(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - தாரிகை - 18 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

ரணின் நடையில் நிதினின் சுற்றம் ஒருநொடி ப்ரீஸாகிட.. என்ன நடக்கிறதென்றே புரிந்திடமுடியவில்லை அவனுக்கு..

“இவன் என்ன லூசு மாதிரி நடக்கறான்..??”, இப்படித்தான் யோசிக்கத்தோன்றியது அவனுக்கு..

“ஒருவேளை யாரையாவது இமிட்டேட் செய்கிறானோ..??”, எண்ணம் தோன்ற.. வேகமாய் படிகளைக் கடந்தவன் தரணுக்கு முன்னால் யாராவது செல்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய..

மெது மெதுவாய் படிகளைக் கடந்துகொண்டிருந்தாள் ஒருத்தி..

நிச்சயமானது நிதினுக்கு..!!

அந்தப் பெண்ணை இவன் இமிட்டேட் செய்கிறான் என்று..

“இவன் இப்படியெல்லாம் செய்யமாட்டானே..??”, அப்படியொரு குழப்பம்..

தரணின் நல்லொழுக்கங்கள் அறிந்த எதிரி அல்லவா நிதின்..??

சட்டென்று அவனைப் பற்றி தவறாக சிந்திக்கத்தோன்றவில்லை..

“அவன் என்ன செய்தால் என்ன..?? இப்பொழுது இவனை அந்தப் பெண்ணிடம் மாட்டிவிட்டால்..??”

“மாட்டிவிட்டால் என்னாகும்..?? ம்..ம்.. கண்டிப்பாக அதற்குள் தனது செயலை தரண் மாற்றிவிடுவான்.. பிறகு நான்தான் ஜோக்கராக வேண்டும்..”

கேள்வியும் நிதினே..!! பதிலும் நிதினே..!!

மௌனமாகவே தரணைத் தொடர்ந்திருந்தான் நிதின்..!!

எக்ஸாம் ஹாலிலும் அதே நிலைதான்..!!

தரண் நிதினின் பார்வை வட்டத்திற்குள்..!!

சக்ர வியூகமோ..??

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரத்வாஜிற்கு என்னவோ தவறாக நடக்கப்போகிறதென மனது அடித்துச்சொல்லிக்கொண்டிருந்தது..

அதுவும் அதற்கு காரணக்கர்த்தா தரணாவான் என்பது அத்தனை நிச்சயம்..!!

அந்த சிட்டுவேஷன் வெளியே வெளிக்காட்டிட முடியா பிரஷரைக் கொடுக்க.. செய்யும் அத்தனையிலும் கவணக்குறைவு..

பால்க்கறக்க ஆட்டுத்தொட்டிக்கும்.. தட்டுவைக்க வீட்டிற்குமென அவர் செயல்கள் அனைத்திலும் சொதப்பல்..

யோசிக்கும் திறன் அனைத்தும் இழந்தவர்போல் ஒரு இயலாமையில் அவர் அலைந்துகொண்டிருந்தார்..

நேரடியாகவே, “உனக்கு என்னத்தான்டா பிரச்சனை..??”, என்று தரணிடம் கேட்டிடலாம்தான்..

ஆனால் அக்கேள்விக்கு அவனது ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்று அவரால் யூகித்திட முடியவில்லை..

ஒருவேளை வீட்டைவிட்டு போய்விட்டால் என்ன செய்வதென்ற பயம்..

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் தனது மனைவி..??

கண்டிப்பாக தாங்கிக்கொள்வதென்பது அத்தனை எளிதல்ல..

சும்மாவா..??

திருமணம் முடிந்து ஆறேழு வருடங்களுக்குப் பிறகு கோவில் கோவிலாக சென்றதில் அவர்களுக்கு கிடைத்த வரம் அவன்..

ஏற்றுக்கொள்ளவே மாட்டாள் அவள்..

ஏதாவது மருத்துவமனை கோவில் என அவனை அழைத்துச்சென்று மொத்தமாகப் பிரித்துவிடப்போகிறாள்..

கலக்கம்.. கலக்கம்.. அது மட்டுமே அவரிடம்..

யாரிடமும் எதையும் பகிர முடியவில்லை..

பகிரக்கூடிய விஷயமா இது..??

உற்ற நண்பாயினும் எனது மகன் இப்படி என்று சொன்னால் கேலி செய்தே ஒருவழியாக்கிவிடுவார்கள்..

தன்னை பாதித்தால் கூட தாங்கிக்கொள்வேன்..

ஆனால்.. தரண்..??

ஏப்படி எடுத்துக்கொள்வான் அதை..??

கண்டிப்பாக அவன் வெளியுலகை சந்திக்கவேண்டும் என்றால் இவை அனைத்தையும் சஹித்துக்கொண்டு எதிர்கொண்டுதானாக வேண்டும்..

நிச்சயமாக எதிர்கொள்வான்.. எதிர்கொள்ளவைப்பேன்..

கைக்குள் அவனைப் பிடித்து அடைத்துவிடக்கூடாது..

உயரமாய் அவனைப்பறக்கவைக்க வேண்டும்.. ஒரு கழுகைப்போல்.. ஆகாயத்தின் ராஜாவாக..

அதற்கு அவனைத் தயார் செய்யவேண்டும்.. அதுவும் விரைந்து..

பரத்வாஜ் அடுத்த எப்படி அவனை செதுக்கவேண்டுமென்று திட்டமிடத்துவங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.