்தூரி" என்றார்.

அவர் கை காட்டிய திசையை பார்த்தவர்கள் உள்ளே இருந்து ஒரு அம்மா சிரித்த முகத்துடன் கையில் தண்ணீர் செம்புடன் வெளியே வருவதை பார்த்தனர். அவரை எங்கோ பார்த்தது  போல் தோன்றியது இருவருக்கும்.

அவர்களை பார்த்த குருமூர்த்தி, "இவ காலைல உங்கள கோவில்ல பாத்ததா சொன்ன அதான் நீங்க ஈஸ்வரி கிட்ட பேசிட்டு இருந்தத நாங்க கேட்டோம்", என்றார்.

அப்போது தான் இருவருக்கும் கோவிலில் தங்களுக்கு பூ கொடுத்தது இங்கு நிற்கும் கஸ்தூரி பாட்டி என்று நினைவிற்கு வந்தது.  

"இந்தாங்க தண்ணி குடிங்க", பாட்டி

தண்ணீர் பருகிய இருவரையும் பார்த்த கஸ்தூரி பாட்டி, "உக்காருங்க", என்றார்.

அன்பு அருகில் உள்ள திண்ணையில் அமர, தமிழ் மட்டும் நின்று கொண்டே இருந்தாள். இதனை கவனித்த பாட்டி, "நீயும் உக்காருமா", என்றார்.

"இல்ல பரவால்ல பாட்டி", தமிழ்.

"உன் முகத்துலே தெரியுது நீ ரொம்ப களைப்பா இருக்கன்னு உக்காருமா", குருமூர்த்தி.

"உக்காரு தமிழ்", என்று அன்புவும் கூற அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள். 

"சாப்டீங்களா ரெண்டு பேரும்?",   குருமூர்த்தி.

வீடு தேடியதில் நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை, இதில் காலை உணவை மறந்தே விட்டனர். கோவிலில் கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டதோடு சரி. உண்ணவில்லை என்று கூறி அவர்களுக்கு சிரமம் குடுக்க விரும்பாதவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு,

"சாப்ட்டோம் ஐயா ", என்றான் அன்பு.

அவர்கள் பதில் கூறிய விதத்திலேயே அவரகள் இன்னும் உண்ணவில்லை என்று புரிந்து கொண்ட குருமூர்த்தி தன் மனைவியை பார்த்து கண் அசைத்தார். அவரும் அதை புரிந்து கொண்டு உள்ளே சென்று அவர்களுக்கு உணவு தயாரிக்க தொடங்கினார். அதே நேரம், குருமூர்த்தி தாத்தாவோ அவர்களோடு உரையாடி கொண்டுஇருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.